ஒரு கிழ(ள)வனின் திருமண கதை!
வயது மூப்பின் காரணமாக ஒரு புறம் உடல் உபாதைகள் இருந்தாலும், மறுபுரம் இந்த சமூகம், மறுமலர்ச்சி பெற வேண்டும் என்ற பெரும்வேட்கை அவரை ஏதோ உள்ளுக்குள் அரித்து கொண்டே இருந்தது.... காலம், காலமாக கடவுளின் பெயரால் ஒரு பிரிவினர்.. வேதம், யாகம் என மக்களுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தி, நம்பிக்கையை உருவாக்கி பொருள் ஈட்டும் முறையையும், அதை அறியாத மக்கள் முட்டாளாக்கப்படுவதையும் நினைத்து, நினைத்து வருந்தினார்..
இவர்களுக்கு விழிப்பு வந்துவிட்டால் அடுத்த தலைமுறையே மாறிவிடும் என்ற நம்பிக்கையில் உறுதியாக இருந்தார். மறுபுரம் மனைவியை இழந்த நிலையில் ஆதரவின்றி இந்த போராட்டத்தை யார் எடுத்து செல்வார்கள் என்ற கவலையும் மிகவும் வாட்டியது...தான் நம்பும் அளவிற்கு சரியான நபர் கழகத்தில் இல்லை என்பதை தெளிவாகவே உணர்ந்திருந்தார் அந்த கிழவன்...
தான் கொண்ட கவலையை வெளியே கூறமுடியாமல் உள்ளுக்கு புழுங்கிய கிழவன் செய்வதறியாது திகைத்தார். அன்று ஒரு நாள் மாலை நேரம்,..சூரியன் மறைந்து, இருள் தன் போர்வையை புவிமீது போர்த்திக்கொண்டிருக்கும் தருணத்தில் எஞ்சிய பறவைகள் தன் கூட்டை நோக்கிச் செல்வதையும், அவை கீச்,கீச் என்று கூவும் சத்தமும், மரங்கள் காற்றோடு முத்தமிட்டு அசைந்தாடும் அழகில் அதைப்பார்த்தப்படி, தென்றல் காற்று முகத்தை வருட அந்த கிழவன் கவலையின் வலியை மறந்து தூங்கிப்போனார்...
சிறிது நேரம் கழித்து அய்யா...அய்யா...என்ற ஒலி தூரத்திலிருந்து கேட்கிறது.... அரைதூக்கத்தில் இருந்த கிழவன் மெல்ல, மெல்ல விழிக்க துவங்குகிறான்.. கண் இமைகள் திறக்க மறுத்தாலும்.. மெல்ல கண்களை திறக்க முயற்சிக்க வெள்ளொளி ஒன்று கண்களை தாக்க அம்மாவின் நினைவுகள் வருகிறது.. அண்ணாந்து பார்க்கிறார் அந்த ஒளி வரும் திசை நோக்கி... ஆம் அந்த ஒளி வேறொன்றுமில்லை அழகிய வெள்ளி நிலா... கூடவே நட்சத்திரங்கள் முடிவே இல்லாத ஆகாசம்...
தூரத்தில் கேட்ட ஒலி கிட்டே நெருங்கி வர உண்மையை உணர்கிறார்.. வந்திருந்த நபர் தன் வளர்ப்பு மகள் ...தன்னை பற்றி முழுதும் தெரிந்து வைத்திருப்பவள்.. மனைவி இறந்த பின் அந்த கிழவனுக்கு அவளே ஆறுதல்... தன் சொந்த மகளாக இல்லாவிட்டாலும், சொந்த மகளை தாண்டிய ஒருபாசம் வைத்திருந்தார். அப்போது வயது அவருக்கு 70க்கு மேல் இருக்கும்.. அவளுக்கோ 30 தாண்டி இருக்கும்.. தான் திருமணம் ஆகி போய் விட்டால் தன் அப்பனை கவணிக்க யாரும் இருக்க மாட்டார்கள் என்ற பயத்தில் திருமணத்தை தள்ளிப்போட்டு வந்தாள்.....
சாப்பிட அழைப்பதற்காக வந்த அவள் அப்பாவின் முகத்தை பார்த்து பதைபதைத்து போனால்...
அவளுக்கு அப்பாவின் அனைத்து நோக்கங்களும், கழகத்தின் செயல்பாடுகளும் நன்றாகவேத் தெரியும்.. ஏன் அய்யா...! என்னாச்சு என்றால்.. தொண்டையில் எச்சி விழுங்கிய நிலையில் வார்த்தை வெளியே வர தடுமாறினார்,... கிழவன்.
