கசடதபற திரை விமர்சனம்

நம்மை சுற்றி நிகழும் அன்றாட நிகழ்வுகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் இருக்கிறது. இயற்கை ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த நிகழ்வுகளை நிகழ்த்துகிறது என்பதை மிக அழகாக எடுத்து கூறி இருக்கும் படம் தான் கசடதபற திரைப்படம். 

 இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் பிரேம்ஜி அமரன், ரெஜினா காசண்ட்ரா, பிரியா பவானி சங்கர், ஹரிஷ் கல்யான், இயக்குனர் வெங்கட் பிரபு, சாந்தனு மற்றும் பலர் நடித்து ஆந்தாலஜி பட வரிசையில் வெளிவந்த திரைப்படம் கசடதபற. இத்திரைப் படத்தில் 6 வெவ்வேறு கதைகள், ஒரே நேர்கோட்டில் வந்து சந்திக்கும் புள்ளி ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக காட்சிபடுத்தியிருக்கும் அழகு, இயக்குனர் சிம்புதேவனுக்கே உரித்தான செயல் என்றால் அது மிகையாகாது.

 
கசடதபற திரைப்படத்தில் மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தையும் விட 2 கதாபாத்திரம் மிக முக்கிய பங்காக விளங்குகிறது. 1.நடிகை விஜயலட்சுமி கதாபாத்திரம். 2. இயக்குனர் வெங்க்ட்பிரபு கதாபாத்திரம். 


 கசடதபற திரைப்படத்தில் கணவனை இழந்து தணிப்பெண்ணாக தன் குழந்தையை வளர்க்க போராடும் தாயின் கதாப்பாத்திரத்தில் நடிகை விஜயலட்சுமி எல்லோர் மனதிலும் நீங்கா இடம்பிடிக்கும் வகையில் நடித்திருக்கிறார். தனக்கு கொடுத்த கதாப்பாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக அவர் வெளிபடுத்தி நடித்திருக்கும் தன்மை நாம் அந்த கதாப்பாத்திரத்தோடு எளிதில் இணையும் விதமாக அமைந்திருக்கிறது. 

தன் பிள்ளையின் மருத்துவத்திற்காக தனி ஆழாக நின்று சென்னை சென்று அவர் படும் கஷ்டங்களுடம், தனது தாலிச்செயினை திருடர்கள் பிடுங்கி கொண்டு செல்லும் போது அவர்களோடு சண்டையிட்டு அதை துணிச்சலாக பிடுங்கும் காட்சிகளும் பெண்கள் எப்போதும் தைரியமாகும் எந்த நிலை வந்தாலும் எதிர்த்து துணிச்சலோடு போராட வேண்டும் என்ற உத்வேகத்தை அளிப்பதாக உள்ளது. 

 இதே போன்று மற்றொரு கதாப்பாத்திரம் இயக்குனர் வெங்கட் பிரபுவின் கதாப்பாத்திரம் முதலாளி வர்க்கத்தின் தவறுக்களுக்காக ஒரு அப்பாவி நிரபராதி தண்டிக்கப்படும் போது அவனுடைய வலிகள் என்ன? அவனுடைய இயலாமை என்ன என்பதையும் மிக அழகாக காட்சிப்படுத்தி இயக்குனர் வெங்கட்பிரபு நடித்து இருக்கிறார். 


நிரபராதி எப்படி எல்லாம் நம்பிக்கை துரோகம் செய்து ஏமாற்றப்படுகிறான் என்ற காட்சியில் மனம் உருகும் படி மிக தத்ரூபமாக இயக்க்குனர் வெங்கட்பிரபு நடித்திருக்கிறார். தூக்கு கயிற்றை முத்தமிடும் நிலையில் மரணத்தின் விழிம்பிற்கே சென்றாலும் இறுதியாக தர்மம் வெல்லும் என்பதை காட்சிப்படுத்தி இருப்பது மனிதாபிமானம், அறத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் விட்டுவிடக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. 

மொத்தத்தில் தனி ஒருவன் படத்தில் வருவது போன்று ஒரு செய்தித்தாளின் ஓரு செய்திக்கும் மற்றொரு செய்திக்கும் உள்ள தொடர்பை நினைவுப்படுத்தும் விதமாக அழகாக கூறியிருக்கிறார். மற்ற கதாப்பாத்திரங்கள் அனைத்தும் அவர்களுக்கு கொடுத்த கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். இப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாபாத்திரம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அவரது கதாபாத்திரம் சொல்லும் விதமாக இல்லை. மற்றபடி படம் பார்க்கலாம். நீங்கள் படம் பார்த்திருந்தால் உங்களுடைய அனுபவங்களை பகிரலாமே?

Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி