நிலவே என் மீது காதல் கொண்டாயோ..!
ஆற்றுணா ஆற்றுவிக்க அன்னையவள் அழைக்கிறாள்...
அங்கே ஆயிரமாயிரம் ஜோடிகள் உனை தூது செல்ல அழைக்கின்றனர்...
நின்னொளியில் தலைவி மடிசாய தலைவன் அவன் அழைக்கின்றான்...
தலைவனோடு கை கோர்த்து இரவெல்லாம் நடப்பதற்கு தலைவியவள் அழைக்கின்றாள்...
கம்பன் போல் கவிமுனைய கவிஞன் உனை அழைக்கின்றான்...
கடல் கடந்த மீனவனோ கரைசேர அழைக்கின்றான்...நடுநிசி நாய்களோ நகம் பதிக்க உனை துணைக்கு அழைக்கின்றன...
ஆயிரம் பிறைக்கான துடிக்கும் அபூர்வ சிந்தாமணியாய்...!
விட்டுச்சென்றாலும் அவனுக்கு பிறந்த பிள்ளையை ஆளுமை மிக்கவனாய் அறியணையில் ஏற்றுவேன் என்று உறுதியோடு...
ஆண்டை கணக்கிட உனை அன்போடு அழைக்கின்றனர்....
அன்பு பறிமாறிய தன் காதலி நினைவை ஏதோ ஒரு பாடல் நினைவூட்ட..
அந்த அழகான நினைவுகளை அசைப்போட குடும்பத் தலைவனவன் உனை கெஞ்சியே அழைக்கின்றான்...
தான் பெறா சுகம் அனைத்தும் தம் மகன் பெற துடிக்கும் தந்தை அவன்,..
உனைக் கைகாட்டி தன் மகனை தேற்ற கூவியே அழைக்கின்றான்...
இத்துணைப் பேர் அழைத்தும் எழிலிழந்து எ(ந்)த்துணையாய்... என்னோடு இருப்பது எங்ஙனம்...?..!
Comments
Post a Comment