பெற்றோரை மதியுங்கள்

படைத்தது சிவனாயினும், பெற்றது சீவனாகும். நாம் இவ்வுலகிற்கு வர காரணமாக இருந்தவர்கள் நம் தாய்,தந்தையர்கள் ஆவர். ஒருவன் அல்லது ஒருவள் வாலிப வயதை கடக்கும் போது அவர்களது பெற்றோர் குழந்தைகளாக மாறுகின்றனர். அவர்களுடைய எதிர்ப்பார்ப்பில் ஒரு புது நம்பிக்கை பிறக்கிறது.  நமக்காக நம் மகனோ, மகளோ இருக்கிறார்கள் என்று  நினைக்கிறார்கள். நாம் வாழும் இப்புவியில் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று என்னக்கூடிய  அன்பு உள்ளங்கள் இருக்கிறது என்றால் அது நம்மை பெற்ற அம்மா, அப்பாதான்.
    


புரிதலில் வேண்டுமானால் சண்டை , சச்சரவுகள் வரலாம். அன்பில் ஒருப்போதும் அவ்வாறு இருக்காது.
காதலிக்கும் காதலி மீது  அன்பு செலுத்துவது போன்று, வரவிருக்கும் மனைவி மீது அன்பு செலுத்துவது போன்று நம் அப்பா, அம்மா மீது அன்பு செலுத்தும்போது  அங்கு பேரண்பு ஊற்றெடுக்க ஆரம்பிப்பதை நம்மால் உணர இயலும்.

 நாம் இம்மண்ணில் வருவதற்கு காரணமாக இருந்த சீவன்கள்  மகிழும்போது நம் பிறந்த நோக்கத்தின் பாதி பயணங்கள் பூர்த்தியடைந்ததை நம்மால்  உணர முடியும்.  நம் அடுத்த பாதி பயணத்தின் பாதை தன்னாலே நமக்கு விளங்கும்.
இதை விளக்கும் விதமாகத்தான்

”அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்,
தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை  என்றார்கள்”

நாம் நம் பெற்றோரை மகிழ்விக்காமல், இறைவனை ஒருப்போதும் மகிழ்விக்க இயலாது.  முக்தி அடைந்தவர்கள் ஒருபோதும் அன்பு செலுத்த வேண்டாம் என்று சொல்லவில்லை  மாறாக பற்று வைக்க வேண்டாம் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.  அன்பிற்க்கும், பற்றிற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு .

அன்பு நம்மை தவறு செய்ய அனுமதிக்காது. பற்று... நமக்கே பிடிக்காவிட்டாலும் நம்மை தவறு செய்ய நிர்பந்திக்கும். பட்டினத்தார் தன் தாய் மீது அன்பு செலுத்தாமல் இல்லை! அருணகிரிநாதர் தன் அக்கா மீது அன்பு செலுத்தாமல் இல்லை! இதை வள்ளுவர் திருக்குறளில் தொடர்புடைய படம்

”அண்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தால் ஆர்வலர்
புண்கணீர் பூசல் தரும். ”        என்கிறார்.

அதாவது ஒருவர் மீது வைத்திருக்க கூடிய அபரிவிதமான அன்பை அவர்கள் விடும் கண்ணீர் காட்டிக் கொடுத்து விடும் என்கிறார்.
இந்த அன்புதான் கடவுள் , இதில் எதிர்ப்பார்ப்பு இருக்க கூடாது. அன்பில் எதிர்ப்பார்ப்பு  இருக்கும்போது அது பற்றாக மாறி விடுகிறது.



எதிர்ப்பார்ப்பில்லாத அன்பு அளப்பரியது, அது அளாதியானது!
நாம் நம் பெற்றோருக்கு பணமோ, புகழோ தேடித்தர தேவையில்லை மாறாக நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையை மட்டும் நாம் கொடுத்தால் போதுமானது! அவர்கள் ஆசியில் நாம் நம் வாழ்வென்ற பயணத்தின்  அடுத்த கட்ட நோக்கத்தை நோக்கி பயணிக்க புதியப்பாதை உருவாகும்.

அந்த புதிய பாதையின் பயணத்தில் சிவனே நமக்கு அணைத்துமாக வருவான்.( அவனே தோழனாக, அவனே குருவாக, )அந்த பயணம் மிகவும் அற்புதம் வாய்ந்ததாக அமையும்.

காதலன் தன் காதலியோடு பயணிக்கும் போது செலவிடும் நேரத்தைவிட,  மதுப்பிரியர்கள் மதுகுடிக்க செலவிடும் அந்த நேரத்தைவிட, கணவன் தன் மனைவி மீது அன்பு செலுத்தும் அந்த நேரத்தை விட, தந்தை தன் மகளை கொஞ்சும் நேரத்தை விட, தாய் தன் மகனை அரவணைக்கும் அந்த நேரத்தை விட மிக இனிமையாக  யாரும் புரிந்திட முடியாத ஒரு பேரிண்பத்தை நம்மால் உணர முடியும்.
தொடர்புடைய படம்                                                             அந்த பேரிண்ப மயக்கத்தில் நம்முள் சர்வமுமாய் உள்ள சிவம் இயங்குவதை நம்மால் உணர முடியும். இவ்வுலகில் உச்சப்பட்ச போதை ஒன்று இருக்கிறது என்றால் அது பேரண்பு எனும் போதைதான்.

இதை குறிக்கும் விதமாகத்தான்  உடலுறவை சிற்றின்பம் என்றும், இதைப் பேரிண்பம் என்றும் சொன்னார்கள்.

அந்த பேரிண்ப தொடக்கமாய் நாமும் சிவமாக  மாற முயற்சி செய்வோம். அந்த சிவத்தின் துனைக்கொண்டு!   நான் கடவுள் (அகம் பிரம்மாஸ்மி).

  மீண்டும் சந்திப்போம்!  



Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி