இறைவனைக் காதலியுங்கள்
உணக்கென உருகினேன், உயிரில் கரைகிறேன்,
அனலென எரிகிறேன் , அலையாய் உடைகிறேன்.
இப்பாடலின் பொருள் இறைக்காதலில் நிச்சயம் சாத்தியம் ஆகும்
.
இறைத்தேடல் உள்ள அனைவரும் முதலில் செய்ய வேண்டிய ஒன்று காதல். இறைவனை காதலியுங்கள் உங்கள் காதலை ஏற்க இறைவன் காத்துக்கொண்டிருப்பான். இந்த காதலில் மட்டும்தான் தோல்வி என்பதே கிடையாது. நீங்கள் மனைவியை காதிலிப்பது போன்று, குழந்தைகளை காதலிப்பது போன்று, காதலியை காதல் செய்வது போன்று, இறைவனை காதல் செய்யுங்கள். பக்திமார்க்கத்தில் ஈடுப்பட்டுள்ள அன்பர்களை இது ஞான மார்க்கத்திற்க்கு அழைத்துச் செல்லும்.
இதை மாணிக்கவாசகர் இவ்வாறு கூறுகிறார்.
”தித்திக்கும் சிவபெருமான் தானே வந்து
என் உள்ளம் புகுந்து அருள் செய்தான்
தவம் செய்தேன், தவம் செய்தேன் அருள் செய்தான் ”
என்கிறார்.
இறைவன் நம் உடம்பில் உயிராக இருக்கிறான். இதனை உணர்ந்து வள்ளலார் கூறிய ஜீவகாருண்யத்தை பின்பற்ற முயற்சி செய்தால் நாம் அதன் பரிபூரணத்தை உணரமுடியும்.
இந்த உள்ளுணர்வை அவரவர்கள் மட்டுமே உணர முடியும். மற்றவர்களுக்கு எடுத்துக் கூற இயலாது.
நீங்கள் ஒருமுறை காதல் செய்து விட்டால், இறைவன் உங்கள் அன்பின் வசம் இருப்பான். இதற்கு வயது வரம்பு கிடையாது. யார் வேண்டுமானாலும் காதல் செய்யலாம். ஆண், பெண், சிரியவர்கள், பெரியவர்கள், முதியவர்கள் என அனைவரும் இறைவனை காதல் செய்யலாம்.
இதற்கென விதிமுறைகள் எதுவும் கிடையாது.
இறைக் காதலில் நீங்கள் விரும்பும் அணைத்தையும் அடைய முடியும்.
மீண்டும் சந்திப்போம்.......
Comments
Post a Comment