ஒரு கிழ(ள)வனின் திருமண கதை!
வயது மூப்பின் காரணமாக ஒரு புறம் உடல் உபாதைகள் இருந்தாலும், மறுபுரம் இந்த சமூகம், மறுமலர்ச்சி பெற வேண்டும் என்ற பெரும்வேட்கை அவரை ஏதோ உள்ளுக்குள் அரித்து கொண்டே இருந்தது.... காலம், காலமாக கடவுளின் பெயரால் ஒரு பிரிவினர்.. வேதம், யாகம் என மக்களுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தி, நம்பிக்கையை உருவாக்கி பொருள் ஈட்டும் முறையையும், அதை அறியாத மக்கள் முட்டாளாக்கப்படுவதையும் நினைத்து, நினைத்து வருந்தினார்.. இவர்களுக்கு விழிப்பு வந்துவிட்டால் அடுத்த தலைமுறையே மாறிவிடும் என்ற நம்பிக்கையில் உறுதியாக இருந்தார். மறுபுரம் மனைவியை இழந்த நிலையில் ஆதரவின்றி இந்த போராட்டத்தை யார் எடுத்து செல்வார்கள் என்ற கவலையும் மிகவும் வாட்டியது...தான் நம்பும் அளவிற்கு சரியான நபர் கழகத்தில் இல்லை என்பதை தெளிவாகவே உணர்ந்திருந்தார் அந்த கிழவன்... தான் கொண்ட கவலையை வெளியே கூறமுடியாமல் உள்ளுக்கு புழுங்கிய கிழவன் செய்வதறியாது திகைத்தார். அன்று ஒரு நாள் மாலை நேரம்,..சூரியன் மறைந்து, இருள் தன் போர்வையை புவிமீது போர்த்திக்கொண்டிருக்கும் தருணத்தில் எஞ்சிய பறவைகள் தன் கூட்டை நோக்கிச் செல்வதையும், அவை கீச்,கீச் என்று கூவும் சத்தமும்