நாவில் சுட்ட வடு
நறுமணம் கமழா குளம்பி (காபி)
அதை நாவினில் நனைக்க...!
மாலைக் கதிரவன் மங்கியே ஓடச் செய்தான்..
என்னவோ எண்ணம் வந்து என்னை சிறைப்பூட்ட..
குக்கூ.... என கூவும் குரலாய்..
நங்கை அவள் நடந்து வந்தாள்..
மங்கையவள் முகம் காண மகிழ்வுடனே திரும்ப முற்பட்டேன்..
இனிப்பில்லா குளம்பி அதில் இனிப்பாய் குரல் இசைத்தால்...
நாவது சுட்டுவிட்டது..
சுகம் பெற்றுவிட்டது...
ஆம் வள்ளுவன் வாக்கிற்கிணங்க
இந்த வடுவும் ஆறாது..!
Comments
Post a Comment