Posts

Showing posts from September, 2021

அல்லி முகை எடுத்து...!

Image
அல்லி முகை எடுத்து  அன்போடு நார் தொடுத்து...   மங்கை மலர் மேனி மாதுளம் பூ சிவக்க...  சிந்திய தேன் துளியாய் செவ்விதழ் இசைமீட்ட (ப்ச்ச்)...  அம்பு விழி எய்தி அறுபட்டு துடிக்கும் அன்றில் பறவையாய் நான்..  மங்கை இதழ் கரங்கள் மகிழ்வோடு தலைக்கோத...                         மல்லி மண(ன)ம் கமழ...  மருதாணி தலைச் சிவக்க  இட்ட அடி நோக...  எடுத்த அடி கொப்பளிக்க,..!  தெருவில் மாக்கோலமாய்....  என் மன பூக்கோளமாய்  வண்ண சிறகடித்து சிட்டாய் பறந்தோடினாள்..  எனை பித்தனாக்கிய பெருஞ்சுடராய்..!   பெருவெளி வான் முகிலாய்...  மங்கை முகம் காண  மாதவம் செய்கின்றேன்!

நல்ல உறக்கத்திற்கு சில டிப்ஸ்....

Image
நல்ல நிம்மதியான உறக்கத்தை மேற்கொள்ள நாம் சில வழிமுறைகளை பின்பற்றினால் நல்ல தூக்கத்தை பெற முடியும் இதோ அதற்கான சில டிப்ஸ் 1.வாரம் ஒரு முறை தலையணை கவரை சுத்தம் செய்தல்  2. உறங்குவதற்கு 2 மணி நேரம் முன்பு சாப்பிடுதல்  3.கொழுப்பு உணவுகளை தவிர்த்தல்  4.தூங்கும் அறையின் வெளிச்சத்தை குறைத்தல்  5.மெல்லிசையை ஒலிக்க விடுதல்  6.பதற்றமான செய்திகள், வீடியோவை தவிர்த்தல்  7.செல்போன், லேப்டாப்பை தவிர்த்தல்  8.10 நிமிட தியானம்  1.வாரம் ஒரு முறை தலையணை கவரை சுத்தம் செய்தல்:   வாரம் ஒரு முறை நீங்கள் உறங்கும் தலையணை கவரினை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இது உங்களுடைய நிம்மதியான உறக்கத்திற்கு உறுதுணையாக அமையும். நீங்கள் தலையணை கவரினை சுத்தம் செய்யவில்லை எனில் உங்கள் தலைமுடியில் அழுக்கு சேர்வதற்கு காரணமாக அமைந்து அரிப்பை ஏற்படுத்த கூடும். இது நிம்மதியான தூக்கத்தை கெடுக்க வழிவகுக்கும். எனவே வாரம் ஒரு முறை தலையணை கவரினை சுத்தம் செய்து மாற்றுவதை பழக்கமாக்கி கொள்ள வேண்டும்.   2. உறங்குவதற்கு 2 மணி நேரம் முன்பு சாப்பிடுதல்:  இது இரண்டாவது டிப்ஸ். படுக்கைக்கு உறங்கச் செல்லும் முன் 2 மணி நேரம் முன்

கசடதபற திரை விமர்சனம்

Image
நம்மை சுற்றி நிகழும் அன்றாட நிகழ்வுகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் இருக்கிறது. இயற்கை ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த நிகழ்வுகளை நிகழ்த்துகிறது என்பதை மிக அழகாக எடுத்து கூறி இருக்கும் படம் தான் கசடதபற திரைப்படம்.   இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் பிரேம்ஜி அமரன், ரெஜினா காசண்ட்ரா, பிரியா பவானி சங்கர், ஹரிஷ் கல்யான், இயக்குனர் வெங்கட் பிரபு, சாந்தனு மற்றும் பலர் நடித்து ஆந்தாலஜி பட வரிசையில் வெளிவந்த திரைப்படம் கசடதபற. இத்திரைப் படத்தில் 6 வெவ்வேறு கதைகள், ஒரே நேர்கோட்டில் வந்து சந்திக்கும் புள்ளி ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக காட்சிபடுத்தியிருக்கும் அழகு, இயக்குனர் சிம்புதேவனுக்கே உரித்தான செயல் என்றால் அது மிகையாகாது.   கசடதபற திரைப்படத்தில் மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தையும் விட 2 கதாபாத்திரம் மிக முக்கிய பங்காக விளங்குகிறது. 1.நடிகை விஜயலட்சுமி கதாபாத்திரம். 2. இயக்குனர் வெங்க்ட்பிரபு கதாபாத்திரம்.   கசடதபற திரைப்படத்தில் கணவனை இழந்து தணிப்பெண்ணாக தன் குழந்தையை வளர்க்க போராடும் தாயின் கதாப்பாத்திரத்தில் நடிகை விஜயலட்சுமி எல்லோர் மனதிலும் நீங்கா இடம்பிடிக்கும் வகையில் நடித்திர