கல்யாண அகதிகள்
காணும் முகமெல்லாம் கல்யாண அகதிகள்.... கருவறையில் காதல் கனி ரசம்.
தெவிட்டாத தேன் அமுதாய் தித்திக்கும் காதல் கவிதைகள்...
பருக ஆளில்லை...
பழரசம் இனி இல்லை....
ஆண், பெண் பேதமின்றி சமரசம் உலாவும் இடம் இதுதான்...இங்கு போட்டி இல்லை! பொறாமை இல்லை! வஞ்சகம் இல்லை..! வாழ்த்தும் மனம் மட்டுமே. ..
இருமனம்! திருமணம்! மனமெங்கும் மகிழ்ச்சியே!
கண்ணோடு கண் பேசும் கரம் நீட்டா...விழி துடைக்கும்! மாதரின் மனக்குமுறல் மன்றாடிக் கிடக்கிறது. இதுவும் அழகுதான்,
கடலுக்கு அடியில் நிலநடுக்கம்!
சுனாமி வராதவரை!
அணுகுண்டின் கதிர்வீச்சுகள் போதும். இன்னொரு சுனாமி வர வேண்டாம்....
வாழட்டும் இன்முகத்தோடு இவ்வையகமே..
சாத்திர சடங்கில்லை...
சம்பிரதாயம் இனி இல்லை...
சகலமும் நான்தான்!
காற்று, நிலம், நீர், ஆகாயம், நெருப்பு என ஐம்பூதமாய் ஆர்பரிக்கின்றேன்...
கண்ணாளனை சேரும் நாள் எந்நாளோ?
Comments
Post a Comment