இரண்டு பொண்டாட்டி

இந்த மனம் ஒரு பொல்லாத  உயிர் தின்னும் பிசாசு....

இதே மனம் உயிரை வளர்க்கும் ஒரு அழகான தேவதை....

ஆம்! இன்று நானே என்னை நினைத்து சிரிக்கின்றேன்...!

விடியற்காலை பொழுது திடீரென்று மனவேதனை!

 உனக்கு மட்டும் தான் திருமணம் ஆகவில்லை. எத்தனையோ முயற்சி செய்தும் அத்தனையும் தோல்வியிலேயே முடிகிறது..

சரி நம் தலைவிதி என்னவோ அப்படியே நடக்கட்டும்...

இதை நான் கடந்து செல்ல முயற்சித்தாலும் மனம் விடுவதே இல்லை!

உனக்கான ஒருத்தியை  தேடு தேடு என  என்னை தொல்லை செய்கிறது...

நான் தேடி செல்லும் இடமெல்லாம் நிராகரிப்பு மட்டுமே பதிலாக வருகிறது...

எங்கிருந்து நான் தேடுவது?

 நான் முயற்சிக்கவில்லை என்று நீ சொன்னாலும் பரவாயில்லை! நீ தான் பார்த்துக் கொண்டே இருக்கிறாயே என்று பதில் கேள்வி நான் கேட்க, சற்று மௌனம் காக்கிறது... பிறகு அதெல்லாம் எனக்கு தெரியாது எனக்கானவள் ஒருத்தி வேண்டும் என்கிறது மீண்டும்!

இந்த போராட்டம் உச்சத்துக்கு சென்று மனதை நான் வெறுக்கும்போது இந்த மனமே சிரித்தபடி என்னிடம் சொல்கிறது!

 

ஹா ஹா ஹா... கவலைப்படாதே உனக்கு ஒரு வேலை இரண்டு மனைவி இருந்தாலும் இருக்கக் கூடும்! அதனால்தான் இவ்வளவு தாமதம் ஆகிறது என்று..

ஒன்றுக்கே வழிய காணும் 

இதுல எங்கிருந்து இரண்டு என்று நான் கேட்க?

அப்படி நடந்தால் என்ன செய்வாய் என்று கேட்கிறது? 

ஹா ஹா ஹா ஹா மனதில் மீண்டும் கற்பனை குதிரை பறக்க ஒரு நிமிடம் நானும் கற்பனையாக யோசித்துப் பார்க்கிறேன்... இரண்டு மனைவி கிடைத்தால் எப்படி இருக்கும்!

என்னை அறியாமல் மீண்டும் சிரிப்பு வருகிறது மனமே என்னை சாந்தப்படுத்துகிறது..

இந்த மனசு இருக்கே சும்மாவே இருக்காது

நம்மள எந்த அளவுக்கு வெறுப்பேத்தனுமோ அந்த அளவுக்கு வெறுப்பேத்தி அப்புறம் நார்மல் ஆக்கிட்டு போயிடும் சும்மாவா சொன்னார்கள் மனம் அது ஆத்மாவின் குழந்தை என்று நாம் ஒன்றும் செய்ய ஆகாது 

என் மனமே  சும்மாதான் இரேன்...!


Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்