தம்பானு உணக்காக..

                                               தம்பானு உணக்காக..


ஆவிப்பறக்கும் இட்லி அதனுடனே சட்னி,

சிறு வெங்காயத்தோசை, சின்னதாய் ஒரு சினுங்கல்,

கூத்தடிக்க சிறு கூட்டம் , கும்மாளமாய் நண்பர்கள்

குடும்ப கவலையில்லா குதூகலத்தில் மனம் கூத்தாட ..

அப்பாவின் கையில் அக்காக்களின் திருமணம் இனிதே நடைப்பெற்றது.

ஏதோ அவ்வப்போது வேலை..பெரிதாக ஒன்றும் சாதிக்கவில்லை.. இருந்தும் என் மனம் சாதிக்க துடிப்பதை நிறுத்துவதேயில்லை..

காலம் கடந்தோடியது.. இதற்கிடையில் காதல்.. அதுவும் கைக்கூடவில்லை.. இருந்தும் மனம் விடுமா என்ன? 

மற்றுமொருத்தி மனதிற்கு இதமாய் மலர்கணைகள் தொடுத்தால், அம்பு பட்டு துடிக்கும் அன்னப்பறவையாய் துடிக்கலானேன்..

வாடிய செடியில் துளிர்விட்டு பூக்கிறது புது ரோசா..

முள்தொடாமல்  ரோசாவை பறித்து சூட்டிவிட நினைக்கிறேன்.





முட்டாள்தனமான சிந்தனைதான்.. முடியுமா என்ன? திரும்பி பார்க்கிறேன்.. காலங்கள் கடந்தோடிய தருணம் நினைவுக்கு வருகிறது..

இதோ  டோக்கன் வாங்க  நானும் நிற்கிறேன் ..

முதிர்கண்ணன்கள் வரிசையில்  சேருவதற்கு..

நானும் கரையேற கலங்கரை விளக்கமாய்..கடவுளே வருகிறான்..

 வெளிச்சமும் தருகிறான்.. அவன் காட்டிய வெளிச்சத்தில்,

 நானும் பறவையாய் வெகுதூரம் பறந்து வந்துவிட்டேன்..

செல்வமோ கொட்டி கிடக்கிறது. நானும் கண்டுகொண்டேன்.

ஏனோ என் மனமோ கீழே இறங்க மறுத்து, வானையே சுற்றி சிறகடிக்கும் பறவையாய் திரும்ப துடிக்கிறது..

ஒருபுறம் பிறவிப்பெருங்கடன்(தாய்,தந்தை பற்றிய நினைவு), மறுபுறம் ரோசா வாடிவிடாமல் தண்ணீர் விடவேண்டும் என்று.. 

நான்  செய்வதொன்றும் அறியாமல்  திகைத்து போய் நிற்கிறேன்..

என் சிறகுகள் வலி தாங்கமுடியாமல் துடிக்கிறது.. ஒருக்கட்டத்தில் சோர்ந்து போயி அந்த செல்வம் இருக்கும் இடத்தில் வீழ்ந்துவிட்டேன் சுயநினைவின்றி.. 

முகத்தில் யாரோ தண்ணீர் தெளிக்க கண்னை திறந்து பார்க்கிறேன்..

எந்நலத்தில் அக்கரைக்கொண்ட நண்பர்கள்.. ஏனோ மனம் சிறிது ஆறுதல் அடைகிறது.. என்னைவிட அவர்களுக்கு என் மேல் அதிக நம்பிக்கை நான் சாதித்து விடுவேன் என்று..!

எனக்கு மட்டும் அந்த எண்ணம் இல்லையா என்ன? என் மனம் என்னையே கேள்வி கேட்கிறது..!  சிந்திக்கிறேன்..! சிந்திக்க தொடங்குகிறேன்..!

அவர்களுக்கோ நான் விளக்கேற்றிவிடுவேன் எனும் நம்பிக்கை..!




ஏனெனில் அந்த விளக்கும், அதை ஏற்றுவதற்கான  தீப்பெட்டியும் என் கையிலேயே இருக்கிறது..

ஆம்.! தம்பானு நிச்சயமாக விளக்கேற்றுவான்.. அதில் எள்ளளவும் சந்தேகம்  வேண்டாம்,.  ஏனெனில் அவன் ஏற்றப்போகும் விளக்கு அவனுக்கு மட்டும் வெளிச்சம் தரப்போவதில்லை.. அவனுடன் வரும் அவன் அறியா முகங்களுக்கும்தான்..!

அந்த விளக்கின் வெளிச்சத்திற்காக நாங்களும் காத்திருக்கிறோம்..!


  நன்றி! வணக்கம்!!

Comments

  1. ஊக்கம் தரும் வார்த்தைகள் கொண்ட பதிவு. நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு நன்றி 🙏

      Delete

Post a Comment

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி