Posts

Showing posts from January, 2021

தம்பானு உணக்காக..

Image
                                               தம்பானு உணக்காக.. ஆவிப்பறக்கும் இட்லி அதனுடனே சட்னி, சிறு வெங்காயத்தோசை, சின்னதாய் ஒரு சினுங்கல், கூத்தடிக்க சிறு கூட்டம் , கும்மாளமாய் நண்பர்கள் குடும்ப கவலையில்லா குதூகலத்தில் மனம் கூத்தாட .. அப்பாவின் கையில் அக்காக்களின் திருமணம் இனிதே நடைப்பெற்றது. ஏதோ அவ்வப்போது வேலை..பெரிதாக ஒன்றும் சாதிக்கவில்லை.. இருந்தும் என் மனம் சாதிக்க துடிப்பதை நிறுத்துவதேயில்லை.. காலம் கடந்தோடியது.. இதற்கிடையில் காதல்.. அதுவும் கைக்கூடவில்லை.. இருந்தும் மனம் விடுமா என்ன?  மற்றுமொருத்தி மனதிற்கு இதமாய் மலர்கணைகள் தொடுத்தால், அம்பு பட்டு துடிக்கும் அன்னப்பறவையாய் துடிக்கலானேன்.. வாடிய செடியில் துளிர்விட்டு பூக்கிறது புது ரோசா.. முள்தொடாமல்  ரோசாவை பறித்து சூட்டிவிட நினைக்கிறேன். முட்டாள்தனமான சிந்தனைதான்.. முடியுமா என்ன? திரும்பி பார்க்கிறேன்.. காலங்கள் கடந்தோடிய தருணம் நினைவுக்கு வருகிறது.. இதோ  டோக்கன் வாங்க  நானும் நிற்கிறேன் .. முதிர்கண்ணன்கள் வரிசையில்  சேருவதற்கு.. நானும் கரையேற கலங்கரை விளக்கமாய்..கடவுளே வருகிறான்..  வெளிச்சமும் தருகிறான்.. அவன் காட்டிய

அவள் வருவாளா..!

Image
                                              அவள் வருவாளா..! அன்புடைய தலைவி அழகாய் வருவாளோ..!இல்லை ஆளில்லா இடத்தில் வரும் அரவம் போன்றவள் வருவாளோ.! இன்பம் பொங்கிட இசைமகள் வருவாளோ..! இல்லை ஈகையில்லா இழிமகள் வருவாளோ..! உயிருக்கு உயிர்கொடுக்க  உத்தமி வருவாளோ..!இல்லை  உயிரெடுக்க வேண்டுமென்றே..! ஊதாரி வருவாளோ..! என் எண்ணமெல்லாம் ஈடேற ஏழ்மை உணர்ந்தவள், ஏணியாய் வருவாளோ..!இல்லை  அவள் ஐராவதம் யானையாய் வருவாளோ..! கண்ணழகி மங்கையவள் கவிதையாய் வருவாளோ..!இல்லை கவியறியா  கோமகள்  கடுங்கோபி வருவாளோ..! காவியத்தலைவி அவள் காதல் கொண்டு வருவாளோ..!இல்லை கண்ணுக்கு கண்ணாக காந்தாரி வருவாளோ..!                                    மாதவி மணம் கொண்ட மங்கை அவள் வருவாளோ..!இல்லை  மலர்கணைகள் எனை தொடுக்க மஞ்சரி வருவாளோ..! நலமிழந்த நங்கை அவள் நாயகியாய் வருவாளோ..! இல்லை நான் நலம்பெறவே நாயகியாய் அம்பிகை வருவாளோ..! மதுவருந்தும் மங்கையவள் மாருதியில் வருவாளோ..!இல்லை மனமகிழும் மாதேவி, பூதேவியாய் வருவாளோ..! மொழியறியா முத்தமிழின் முழுமதியாய் வருவாளோ..! இந்த சிவன் மீது காதலுற்ற சிவகாமி வருவாளோ..! கனிவோடு பேசிடவே, கைம்பெண்ணாய் வருவா

