கவியரசு கண்ணதாசன்

 

                                                       கவியரசு கண்ணதாசன்

 

நமக்கு பிடித்தவர்களிடம் நாம் பேசுவது  ஒரு சுகம் என்றால், நமக்கு பிடித்த நபர் பற்றி பேசுவது மற்றொரு சுகம் . அந்த வகையில் இந்த வாரம் ஒளிப்பரப்பான நீயா நானாவில் கவியரசு கண்ணதாசன் எனும்  தலைப்பில் அறிஞர்கள், எழுத்தாளர்கள், ரசிகர்கள் என பலரும் கலந்து கொண்டு தாங்கள் கண்ணதாசனின் வரிகளில்  வீழ்ந்த இடங்களை மகிழ்வோடு  பகிர்ந்து கொண்டனர்.   

  ஒவ்வொருவரும் தாங்கள்  உணர்ந்து மகிழ்ந்த அந்த அழகான தருணங்களை பகிர்ந்து கொண்டனர். அவர்களோடு சேர்ந்து நானும் கண்ணதாசனோடு கரைந்து  போனேன்.   அதில் அருண் என்ற அன்பர் கண்ணதாசனின் ஜனனம் எனும் கவிதையை  வாசிக்க தொடங்கினார். ஆஹா! அதை கேட்பதுதான் எத்தனை இன்பம்,..

இதோ ஜனனம்  உதயமாகிறது……



 

சங்கமத்தில் பங்குகொள்ளும் மங்கைமலர்ப் பங்கயத்தில்

தங்கமணிப் பிள்ளை ஒன்று ஜனனம் -அது

தங்கடமை தீர்க்குமுனம் மரணம் !

சேற்றிலொரு செங்கழுநீர் ஏற்றுமணித் தீபமெனச்

சாற்றிவைத்த வண்ணமலர் ஜனனம் -அது

தங்கடமை தீர்க்குமுனம் மரணம் !

சேற்றிலொரு செங்கழுநீர் ஏற்றுமணித் தீபமெனச்

சாற்றிவைத்த வண்ணமலர் ஜனனம் -அது

தன்னழகினால் அடையும் மரணம் !

உண்டபணக்காரனவன் தொந்தியென விம்மிவரும்

நண்டிலொரு பிள்ளைநண்டு ஜனனம் - அதைக்

கண்டவுடன் பெற்றநண்டு மரணம் !

வாழை, இலை தண்டுமலர் காய்கனிகள் ஆனவுடன்

வாழையடி வாழை ஒன்று ஜனனம் – அது

 

வாழையடி வாழை ஒன்று ஜனனம் - அது

வந்தவுடன் தாய்விழுந்து மரணம் !

ஆடுகடலோடு சிப்பியூடு பள்ளி கொண்டிருந்து

பாடுமணி முத்தமொன்று ஜனனம் -அதை

நாடுபெறச் சிப்பி பெறும் மரணம் !

தோன்றிவரும் அத்தனைக்கும் ஊன்றுமிடம் உண்டெனினும்

சான்றுசொலும் காலமதன் முடிவை -இதில்

தப்பியவர் யாருமில்லை அழிவை !

ஒன்றுமட்டும் உண்மை அறிவூற்றிலொரு பாட்டெழுதும்

செந்தமிழ் மாகவிக்கு மரணம் -அது

வந்தபின்புதான் பெருமை ஜனனம் !  

ஆஹா அருணின்  கணத்த குரலிதான் எத்தனை  ஈர்ப்பு  அவரிடம் போய் காந்தமாய்  ஒட்டிக்கொண்டேன்… என்னை மறந்து சில விநாடிகள் கண்ணதாசனின் அந்த கவிதை வரிகளில் சிலாகித்து போனேன்…



சிலாகித்து போன என்னை  வருடும் தென்றலாய்…

ஒரு தெய்வம் இல்லாமல் கோவிலும் இல்லை..

ஒரு கோவில் இல்லாமல் தீபமும் இல்லை…

 நீ எந்தன் கோவில் நான் அங்கு தீபம்…

தெய்வத்தின் முன்னே நீயும், நானும் வேறல்ல..

உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல!

 உன்னை எண்ணாத நெஞ்சம் நெஞ்சல்ல..!

நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல..!

நீ இல்லாமல் நானும் நாணல்ல… என்று

அங்கிருந்த  பெண்ணொருத்தி  பாடி முடித்தாள்.. அய்யோ நான் பெற்ற இன்பத்தை எழுத்தில் கூற இயலாது..

என் இன்பத்திற்கு மேலும் இன்பமாய் …

சிவந்த மேனியில்லா, சிறு இதழ்கொண்ட பெண்ணொருத்தி..அவள் கண்ணாதாசன் வரிகளில் வீழ்ந்த இடத்தை விவரித்தாள்…

மாங்கனி பெயர் கொண்ட தலைவி ஒருத்தி தன் காதலனை காண கடற்கரைக்கு வருகிறாள்.. நெடுநேரமாகியும் காதலன் வரவில்லை..! பிறகு காதலன் வரும் சமயம் அவள் அங்கில்லை..! காதலனுக்கோ சந்தேகம் அவள் வந்தாளா! இல்லை வரவில்லையா? என்று?

அவன்  கண்ணில் அவளின் பாதச்சுவடு தெரிகிறது.. அந்த பாதச்சுவட்டின் மணலை அள்ளி பார்க்கிறான் …சற்றுமுன் தான் சென்றிருக்கிறாள்.. அவள் பாதத்தின் சூடு இன்னும் தனியவில்லை என்று கூறுகிறான்! காதலியின் பாதச்சுவட்டின் வெப்பத்தை  அறிந்ததாக காதலன் கூறும் அந்த வர்ணனையில்  வீழ்ந்து போனேன் என்றாள்.. உண்மைதான் நானும் வீழ்ந்துப்போனேன்….

இன்பம் மட்டுமா வாழ்க்கை?  இல்லை துன்பத்தில் இன்பமே வாழ்க்கை..!

 இன்பத்தில் மிதந்த நான் துன்பத்திலும் துயில்கொள்ள தயாரானேன்..!

அங்கம் குறைந்த அழகுடைய அய்யா ஒருவர் கண்ணாதாசனின் தூக்கம் எனும் கவிதையில் வீழ்ந்தேன் என்றார்…

ஒருக்குழந்தை தூங்குகிறது…நண்பர் ஒருவர் அக்குழந்தையை காணச்செல்கிறார். குழந்தையின் தந்தை அக்குழந்தையை எழுப்ப முயல்கிறார். அக்குழந்தையை எழுப்ப வேண்டாம் எனக்கூறுவதாக இப்பாடல்….

என்னத்துயர் வருமோ? எங்கிருந்து அடிவிழுமோ!

மோதல் வருமோ! முறைகெடுவார் துணைவருமோ!

நன்றியில்லா நண்பர்கள்தான் நால்புறமும் சூழ்வார்களோ!

நலமிழந்த பெண்ணொருத்தி நாயகியாய் வருவாளோ!

செய்யத்தொழில் வருமோ! திண்டாட்டம் தான் வருமோ!

வெயில் அழைத்துவரும் வேர்வையிலே நீராடி….

அய்யா பசியென்று அலைகின்ற நிலை வருமோ!

என்ன வருமென்று இப்போது யார் அறிவார்?

அவனை எழுப்பாதீர் அப்படியே தூங்கட்டும் என்றார்…

உறவின் பல கட்டங்களை கடந்து வீரம்,அழகு,தாலாட்டு என சென்றுகொண்டிருந்த நீயா! நானா! சரணாகதிக்கு வந்தடைந்தது…..


நண்பர் காந்த குரலோன் அருண் மீண்டும் கதைக்க தொடங்கினார்….

சரணாகதியில் இரண்டு வகை உண்டு ஒன்று பூரிப்பில் வருவது மற்றொன்று விரக்தியில் வருவது..

அது என்ன பூரிப்பு! நான் உன்னை காதலிக்கிறேன் ….என்னை உன்னில் ஐக்கியமாக்கி  என்னையே கரைத்து நான் இல்லாமல் ஆக்கி விடவேண்டும் ..

இது ஒருவகை மற்றொன்று விரக்தி .

அது என்ன விரக்தி! இனிமேல் எனக்கு வாழ்க்கையில் ஒன்னுமில்ல.. எல்லாமே நீதான்..! என்னுள் உன்னைக்கரைத்து நான் இல்லாமல் ஆக்கிவிட வேண்டும்..

இந்த இரண்டையும் கண்ணதாசன் ஒன்றாக இணைத்து சரணாகதி எனும் நிலையில்…. சந்தித்த  வேளையில் சிந்திக்கவே இல்லை.. தந்துவிட்டேன் என்னை..!

என்று அவர் சொல்ல நானும் தந்துவிட்டேன் என்னை…

 அய்யா மீண்டும் அழகாக சுகம் என்று கண்ணதாசன் எதைக்கூறுகிறார் தெரியுமா? என்றார்…  நானும் கேட்க ஆவலுற்றேன்…

இதோ.. அய்யா…

தொழுவது சுகமா..? வண்ணத்தோகைப் பெண்ணின் கனிந்த மார்பில் விழுவது சுகமா.? உண்ணும் உணவுதான் சுகமா..?இல்லை………..

பழகிய காதலை எண்ணி பள்ளியில் தனியே சாய்ந்து அழுவது சுகமென்பேன்… அறிந்தவர் அறிவாராக…! அறிந்தவர் அறிவாராக…! என்றார்.

உண்மைதான் அழுவதில்தான் எத்தனைச் சுகம்…!



காவியத்தாயின் இளையமகன்..காதல் பெண்களின் பெருந்தலைவன்…

பாமரச்சாதியில் தனிமனிதன் நான்…

படைப்பதினால் என்பேர் இறைவன்..

மானிட இனத்தை ஆட்டிவைப்பேன்..

அவர் மாண்டுவிட்டால் அதைப்பாடி வைப்பேன்…  

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை ..

எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.. என்று  கோபிநாத் பாட நீயா !நானா! இனிதே நிறைவுப்பெற்றது… நானும் இயல்புநிலைக்கு திரும்பினேன்…  எனக்கு மட்டும் சிறுவருத்தம் இருந்தது.. இந்த நிகழ்ச்சிக்கு கண்ணதாசனின் மகள் விசாலி கண்ணதாசன்  வந்திருந்தால் இன்னும் அழகாய் இருந்திருக்கும் என்று.  அப்போது 

கண்ணதாசனின் வனவாசம் நியாபகத்திற்கு வந்தது…

ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழக்கூடாதோ..!  அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான் .. ஆகவே இப்படித்தான் வாழவேண்டும் எனச்சொல்லும் அருகதை எனக்கு இருக்கிறது… யாரும் சொல்லிடாத புதுவிசயத்தை நான் சொல்லவில்லை… ஆனால் நான் சொல்லும் விசயம் யாரும் அறியாமல் இருக்கலாம் என்கிறார்…  மேலும் என்னுடைய வாழ்வின் கடைசி தருணங்களில் நான் மது,மாது என்று இல்லாமல் இருந்திருந்தால்  தமிழின்  பல  நூல்களுக்கு  விளக்கவுரை எழுதியிருப்பேன்… அது முடியாமல் போவது வருத்தம்தான் என்கிறார்…

கண்ணதாசனின் கன்னித் தமிழோடு நானும் கவிப்பாட முயன்றேன் …



அந்த சுவாரசியமான நீயா! நானாவை காண விரும்பினால் இதோ..!

லிங்க்: https://www.hotstar.com/1100047270


Comments

Popular posts from this blog

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி