உணவே மருந்து......
நாம் உண்ணும் உணவுக்கும் நம் செயல்பாடுக்கும் மிக முக்கிய தொடர்பு இருப்பதை நம்மால் அறிய முடியும். பெறும்பாலும் இனிப்பு பதார்தங்கள், குளிரூட்டப்பட்ட ரசாயனம் ஏற்றப்பட்ட இனிப்பு பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவற்றை நாம் தவிக்கும் போது நம்முள் ஏற்படும் மாற்றத்தை நம்மால் உணர முடியும். முடிந்தவரை சரிவிகித உணவு உண்ண முயற்சி செய்ய வேண்டும். பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகளை பயன்படுத்தலாம். காய்கறிகளை நாம் சமையலுக்கு உட்படுத்தும்போது எண்ணெயின் அளவை குறைத்து பயன்படுத்த வேண்டும்.
பெறும்பாலும் நல்ல எண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், ஆலிவ் ஆயில் பயன்படுத்துவது மிகுந்த நற்பலனை தரும். தினமும் குறைந்தது இரண்டு பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். (ஒரு ஆப்பிள், இரண்டு வாழைப்பழம்) நாம் நம் உடலை தூக்கும் அளவுக்கு தகுதியாக இருக்க வேண்டும். நான் எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால் உடலை குறைக்க முடியவில்லை என்று சொல்பவர்கள் அரிசி உணவின் அளவை குறைத்து, எண்ணெயில் பொறித்த உணவு பதார்தங்களை முற்றிலும் தவிர்க்கும் போது நீங்கள் எதிர்பார்க்கும் உடலைமைப்பு உங்களை நாடி வரும்.
நம் உடலுக்கு எவ்வளவு உணவு தேவையோ அதை எடுத்துக் கொள்ள வேண்டும். உடனடியாக உணவு குறைத்தல் கூடாது. சிறிது, சிறிதாக உணவின் அளவை நம் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். இரவு 8.30 மணிக்கு மேல் உணவு எடுப்பதை தவிர்க்க வேண்டும். தண்ணீர் முதற்கொண்டு தேவையான போது மட்டுமே எடுக்க வேண்டும். முடிந்த வரை இரவில் உணவு எடுப்பதை அணைத்து வகையிலும் தவிர்க்க வேண்டும். உணவுடன் கூடிய உடற்பயிற்சி உடலை நம் கட்டுக்குள் கொண்டுவருவதோடு மட்டுமின்றி நம் சக்தியையும் நம் கட்டுக்குள் கொண்டுவரும்.
சக்தி கட்டுக்குள் வரும் போது சிவம் வெளிப்படும். சிவம் இயங்க ஆரம்பிக்கும் போது மனமானது அமைதி பெறும். தன்னம்பிக்கை தானே நம்முள் உருவாவதை நம்மால் உணர முடியும். இனிப்பு பதார்தங்களை அதிகமாக எடுக்கும் போது காமம் அதிக அளவில் வெளிப்படும். இதன் காரணமாகத்தான் திருமணமான தம்பதிகள் மற்றும் திருமணம் செய்யப்போகும் தம்பதிகளை வீட்டிற்க்கு அழைத்து சமைத்து போடுவார்கள். அந்த உணவில் அதிக அளவில் இணிப்பு வகைகள் இடம்பெற்றிருக்கும்.
தினமும் நாம் ஏதேனும் ஒரு பொடியை நம் உடம்பில் சேர்த்துக் கொள்வது நம் எதிர்ப்பு சக்திக்கு பக்க பலமாக அமையும். அவ்வாறு எடுக்கும் பொடி (உதாரணமாக அருகம்புல் பொடி, தூதுவலை இலைப் பொடி, போன்றவை) 48 நாட்களுக்கு அதிகமாக எடுக்கக் கூடாது. அவை மறு சுழற்சி முறையில் இருக்க வேண்டும். கீரைகள், பேரீச்சை, தேன் எடுத்துக் கொள்ளலாம். ருசி விரும்புவதை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். அவ்வாறு நாம் முயற்சி செய்யும் பட்சத்தில் பல அதிசய உணர்வுகளை நம்மால் உணர இயலும்.
அடுத்ததாக தூக்கம் மிகவும் முக்கியமான ஒன்று. குறைந்தது 7 மணி நேரம் தூங்க வேண்டும். அவ்வாறு இயங்க நாம் முயற்சி செய்யும் போது நாம் இயற்கையோடு ஒன்றிப்போவோம். இயற்கையின் பல ரகசியங்கள் நமக்கு வெளிப்படும்....
நம் வாழ்க்கை அழகான பாதையில் நமக்கு பிடித்தது போன்று பயணிக்கத் தொடங்கும்.. அந்த பயணத்தின் தொடர்ச்சியில்.........
(மீண்டும் சந்திப்போம்)

Comments
Post a Comment