எனை மன்னிப்பாயா?
நானும் ஒரு சல்லி பயலானேன்....
அன்பின் தேவை ஊற்றெடுக்கும் போது நான் மட்டும் என் செய்வேன்?
பணம்! பணம்!! பணம்!!! என்று கொல்லி வாய் பிசாசாய் அலையும் இச்சமூகத்தில் நான் மட்டும் விதிவிலக்கா என்ன?
இயலாமையின் உச்சம்... என் ஆற்றாமையின் அநீதி...
இப்படித்தான் வாழ வேண்டும் என போதித்த சமூகம்! நான் வளர்ந்த பிறகு, இப்படி எல்லாம் இங்கே வாழ முடியாது என போதிக்கும் போது நான் என்செய்வேன்?
என் ஆதியும் அந்தமும் நீ தான்!
தீப்பிழம்பாய் கக்கி விட்டேன் வார்த்தைகளை....
ஆயிரம் மருந்திட்டாலும் ஆறாத வடுதான்...
நான் அன்போடு பேச அழைக்கும் போதெல்லாம் அணுகுண்டின் கதிர்வீச்சாய் பதறுகிறாய்...
உன் பதற்றம் என் மனதை கசக்கிப் பிழிகிறது... கண்களில் கண்ணீர் வர மறுக்கிறது... என் பாவக் கணக்கு கூடிக் கொண்டே போகிறது.... அப்பா எனை மன்னிப்பாயா?
Comments
Post a Comment