பின் தன்னை திடப்படுத்தி கொண்டு விசயத்தை கூற ஆரம்பித்தார்..
நான் தற்போது ஆரம்பித்திருக்கின்ற இந்த இயக்கத்தை வரும் காலத்தில் மதத்தை வைத்து அரசியல் செய்கின்ற அரசியல் வாதிகள் சுலபாகமாக உடைத்து விடுவார்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும்... ஆனால் இங்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணம் கடவுள்தான் என்று சொல்லும் இந்த மூடர்கள் கூறக்கூடிய கடவுளைத்தான் நான் இல்லை என்று சொன்னேன்.. அப்படி ஒருகடவுள் இருந்தால் அந்த கடவுளையும் எதிர்ப்பேன் என்று கூறினேன்...
என்னுடைய அறிவார்ந்த கேள்வியை அனைவரும் ஏற்றுக்கொள்ளவே வேண்டும் என்று நான் கூறவில்லை... என் மீது தவறு இருந்தால் நீங்களும் என்னை விமர்சனம் செய்யும் உரிமை உண்டு என்றுதான் கூறினேன்... என்னுடைய கருத்துகளை தொடர்ந்து சமூகத்தில் முன்னெடுக்க தற்போது கழக்த்தில் நம்பிக்கைகுறிய ஆள் இல்லை என்று நினைக்கும்போது மனம் ஏனோ பரிதவிக்கிறது.. செய்வதறியாது திகைக்கிறது என்று கூறி முடித்தார்...
சரி வாருங்கள் அய்யா சாப்பிடலாம் என்று மகள் அழைக்க இருவரும் இரவு உணவு உண்கின்றனர்...பின்......
நம் மனித சமூக வரலாற்றில் மிகப்பெரிய மாற்றங்களை(மறுமலர்ச்சி) உற்று நோக்கினால் அதற்கு காரணகர்த்தா பெண்களாகவே இருப்பார்கள்... ஆணாதிக்க சமூகத்தில் அவை மறைக்கப்பட்டு அதற்கு புனிதம் கற்பித்தும் உலாவ விட்டிருப்பார்கள்...
அந்த வரிசையில் கிழவனின் மகள் அய்யா நான் ஒரு யோசனை சொல்லவா என்று கேட்கிறாள்...
ம்ம்...என்று கிழவன் தலையை அசைக்க யோசனையை கேட்டு திகைத்து போயி மவுனத்தில் ஆழ்கிறார்... ஏற்கனவே ஈட்டி பாய்ந்த இதயத்தில் ரம்பத்தை வைத்து அறுப்பது போன்ற ஒரு உணர்வு ...என்னதான் சமூக போராட்டம், மறுமலர்ச்சி என்றாலும் அவனும் சாதாரண மனிதன் தானே...அவனுக்கு அன்பின் உணர்வுகள், வலிகள் இல்லாமலா போகும்....
அப்படி என்னதான் யோசனை கூறினாள்... ஆம் அந்த யோசனை இதுதான் ...இந்த சமூகம் மறுமலர்ச்சி பெறும் என்றால் எந்த எல்லைக்கும் செல்ல அவர்கள் (கிழவன் மற்றும் மகள் )தயாராகவே இருந்தார்கள்... கிழவன் மகள் கூறுவதை கேட்க தன் காதுகளை தயார் படுத்தி கொண்டிருந்தான்... அப்போது அவள் கூறினாள் .. அய்யா என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்...... நான் உங்கள் சொந்த மகள் இல்லை... வளர்ப்பு மகள் மட்டுமே எனவே நீங்கள் திருமணம் செய்து கொள்ள சட்ட ரீதியாக எந்த பிரச்சனையும் இல்லை..... என்ன..? வளர்த்த மகளை திருமணம் செய்து கொண்டான் கிழவன் இது முறையா...? இது மனித வளர்ச்சி , நெறிமுறைகளுக்கு எதிராக அமையாதா...?. என்று கேள்வி எழுப்பார்வார்கள்... அவர்கள் கேட்பதும் சரிதான்...
ஆனால் 70 வயதுக்கு மேலாகிய கிழவன் , ஒரு சமூக போராட்டத்தை முன்னெடுப்பவன் இப்படி செய்தால் அவன் தண் உடல்தேவைக்காவோ, தன் சுயத்தேவைக்காவோ(மூப்பின் காரணமாக பராமரிக்க ஓர் ஆள் வேண்டும்) கண்டிப்பாக செய்திருக்க மாட்டான் என்று அறிவார்ந்தர்கள் அறிவர் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றாள்...
