'அவள்' என்ற பதத்தில் உள்ள சுகம்
இன்றுதான் இவளின் பிறந்தநாள் ... இவளுக்கு புலனத்தில் (வாட்ஸ் ஆப் ) வாழ்த்து செய்தி அனுப்பலாம் என்று தோன்றியது ! இருப்பினும் காதலனாக வேண்டாம் , தோழனாக வேண்டாம் , அட இவ்வளவு ஏன் ? சகமனிதராக கூட மதிக்கவோ, நினைக்கவோ மனமில்லாத நங்கைக்கு எவ்வாறு அனுப்புவது ? ஒருவேளை, நாம் அனுப்பும் குறுஞ்செய்தி நமக்கு தென்றல் காற்றாக தோன்றினாலும் இவளுக்கு வெப்ப அலையாகத்தான் தோன்றும் ! வேண்டாம் என்றது மனது விட்டுவிட்டேன்... பிறகுதான் தெரிந்தது 'அவள்' என்ற பதத்தில் உள்ள சுகம் "இவள்" என்ற சொல்லாடலில் இல்லவே இல்லை ! "அவள்" எனக்கானவளாக இல்லாத போதும் என்னவளாக இருக்கிறாள் ! இவள் - எண்ணிவளாக இருக்கிறாள் (எண்ணிக்கையில் ஒருத்தியாக ) இருப்பினும், என் அன்பு தோய்ந்த மனம் இவளையும் வாழ்த்துகிறது !