Posts

Showing posts from July, 2021

நாவில் சுட்ட வடு

Image
நறுமணம் கமழா குளம்பி (காபி) அதை நாவினில் நனைக்க...! மாலைக் கதிரவன் மங்கியே ஓடச் செய்தான்..  என்னவோ எண்ணம் வந்து என்னை சிறைப்பூட்ட..  குக்கூ.... என கூவும் குரலாய்..  நங்கை அவள் நடந்து வந்தாள்.. மங்கையவள் முகம் காண மகிழ்வுடனே திரும்ப முற்பட்டேன்.. இனிப்பில்லா குளம்பி அதில் இனிப்பாய் குரல் இசைத்தால்... நாவது சுட்டுவிட்டது..  சுகம் பெற்றுவிட்டது... ஆம் வள்ளுவன் வாக்கிற்கிணங்க  இந்த வடுவும் ஆறாது..!

முத்தம்

Image
முத்தம் அவள் அன்பின் அருமருந்தில்....   உள்ளுக்குள் அமிர்தமழை பொழிந்தது....   இதயத்தில் வடிந்தொழுகும் தேனை....   அவளுக்கு அளித்திட மனம் விரும்ப....   கங்கை நதியவள் கண்வழி அம்பெய்தினாள்....  வாய்வழியே தேனை முத்தமாய் மொத்தமாய் உறிஞ்ச...  உச்சி குளிர்ந்தது.. உள்ளம் இனித்தது....  கலோரிகள் காணாமல் போனது...!

நிலவே என் மீது காதல் கொண்டாயோ..!

Image
நிலவே என் மனம் வாட்டம் போக்க உன் எழிலைக் குறைத்தாயோ..?  ஆற்றுணா ஆற்றுவிக்க அன்னையவள் அழைக்கிறாள்...  அங்கே ஆயிரமாயிரம் ஜோடிகள் உனை தூது செல்ல அழைக்கின்றனர்...  நின்னொளியில் தலைவி மடிசாய தலைவன் அவன் அழைக்கின்றான்...  தலைவனோடு கை கோர்த்து இரவெல்லாம் நடப்பதற்கு தலைவியவள் அழைக்கின்றாள்... காதல் கொண்ட மயக்கத்திலே கண் அயறா கிரக்கத்தில் காளையவன் கண் அயற கண்ணடித்து அழைக்கின்றான்... கட்டழகு மேனியில் எச்சம் வைத்த மச்சம் காண கலைமகன் அழைக்கின்றான்...       கம்பன் போல் கவிமுனைய கவிஞன் உனை அழைக்கின்றான்... கடல் கடந்த மீனவனோ கரைசேர அழைக்கின்றான்...  நடுநிசி நாய்களோ நகம் பதிக்க உனை துணைக்கு அழைக்கின்றன...  ஆயிரம் பிறைக்கான துடிக்கும் அபூர்வ சிந்தாமணியாய்...!  விட்டுச்சென்றாலும் அவனுக்கு பிறந்த பிள்ளையை ஆளுமை மிக்கவனாய் அறியணையில் ஏற்றுவேன் என்று உறுதியோடு... அவள் வலி பகிர உனை தோழியாய் தாய் அவள் அழைக்கின்றாள்... ஆங்கில மாதம் விரும்பா அக்கால கிளவிகள்(கிழவிகள் அல்ல)  ஆண்டை கணக்கிட உனை அன்போடு அழைக்கின்றனர்.... அன்பு பறிமாறிய தன் காதலி நினைவை ஏதோ ஒரு பாடல் நினைவூட்ட..  அந்த அழகான நினைவுகள