என் சோகம் என்னோடு தான்

 என்னுடைய அத்துனை வலிகளையும்,

துயரங்களையும், வேதனைகளையும் அவள் காலடியில் கொட்டிவிட வேண்டும்!

என்னை பற்றி முழுவதும் அறிந்த ஒரு ஜீவன் அவள் ஒருத்தியாக மட்டுமே இருக்க வேண்டும்!

என்னை நேசிக்கும், அன்பு செலுத்தும் ஒரு துணைவியாக அவள் இருப்பாள் 

என்று நான் எண்ணிய எண்ணங்களை எல்லாம் தவிடு பொடியாக்கினால்.....

அந்த ஒற்றை வார்த்தையில் "உன்னை பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது. 

ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு மாதிரி பேசுகிறாய்" என்றாள். 


என் வலிகளை எல்லாம் சொல்ல தயங்கிய தருணம் அது. 

ஆரம்பிக்கும் முன்பாகவே 

நீ எனக்கு வேண்டாம் என்று சொல்லி முடித்து விட்டாள்.  

 

அப்போதுதான் புரிந்தது "வலிகள் நிறைந்ததுதான் தான் வாழ்க்கை! உன் வலிகளை உன்னோடு வைத்து கொள்ள வேண்டும். மாறாக, அதற்கு ஆறுதல் தேட முற்பட்டாலோ, அந்த வலிகளை போக்கிவிட வேண்டும் என நினைத்தாலோ, மிகப்பெரிய வலியை இந்த வாழ்க்கை கொடுத்துவிடும்".என்று 

இப்போது என் முதல் 10 வலிகளுக்குள் அவள் முதலிடம் பிடித்துவிட்டாள். ஆம்! அவள் ஏற்படுத்திய வலிதான் இன்றும் என்றும் முதலிடம் வகிக்கும்.


இதை எழுதி முடிக்கும் முன்பாகவே என் உதட்டோரம் சிறு புன்முறுவல் பூக்கிறது !


(பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே)

Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

இரண்டு பொண்டாட்டி