Love- காதல்
காதல் (LOVE)காதல்- உள்ளத்து மகிழ்வின் பேரின்பம்.
காதல்- இதயத்தை சிவந்திடச்செய்யும் இனிப்பான தாம்பூலம்.
காதல்- ஏதோ வெற்றிக்கொண்ட பூரிப்பு
காதல்- தன்னம்பிக்கை கொடுக்கும் தனிப்பெரும் சக்தி
காதல்- சித்தனையும், பித்தனாக்கும். பித்தனையும், சித்தனாக்கும்.
காதல்- வாழ்வின் பரிபூரணம்.
காதல்- கண்கள் பேசிக்கொள்ளும் மவுன மொழி
காதல்- ஒரு சுகமான வலி
காதல்- கவிதைகளின் ஆரம்பம்.
காதல்- ரசனையின் உச்சப்பட்சம்.
காதல்- ஒரு வித சுகமான போதை
காதல்- இருமனங்கள் பரிமாறிக்கொள்ளும் மன விருந்து
காதல்- நினைத்தாலே இனிக்கும்.
காதல்- எதிர்பாலின வெற்றி
காதல்- இரு இதயங்களின் பறிதவிப்பு
காதல்- நினைத்தாலே வலிக்கும்.
காதல்- காமத்தூண்டலின் மின் பொறி.
காதல்- பற்றிகொண்டே வரும் பேரிளம்தீ
காதல்- வாழ்வின் மிகப்பெரிய திருப்புமுனை.
காதல்- கண்ணீரின் அபிஷேகம்.
காதல்- அழமுடியாத ஆழ்மனத்துயரம்
காதல்- பேரண்பின் வெளிப்பாடு
காதல்- தன்னையே தொலைத்து,தானும் தொலைந்து போதல்
காதல்- கவித்துவத்தின் முதற்புள்ளி
காதல்- கற்பனையின் சாம்ராஜ்ஜியம்
காதல்- காற்றின் மொழி அறிதல்
காதல்- வலியை சுமக்கும் வலி
காதல்- மறக்கமுடியாத மன வேதனை
காதல்-வாழ்வின் பெருந்தேடல்
காதல்- வலியை கொடுத்து வலியை பெறுவது
காதல்- அழிக்கமுடியாத ஓவியம்
காதல்- சித்திரம் பேசும் சிறுபஞ்ச பூதம்
காதல்- சாதி, மதம் கடந்த மனிதநேயம்
காதல்- ஒரு அணையா விளக்கு
காதல்- பண்படுதலின் உயர்நிலை
காதல்- எதிர்பார்ப்பில்லா தியாகம்
காதல்- திருமணத்தின் தொடக்கம்
காதல்- அன்பால் அன்பை வெற்றிக்கொள்வது
காதல்- பிரிதலின் நினைவில் வாழ்தல்
காதல்- கடுந்துயரம்
காதல்- மெய்மறந்த நிலை
காதல்- பெயர் கேட்டலின் இன்பம்
காதல்- முடிவில்லா தொடக்கம்
காதல்- நேசத்தின் பாசம்
காதல்- தீரா வேட்கையின் மோகம்
காதல்- கெஞ்சலின் கொஞ்சல்
காதல்-கொஞ்சலின் கெஞ்சல்
காதல்- சத்தமில்லா ஓசை
காதல்- மாபெரும் வெள்ளொளி
காதல்- வெட்கத்தின் உச்சம்
காதல்- மனமயக்கும் சிறு புன்னகை
காதல்- வருடலின் நெருடல்
காதல்- இதயம் வேகும் பனிப்பாறை
காதல்- கடலளவின் நேசிப்பு
காதல்- மலையளவின் வெறுப்பு
காதல்- ஒன்றுக்குள்ளும் அடக்க முடியாத அனைத்தும் அந்த ஒன்றுக்குள் அடங்கும் அதிசயம். காதலிக்கவே கூடாது, காதலிக்காமல் இறக்கவும் கூடாது.
காதல் ஒரு முடிவில்லாத தொடர் வாக்கியம் . முதல் வாக்கியத்தை அறிந்தவர் உண்டு, முற்று வாக்கியத்தை அறிந்தவர் இல்லை. பூமித்தோன்றலின் முதலாக தோன்றி பல பரிணாமம் பெற்று இன்றும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. நாமும் வளர்த்து கொண்டே இருக்கிறோம். வளர்த்துக்கொண்டே இருப்போம்.
Comments
Post a Comment