சொப்பனத்திலும் சுகமில்லை...

 கனவுகள் கவிதை பெற கவிதை உயிர்பெற உயிருக்குள் உன்னதமாய் அமர்வாய்....

சிரிப்புகள் நகைப்பூட்டும், சிந்தனை கிளர்ச்சியூட்டும்! என் மனம் தாலாட்டும்! எள்ளியே நகையாடும்! 

கிறுக்கனுக்கு கிறுக்கனாய்... கவிதைக்கோர் அரக்கனாய், கம்பனையும் கவிராட்சசனையும் கவிதை போர்தொடுக்க அழைப்பேன். 

எனை குழந்தையாக பாவித்து என்னுடன் விளையாடவே வருவர்.  

இன்றோ, சொப்பனத்திலும் சுகமில்லை...சுகந்தமும் வரவில்லை...

சேற்றில் சிக்கிய சப்பரமாய் ஊர் கூடி இழுத்தாலும் சற்றும் நகர்வதில்லை விடிந்து விடுகிறது காலைப்பொழுது.... 

Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி