கனவுகள் மெய்ப்பட வேண்டும்
கார்மேக அருவியில் குளிப்பது , கள்ளுண்ட மயக்கத்தில் கிடப்பது , காதல் போதையில் திரிவது , அவளும், நானும் உரையாடுவது கம்பனை மிஞ்சும் அளவு பாடுவது ! கண்ணதாசனிடம் உரையாடுவது ! ச ங்கம் வைத்து தமிழ் வளர்ப்பது ! அமுதசுரபி என் கையில் கிடைப்பது ! ம ன்னாதி மன்னனாய் மணி முடி ஏற்பது ! அந்நியநாட்டு பெண்ணை மணப்பது ! அள்ள அள்ள குறையாத தமிழ் என்னோடு கொஞ்சி விளையாடுவது! மாபெரும் சமூக புரட்சியாளனாய் வலம் வருவது ! இசை அரசன் இலங்கேஸ்வரனாய் பாடுவது ! பறவையாய் பறப்பது ... பரமனை தரிசிப்பது ! உள்ளம் கரைந்து ஊன் உருகி சிவ பாதம் சேர்வது .... ஆஹா.. ஆஹா… கனவுகள் தான் எத்தனை சுகம் ! காண முடியாத காட்சி எல்லாம் கண் முன்னே கொண்டு வருகிறது ... இன்று பலரும் வாழ்க்கை நடத்துவது கனவுகளால் தான் ... கனவுகள் மெய்ப்பட வேண்டும் ...