தன்னம்பிக்கை கொள்ளுங்கள்..

தன்னம்பிக்கை இந்த ஒற்றைச் சொல் மிகவும் சக்தி வாய்ந்தது. இது நம் வாழ்க்கையை மாற்றும் சக்தியை கொண்டது. இன்று மிகப்பெரும் பிரச்சனை வேலையின்மை அல்லது பிடித்த வேலை கிடைக்காமல் இருப்பது. இதனால் நாம் முயன்று, முயன்று இறுதியில் ஒரு வெறுப்பிற்க்கு ஆளாகி வாழ்க்கையை வெறுக்கும் நிலைக்கு செல்கிறோம். இதில் காதல் செய்பவர்கள் எனில் அவர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது.


 பிடித்த வேலையின்மை, பணப்பிரச்சனை, காதல் தோல்வி, தங்கை அல்லது அக்காவின் திருமணம், புதிதாக வீடு கட்ட வேண்டும், கடன் பிரச்சனை, வீட்டுப்பிரச்சனை, ஏறிக்கொண்டே இருக்கும் நம் வயதைப் பற்றிய  கவலை  இப்படி பல்வேறு பிரச்சனைகள் நம்மை வாட்டும். இதில் தன்னம்பிக்கை மட்டும் கொண்டால் மாறிவிடுமா? என்ன?.   மாறாது நிச்சயம் மாறாது?
பின் தன்னம்பிக்கை என்பதன் பொருள்தான் என்ன? 

அதற்கு முதலில் நாம் நம்மைப்பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும். நம்மில் பலருக்கும் உள்ள பிரச்சனை நாம் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் நமக்கு பிடித்தது எது?என்று இன்றும் பலருக்கு தெரியாது. இதனால் பாதைகள் தவறிச் சென்று தன் வாழ்க்கையின் பல்வேறு காலங்களை வீணாக இழக்கிறோம்.

நாம் தன்னமிக்கை கொள்ள வேண்டுமானால் முதலில் நம்மைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும். நமக்கு பிடித்தது எது ? அது ஏண் நமக்கு பிடிக்கிறது ? நாம் அந்த பிடித்த ஒன்றின் மீது நம் சிறுவயது   முதல்  எந்த அளவிற்கு ஈடுபாடு செலுத்தியுள்ளோம்.  என்பதை நாம் ஆராய முற்பட வேண்டும். அவ்வாறு நாம் முற்படும்போது நம் கேள்விக்கானப் பதில் நமக்கு கிடைக்கும்.


Related image





நாம் அவ்வாறு அத்துறையை தேர்ந்தெடுத்து விட்டோம், ஆனால் நாம் அத்துறையில் இல்லை, அல்லது அதில் இணையமுடியவில்லை என்றால் நாம் கவலைப்படக்கூடாது. நாம் அதற்கான நேரம் வரும்வரை காத்திருக்க வேண்டும். மேலும் நாம் அதற்கான முயற்சியை தொடர்ந்து அந்த துறைப்பற்றிய தகவல்களை அதிகமாக அறிந்துக் கொள்ள வேண்டும். மற்றவரைக் காட்டிலும் நாம் எந்த வகையில் அதில் சிறப்பாக அறிந்திருக்கிறோம் என்பதை நாம் சுயப்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் நம் வாழ்க்கையில் நாம் விரும்பாத பல்வேறு துயரங்கள், துரோகங்கள் நடைப்பெறலாம். அவை நமக்கு இறைவன் சொல்லிக்கொடுக்கும் பாடங்களாக நாம் எடுத்துக் கொள்ள  வேண்டும். நம் வாழ்க்கையின் ஒவ்வொரு கடினமான பகுதியும் நம்மை வாட்டும்போது நமக்கு பிடித்த வாழ்க்கைக்கு தேவையான பாடங்கள் இவை என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

நம் முயற்சியில் தளர்ச்சி இல்லாது இறைநம்பிக்கையுடன் தன்னம்பிக்கையோடு நம் பயணத்தை தொடர வேண்டும். இதன் ஒவ்வொரு பகுதியை நாம் ரசிக்க தொடங்கினால் நமக்கு கடினம் என்பது தெரியாது. நமக்கு வரும் துயரத்தை நாம் ரசிக்க துவங்கும்போது வாழ்க்கை நமக்கு பிடித்தமான ஒன்றை நமக்கு தர அது தயாராக இருக்கும். இந்த காலக்கட்டம் கொஞ்சம் கடினம் வாய்ந்ததுதான். இந்த காலக்கட்டத்தில் நாம் மற்றவர் மீது பொறாமை கொள்ளாமல் இருக்க வேண்டும்.

எக்காலத்திலும் நாம் மற்றவர் மீது பொறாமை கொள்வதோ, அவர்களுக்கு இடையூறு செய்வதோ, அவரைப்பற்றி பிறரிடம் குறைக்கூறுவதோ கூடாது. இது நம் பலத்தை நாம் இழப்பதற்க்கு வழிவகுக்கும். நமக்கு யாரேனும் இடையூறு செய்தாலும் நாம் அதற்க்கு பழிவாங்க முற்படாமல் நம் வழியின் பயணத்தை நோக்கி பயணிக்க வேண்டும். இவ்வாறு முற்படும்போது நம் எதிரிகள், துரோகிகள் யார் என்று நாம் சுலபமாக அடையாளம் காண முடியும்.

ஒருவேளை உங்கள் மணம் கக்ஷ்டப்படும்படி ஒருவர் உங்களை தொடர்ந்து தொல்லை செய்து வருகிறார் எனில் உங்கள் குறைகளை இறைவனிடம் முறையிடுங்கள். இறைவா எனக்கு தெரிந்தவரை நான் எந்த கெடுதலும் செய்யவில்லை இருப்பினும் எனக்கு தொல்லை தருகின்றனர் என சிவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் பிரச்சனை விலகி நீங்கள் செல்வதற்க்கு பாதை உருவாகும் அதை நீங்களே உணர முடியும்.


Image result for magamuni



நாம் விரும்பிய ஒன்று நமக்கு கிடைக்கவில்லையென்றாலோ, அல்லது தாமதமாகிறது என்றாலோ நாம் அதற்க்காகவோ, அல்லது வேறு ஒன்றிக்காகவோ, நாம் தயாராகி வருகிறோம் என்று அர்த்தம்.  இறைவன் நம்மை ஏதோ ஒன்றிற்க்காக தயார் செய்கிறான்.  எனவே அவன் விருப்பப்படி
இறைநம்பிக்கையுடன் கூடிய தன்னம்பிக்கை, விடாமுயற்சி நம் வெற்றி பயணத்தின் தொடக்கத்தை நமக்கு சிறப்பாகத்தரக் காத்திருக்கும். அந்த வெற்றிப்பயணத்தை நோக்கி.......

மீண்டும் சந்திப்போம்!

Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி