இனி தினமும் அந்தாதிதான்
உன்னோடு பயணித்த ஒவ்வொரு மணித்துளியும் மரித்தாலும் மறவாது கண்மணியே! நித்திரையிலும் நினைத்ததில்லை நின் நினைவு தினம் தினம் வாட்டுமென்று! ஆசைத்தீ என்றால் ஆறு மண்டலத்துக்குள் அணைந்து இருக்கக்கூடும்..! இலட்சியத்தீ.... மறையாது, மறைக்காது, மரணிக்காது! என் எச்சத்தின் மிச்சம் இருக்கும் வரை எரிந்து கொண்டே இருக்கும் நரக வேதனைதான்... ஆயினும் பரமசுகம்! கரைகிறேன், உறைகிறேன், பனிக்காடாய் பற்றி எரிகிறேன்... மானங்கெட்ட மனசு மத்தளம் கொட்டுகிறது! மகுடி ஊதிய பாம்பாய் தறிகெட்டு ஆடுகிறது! மனமது வசப்பட்டாள் மகான் ஆகிவிடுவேன்! மனமோ! மாதேவி வசம்... வேறு வழியில்லை சரணாகதி அடைந்து விட்டேன்... இனி தினமும் அந்தாதி தான்...!