நல்ல உறக்கத்திற்கு சில டிப்ஸ்....
2. உறங்குவதற்கு 2 மணி நேரம் முன்பு சாப்பிடுதல்
3.கொழுப்பு உணவுகளை தவிர்த்தல்
4.தூங்கும் அறையின் வெளிச்சத்தை குறைத்தல்
5.மெல்லிசையை ஒலிக்க விடுதல்
6.பதற்றமான செய்திகள், வீடியோவை தவிர்த்தல்
7.செல்போன், லேப்டாப்பை தவிர்த்தல்
8.10 நிமிட தியானம்
1.வாரம் ஒரு முறை தலையணை கவரை சுத்தம் செய்தல்:
வாரம் ஒரு முறை நீங்கள் உறங்கும் தலையணை கவரினை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இது உங்களுடைய நிம்மதியான உறக்கத்திற்கு உறுதுணையாக அமையும். நீங்கள் தலையணை கவரினை சுத்தம் செய்யவில்லை எனில் உங்கள் தலைமுடியில் அழுக்கு சேர்வதற்கு காரணமாக அமைந்து அரிப்பை ஏற்படுத்த கூடும். இது நிம்மதியான தூக்கத்தை கெடுக்க வழிவகுக்கும். எனவே வாரம் ஒரு முறை தலையணை கவரினை சுத்தம் செய்து மாற்றுவதை பழக்கமாக்கி கொள்ள வேண்டும்.
2. உறங்குவதற்கு 2 மணி நேரம் முன்பு சாப்பிடுதல்:
இது இரண்டாவது டிப்ஸ். படுக்கைக்கு உறங்கச் செல்லும் முன் 2 மணி நேரம் முன்பாக சாப்பிடுவதை பழக்கமாக்கி கொள்ள வேண்டும். இது எளிதில் ஜீரணம் அடைய உதவிகரமாக இருக்கும். மேலும் நிம்மதியான தூக்கத்திற்கும் வழிவகுக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும் போது மனம் தன் வசப்படும். எனவே முடிந்த வரை இரவு 7 மணி முதல் 9 மணிக்குள் இரவு உணவினை முடித்துவிட வேண்டும்.
3.கொழுப்பு உணவுகளை தவிர்த்தல்:
கொழுப்பு உணவுகளை தவிர்ப்பது இதயம் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.மேலும் தேவையற்ற நச்சுகள், கொழுப்புகள் உடலில் சேர்வதை தடுக்க உதவும். இதன் மூலம் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது தடுக்கப்பட்டு ஆரோக்கியமான தூக்கத்திற்கு வழிவகுக்கும். முடிந்த வரை இரவு நேரங்களில் அதிகப்படியான உணவுகளையும், கொழுப்பு உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.
4.தூங்கும் அறையின் வெளிச்சத்தை குறைத்தல்:
தூங்கச்செல்லும் முன் நீங்கள் உங்கள் அறையின் வெளிச்சத்தை குறைத்து விடுவது நல்லது. இது அதிகப்படியான விழிப்பை தடைசெய்து தூக்கம் வர வழிவகைச் செய்யும். மேலும் நீங்கள் உறங்கும் இடம் நல்ல காற்றோட்டம் உள்ள இடமாகவும், வெளிச்சம் குறைவாகவும் இருக்க வேண்டும். இது உங்களின் இனிமையான தூக்கத்திற்கு இதமளிக்கும் விதமாக அமையும்.
5.மெல்லிசையை ஒலிக்க விடுதல்:
படுக்க செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக இனிமையான, மெல்லிசையான பாடல்களை ஒலிக்க விடுங்கள். இது உங்கள் மனதை சந்தோசமாக வைத்து கொள்ள உதவுவதோடு, நல்ல ஆரோக்கியமான உறக்கத்திற்கு வழி வகுக்கும். மேலும் உங்களின் அடுத்த நாள் வேலைகளை நீங்கள் புத்துணர்ச்சியோடு செய்வதற்கு உறுதுணையாக அமையும்.
6.பதற்றமான செய்திகள், வீடியோவை தவிர்த்தல்:
7.செல்போன், லேப்டாப்பை தவிர்த்தல்:
உறங்கச் செல்வதற்கு முன்பாக (குறைந்த பட்சம் 2 மணி நேரம்) செல்போன், லேப்டாப் போன்றவற்றை தவிருங்கள். இது கண்ணின் அதிகப்படியான விழிப்பு நிலையை தவிர்க்க உதவும். மேலும் கண்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும் நிம்மதியான உறக்கத்திற்கும் வழிவகுக்கும்.
8..10 நிமிட தியானம்:
உறங்கும் முன் குறைந்தபட்சம் 10 நிமிடம் தியானம் மேற்கொள்வதை பழக்கமாக்கி கொள்ளுங்கள். இது மனசஞ்சலத்தை நீக்கி நிம்மதியான மற்றும் ஆரோக்கியமான தூக்கத்திற்கு வழிவகுக்கும். ஒரு மனிதன் குறைந்தபட்சம் 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும். மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி வந்தால் நீங்கள் ஆரோக்கியமான, நிம்மதியான உறக்கத்தை பெறலாம். அப்புறமென்ன மேலே சொன்னதை பாலோவ் பண்ணுங்க.. போய் சந்தோசமாக தூங்குங்க...! நன்றி வணக்கம்...!
Comments
Post a Comment