கவியரசு கண்ணதாசன்

Image
                                                         கவியரசு கண்ணதாசன்   நமக்கு பிடித்தவர்களிடம் நாம் பேசுவது   ஒரு சுகம் என்றால், நமக்கு பிடித்த நபர் பற்றி பேசுவது மற்றொரு சுகம் . அந்த வகையில் இந்த வாரம் ஒளிப்பரப்பான நீயா நானாவில் கவியரசு கண்ணதாசன் எனும்   தலைப்பில் அறிஞர்கள், எழுத்தாளர்கள், ரசிகர்கள் என பலரும் கலந்து கொண்டு தாங்கள் கண்ணதாசனின் வரிகளில்   வீழ்ந்த இடங்களை மகிழ்வோடு   பகிர்ந்து கொண்டனர்.       ஒவ்வொருவரும் தாங்கள்   உணர்ந்து மகிழ்ந்த அந்த அழகான தருணங்களை பகிர்ந்து கொண்டனர். அவர்களோடு சேர்ந்து நானும் கண்ணதாசனோடு கரைந்து   போனேன்.    அதில் அருண் என்ற அன்பர் கண்ணதாசனின் ஜனனம் எனும் கவிதையை   வாசிக்க தொடங்கினார். ஆஹா! அதை கேட்பதுதான் எத்தனை இன்பம்,.. இதோ ஜனனம்   உதயமாகிறது……   சங்கமத்தில் பங்குகொள்ளும் மங்கைமலர்ப் பங்கயத்தில் தங்கமணிப் பிள்ளை ஒன்று ஜனனம் -அது தங்கடமை தீர்க்குமுனம் மரணம் ! சேற்றிலொரு செங்கழுநீர் ஏற்றுமணித் தீபமெனச் சாற்றிவைத்த வண்ணமலர் ஜனனம் -அது தங்கடமை தீர்க்குமுனம் மரணம் ! சேற்றிலொரு செங்கழுநீர் ஏற்றுமணித் தீபமெனச் சாற்றிவைத்

பாவக்கதைகள்

Image
 பாவக்கதைகள் நான்கு வெவ்வேறு கதைகள்  மனித நேயம் எனும் ஒரே கோட்டில் பயணம் செய்யும் வலி மிகுந்த உணர்வுகளால் நம்மை காட்சி வழியே கடத்தும் படம்தான் பாவக்கதைகள். பெண்களின் வலியையும், வாழ்க்கைப் போராட்டங்களையும், பெண்விடுதலையின் அவசியத்தையும் கூறும் படம்தான் இந்த பாவக்கதைகள். முதல் கதை: 1980 காலகட்டத்தில் மதமாறிய காதல்,  திருநங்கையாக மாறிவரும் சத்தாரின் மனநிலை, அவன் எதிர்கொள்ளும் சமூகப்பிரச்சனைகள், மனப்போராட்டம், மூன்று பெண்களுக்கு அண்ணனாக பிறந்த சத்தார் பெண்ணாக மாறுவதை ஏற்றுக்கொள்ள முடியாத அவன் பெற்றோரின் மனநிலை, நண்பன் தங்கம் மீது தான் கொண்ட காதலுக்காக (அன்பிற்காக) தன்னையே அர்ப்பணிக்கத் துணியும் தியாகம் இவற்றையெல்லாம் மிக அழகாக அந்த காலத்தின் சூழ்நிலைக்கேற்ப அழகுப்பட  சொல்லியிருக்கும் கதைதான் இப்படம். படத்தில் சர்த்தாரின் வலியை  நம் வலியாக காட்சிபடுத்தியிருக்கிறார் இயக்குநர் சுதா கொங்குரா.  இரண்டாம் கதை: ஆதிலட்சுமி,ஜோதிலட்சுமி இருவரும் ஒன்றாகப் பிறந்த இரட்டையர்கள். இதில் ஆதிலட்சுமி அவள் விட்டில் வேலைப்பார்க்கும் டிரைவர் மீது காதல் கொள்கிறாள். அவனை திருமணம் செய்ய விரும்பி அப்பாவிடம் தன் விரு

Love- காதல்

Image
                        காதல் (LOVE) காதல்- உள்ளத்து மகிழ்வின் பேரின்பம். காதல்- இதயத்தை சிவந்திடச்செய்யும் இனிப்பான தாம்பூலம். காதல்- ஏதோ வெற்றிக்கொண்ட பூரிப்பு காதல்- தன்னம்பிக்கை கொடுக்கும் தனிப்பெரும் சக்தி காதல்- சித்தனையும், பித்தனாக்கும். பித்தனையும், சித்தனாக்கும். காதல்- வாழ்வின் பரிபூரணம். காதல்- கண்கள் பேசிக்கொள்ளும் மவுன மொழி காதல்- ஒரு சுகமான வலி காதல்- கவிதைகளின் ஆரம்பம். காதல்- ரசனையின் உச்சப்பட்சம். காதல்- ஒரு வித சுகமான போதை காதல்- இருமனங்கள் பரிமாறிக்கொள்ளும் மன விருந்து காதல்- நினைத்தாலே இனிக்கும். காதல்- எதிர்பாலின வெற்றி காதல்- இரு இதயங்களின் பறிதவிப்பு காதல்- நினைத்தாலே வலிக்கும். காதல்- காமத்தூண்டலின் மின் பொறி. காதல்- பற்றிகொண்டே வரும் பேரிளம்தீ காதல்- வாழ்வின் மிகப்பெரிய திருப்புமுனை. காதல்- கண்ணீரின் அபிஷேகம். காதல்- அழமுடியாத ஆழ்மனத்துயரம் காதல்- பேரண்பின் வெளிப்பாடு  காதல்- தன்னையே தொலைத்து,தானும் தொலைந்து போதல் காதல்- கவித்துவத்தின் முதற்புள்ளி காதல்- கற்பனையின் சாம்ராஜ்ஜியம் காதல்- காற்றின் மொழி அறிதல் காதல்- வலியை சுமக்கும் வலி காதல்- மறக்கமுடியாத மன