உன்னை நினைத்தாலே சுகம்!
கவியே என்னை வெறுக்கும் போது நான் எப்படி கவி படைப்பேன்!
உன்னை பார்த்தால் சுகம்!
உன் பெயரைக் கேட்டால் சுகம்!
உன்னை நினைத்தால் சுகம்!
உனை பற்றி கவிதை எழுதும் போதெல்லாம் எழுத்துக்கள் துள்ளி குதித்து ஓடி வரும்...!
அவளுக்காக நீ தொடுக்கும் பாமாலையில் என்னையும் ஒரு மலராக இணைத்துக் கொள் என்று...
ஆனால் இன்றோ, நீ சொன்ன ஒற்றை வார்த்தைக்காக
என் எழுத்துக்கள் எல்லாம் கண்ணீர் வடிக்கின்றன....
அன்பை அருமருந்தாக்கி அதிரசமாய் உனக்கு ஊட்ட அறவே பிடிக்கவில்லை என்கிறாய்!
கடந்து போன வாழ்க்கையில் மீண்டும் கால் பதிக்க துடிக்கிறாய்...
காதலன், கணவன் ஆவதெல்லாம் கடவுள் தந்த வரம்!
நான் கடவுள் தந்த வரமாய் உன்னை நினைத்தேன்!
நினைக்கிறேன்!
நினைத்துக் கொண்டே இருக்கிறேன்!
நீயோ........
எப்படி சொல்வேன் என் எழுத்துக்களிடம் நீ என்னை வெறுக்கிறாய் என்று...!
அவையெல்லாம் என்னை விட உன் மீதுதான் அதிக அன்பு காட்டுகின்றன...!
உன்னைப் பற்றி எழுதும் போதெல்லாம் இதை வைத்துக் கொள்! இதை வைத்துக் கொள்!
கண்ணே! மணியே! கற்கண்டே! கவியமுதே! கலைவாணியே! கனியே! காவியமே! தேனே! திரவியமே! என வார்த்தைகளை அள்ளி, அள்ளிக் கொடுக்கும்!
என் சோகம் என்னோடு போகட்டும்...
அவைகளுக்கு தெரிய வேண்டாம்.
என் எழுத்துக்கள் எப்போதும் உன்னை காதலித்துக் கொண்டே இருக்கும்...!
நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்!
எனக்குத் தெரியும்!
என் எழுத்துக்களின் அன்பை உன்னால் உதாசீனப்படுத்தவே முடியாது!
Comments
Post a Comment