அல்லி முகை எடுத்து...!
அல்லி முகை எடுத்து
அன்போடு நார் தொடுத்து...மங்கை மலர் மேனி மாதுளம் பூ சிவக்க...சிந்திய தேன் துளியாய் செவ்விதழ் இசைமீட்ட (ப்ச்ச்)...அம்பு விழி எய்தி அறுபட்டு துடிக்கும் அன்றில் பறவையாய் நான்..மங்கை இதழ் கரங்கள் மகிழ்வோடு தலைக்கோத...
மல்லி மண(ன)ம் கமழ...
மருதாணி தலைச் சிவக்க
இட்ட அடி நோக...
எடுத்த அடி கொப்பளிக்க,..!
தெருவில் மாக்கோலமாய்....
என் மன பூக்கோளமாய்
வண்ண சிறகடித்து சிட்டாய் பறந்தோடினாள்..
எனை பித்தனாக்கிய பெருஞ்சுடராய்..!
பெருவெளி வான் முகிலாய்...
மங்கை முகம் காண
மாதவம் செய்கின்றேன்!
அருமை 👌
ReplyDelete