மேலும் கூற விளைந்தால்... நம் கொள்கைக்கு எதிரானவர்கள் வரும்காலத்தில் சொந்த மகளையே திருமணம் செய்துகொண்டவன் எவ்வாறு ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்க முடியும் என்று உங்கள் மீது விசத்தை விதைப்பார்கள்... அதைக்கேட்ட இளைஞர்கள் வெகுண்டெழுந்து ஆம் அவர்கள் கூறுவது சரிதான் என்று நீங்கள் கூறிய அனைத்தும் தவறு என்று முயற்சிக்க உங்கள் சித்தாத்தங்களை தேடி, தேடி படிப்பார்கள்.. அப்போது அவர்களுக்கு உங்கள் மீதான தணிப்பட்ட வெறுப்பு இருந்தாலும்... அந்த கிழவன் எழுப்பிய கேள்விகள் அனைத்தும் நியாயமானதே...! அதில் என்ன தவறு இருக்கிறது... என தங்களது பகுத்தறிவை பயன்படுத்துவார்கள்... அப்போது நாம் விரும்பிய மறுமலர்ச்சி ஏற்படும்.... கேள்விகள் பிறக்கும்...அனைத்தையும் தங்கள் அறிவுக்கு உட்படுத்துவார்கள்.. கேள்வி கேட்கத்தொடங்கும் சமூகம் எப்போதும் வளர்ச்சி பாதையை நோக்கியே பயணிக்கும். என்று சொல்லி முடித்தாள்....
அப்போது கிழவன் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு மகளை பார்க்கிறான்.. அவன் கண்களில் அம்மாவாகவே அவள் தெறிகிறாள்....கண்களில் நீர் பெருகி அன்பின் ஊற்றால் கண்ணீராக வழிய... மகளின் கையை இறுகப்பற்றி கொள்கிறான்... கண்னீரை துடைத்தப்படி மகள் ஆறுதல் கூற ஏனோ அவள் கண்களிலும் நீர் பெருக அவன் மடியில் விழுந்து அழுகிறாள் ..பின் அப்படியே அழுகையோடு அழுகையாய் தூங்கிப்போகிறார்கள்...
பின் சிறிது நாட்கள் கழித்து அந்த செய்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வருகிறது.. கிழவன் தண் மகளை திருமணம் செய்துகொள்ளப்போவதாக.....
திருமணமும் நடைபெறுகிறது... பின் அவர்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் ஒவ்வொன்றாக நடக்கிறது... ஒட்டுமொத்த இந்தியாவுமே அறியாமையில் மூழ்கி போனாலும்.. தமிழகம் எனும் ஒருப்பகுதி மட்டும் மணிதத்தோடு சம்மட்டிகொண்டு அடிக்கிறது.. கேள்வி கேட்கிறது....மதத்தை வைத்து அரசியல் செய்தவர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்... என்னதான் கிழவனின் பெயருக்கு களங்கம் கற்பித்தாலும்... அவனது கொள்கைகளை அவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.....
அந்தகிழவனும், மகளும் வேறு யாரும் இல்லை...
அவர்கள்தான்... தந்தை பெரியார்-மணியம்மை அம்மையார்....
அந்த காலகட்டத்தில் அவர்கள் எந்த சூழ்நிலையில் திருமணம் செய்து கொண்டார்கள் என்பது நமக்கு தெரியாது... ஆனால் அவர்களுக்குள் இப்படியும் ஒரு சம்பவம் நடந்திருக்கலாம்.. இல்லாமலும் இருக்கலாம். அவர்களுக்குள்ளும் ஆறாத வலி நிச்சயம் இருந்திருக்கும்..... நாம் ஆராய வேண்டியது தனி மனித வாழ்க்கையை அல்ல... அவர்கள் இந்த சமூகத்தின் மீது எழுப்பிய கேள்விகளையே...!
....நன்றி வணக்கம்....
சமுதாயத் துறையில் அரசியலை மறந்து ஆரியரோடு போர் தொடுத்தால், சமுதாய இழிவு நீங்கிவிடும். பொருளாதாரத் துறையில் அரசியலை மறந்து வடநாட்டாரோடு போர் தொடுத்தால், பொருளாதார சுரண்டல் நீங்கிவிடும்!
( குடி அரசு - 17.02.1945 )
Comments
Post a Comment