அவள் வருவாளா..!


                                              அவள் வருவாளா..!


அன்புடைய தலைவி அழகாய் வருவாளோ..!இல்லை

ஆளில்லா இடத்தில் வரும் அரவம் போன்றவள் வருவாளோ.!

இன்பம் பொங்கிட இசைமகள் வருவாளோ..! இல்லை

ஈகையில்லா இழிமகள் வருவாளோ..!

உயிருக்கு உயிர்கொடுக்க  உத்தமி வருவாளோ..!இல்லை 

உயிரெடுக்க வேண்டுமென்றே..! ஊதாரி வருவாளோ..!

என் எண்ணமெல்லாம் ஈடேற

ஏழ்மை உணர்ந்தவள், ஏணியாய் வருவாளோ..!இல்லை 

அவள் ஐராவதம் யானையாய் வருவாளோ..!

கண்ணழகி மங்கையவள் கவிதையாய் வருவாளோ..!இல்லை

கவியறியா  கோமகள்  கடுங்கோபி வருவாளோ..!

காவியத்தலைவி அவள் காதல் கொண்டு வருவாளோ..!இல்லை

கண்ணுக்கு கண்ணாக காந்தாரி வருவாளோ..!




                                  

மாதவி மணம் கொண்ட மங்கை அவள் வருவாளோ..!இல்லை 

மலர்கணைகள் எனை தொடுக்க மஞ்சரி வருவாளோ..!

நலமிழந்த நங்கை அவள் நாயகியாய் வருவாளோ..! இல்லை

நான் நலம்பெறவே நாயகியாய் அம்பிகை வருவாளோ..!

மதுவருந்தும் மங்கையவள் மாருதியில் வருவாளோ..!இல்லை

மனமகிழும் மாதேவி, பூதேவியாய் வருவாளோ..!

மொழியறியா முத்தமிழின் முழுமதியாய் வருவாளோ..!

இந்த சிவன் மீது காதலுற்ற சிவகாமி வருவாளோ..!

கனிவோடு பேசிடவே, கைம்பெண்ணாய் வருவாளோ..!

அவள் மகுவோடு மனம் பேச மஞ்சத்தில் வருவாளோ..!

கார்கூந்தல் பெண்ணொருத்தி கற்கண்டாய் வருவாளோ..!

நான் கறையேற கவிபுகட்டும் கலைமகள் வருவாளோ..!

என் விதிமாற்றும் விதியாய் திருமகள் வருவாளோ..!



அலைமகளோ..! இல்லை..! மலைமகளோ..!

அவளோ..! இவளோ..!  எவளோ..!

 அவள் வருவாளா..!













Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி