உடல் எனும் அற்புதம்
அண்டத்திலே உள்ளது பிண்டத்திலே பிண்டத்திலே உள்ளது அண்டத்திலே என்று சித்தர்கள் கூற கேட்டிருப்போம். இதன் பொருள் நம் உடலானது இயற்கையின் அம்சம் நிறைந்தது. இந்த பூமியில் உள்ள பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு, ஆகிய அனைத்தும் நம் உடலில் உள்ளது. இந்த பஞ்ச பூதங்களான அனைத்தும் சேர்ந்துதான் நம் உடலின் அனைத்தும் உறுப்புகளும் தோற்றுவிக்கப்படுகின்றன. இந்த உடலை மூன்று வகையாக சித்தர்கள் பிறித்து கூறுகின்றனர். அதாவது வாதம், பித்தம், சிலேத்துமம் இந்த உலகத்தில் பிறந்த அனைத்து மனிதர்களும் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றில் அடங்குவர். இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானல், ஒருவர் உடல் வெப்பம் நிறைந்த உடலாகவோ, குளிர்ச்சி நிறைந்த உடலாகவோ, அல்லது வாயு நிறைந்த உடலாகவோ இருக்கும். இவர்கள் தாங்கள் சாப்பிடும் உணவை தன் உடம்பு ஏற்றுக்கொள்கிறதா? என்பதை அறிந்து அதற்கு தகுந்தவாறு உணவை உட்கொள்ள வேண்டும். மேலும் நம் உடம்புக்கு ஏற்படும் அனைத்தும் ஒவ்வாமையையும் தீர்க்கக் கூடிய மருந்து இந்த பூமியிலேயே இறைவனால் நமக்கு வழங்கப்பட்டுள்ளது. நம் உடலானது மிகவும் அற்புதம் நிறைந்த ஒரு அழகான ஆலயம் ஆகும்