காமத்தை அறிய முற்படுங்கள்
இறைவன் ஒருவனே, அவனுக்கென்று இடைத் தரகர்கள் யாரும் கிடையாது. நீங்கள் அவனை எவ்வாறு நினைக்கிறீர்களோ அவன் அவ்வாறு உங்களுக்கு காட்சி தருவான். பிறப்பால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. அவனது படைப்பில் ஓர் அறிவு உயிரினம் முதல் ஆறு அறிவு பெற்ற மனிதன் வரை அனைவரும் சமம்.
நாம் வழிவழியாக பின்பற்றி வரும் பக்தி மார்க்கமான சடங்குகள், வழிப்பாடுகள், அனைத்தும் நம் முன்னோர்கள் வழியாக பின்பற்றி வந்தவை. அவற்றை விட்டு வெளியே வருவது என்பது மிகவும் கடினமான ஒன்றுதான். நான் கோவிலுக்கு செல்கிறேன். அதன் மகத்துவத்தை உணர்கிறேன் , அதை இல்லை என்று நீங்கள் எவ்வாறு கூறலாம். என்று நீங்கள் கேட்கும் கேள்வி நியாமானதே! உண்மையில் நீங்கள் கோவிலுக்கு சென்றதால் அந்த மகத்துவத்தை உணரவில்லை. நீங்கள் இறைவனை பற்றி உங்கள் மனதில் நினைத்ததால் அந்த மகத்துவத்தை உணர்ந்தீர்கள் என்பதே உண்மை.
இதன் உண்மைத்தன்மையை சிவவாக்கியர் இவ்வாறு கூறுகிறார்.
”நட்டக்கல்லை தெய்வம் என்று நாலு புக்ஷ்பம் சாத்தியே!
முனமுன வென சொல்லும் மந்திரம் ஏதேடா!
நட்டக்கல்லும் பேசுமோ? நாதனும் உள் இருக்கையில் !
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ! ”
இறைவன் நம் உடம்பில் உயிராக இருக்கிறான். அவனை நம் உள்ளே காணாது வெளியே தேடுவது அறியாமை என்கிறார்.
சரி கோவிலுக்கு ஏன் செல்ல அவசியம் இல்லை என்று கூறுகிறார்கள் ? நாம் அனைவரும் மனிதப்பிறப்பு எடுத்ததே வீடுபேறு( முக்தி - மறுப்பிறப்பு இல்லாமல் வாழ்வது) அடைய வேண்டும் என்பதற்காகத்தான். நமக்கு இருக்கும் காலம் என்பது மிகவும் குறைவானது. அப்படி நீங்கள் பக்திமார்க்கத்தில் ஈடுப்பட்டால் இருதியில் என்ன நடக்கும்? ஒன்றும் நடக்காது நீங்கள் பிறந்த பயனை அடைய மாட்டீர்கள். மாறாக என்ன கிடைக்கும்?
ஒரு சற்குரு வாய்க்கும் பராபரமே! ( நீங்கள் முக்தி அடைய ஒரு குரு வாய்ப்பார்) அவ்வளவுதான்! என்று நமக்கு முன்பு முக்தி அடைந்தவர்கள் கூறியுள்ளனர். இதை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் இதன் உண்மைத்தன்மை விளங்கும்.
நீங்கள் யார் எதைக் கூறினாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளாதீர்கள் ! உங்கள் அறிவுக்கு உட்படுத்தி அதனை ஆராயுங்கள். அப்பொழுது உங்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும்.
பெரும்பாலான அன்பர்களுக்கு ஒரு சந்தேகம் உண்டு? இங்கு நாம் இந்த பயணத்தை மேற்கொள்ள குரு ஒருவர் வேண்டும். நான் அவரை எவ்வாறு தேடுவேன் என்பதே! உண்மையில் உங்களுக்கு குரு என்ற ஒருவர் தேவை கிடையாது. நீங்கள் யாரிடமும் சென்று குருதீட்சை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று மட்டுதான். இறைவனை நினைத்து பிரார்த்தனை செய்வது, அவனிடத்தில் அன்பு செலுத்துவது, அப்படி நீங்கள் செய்யும் பட்சத்தில் அந்த பரமனே உங்களுக்கு குருவாக யாரோ ஒருவர் மூலம் உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்வார்.
அடுத்ததாக நமக்கு இங்குவரும் ஒரு மிகப்பெரிய கேள்வி காமம், இதை கடப்பது என்பது சவாலான ஒன்று ! நான் இறைவனை நினைக்கும் போது என் மனதில் தேவையில்லாத எண்ணங்கள் தோன்றுகிறது, நான் எதை நினைக்க கூடாது என்று நினைக்கிறேனோ ? அதுவே என் கண் முன் வருகிறது. இதிலிருந்து எவ்வாறு மீள்வது?
ஒன்றை நீங்கள் முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும், காமம் என்பது கடவுளுக்கு எதிரானது அல்ல!
காமமும் ,கடவுளும் ஒன்றே !
கடவுளை அறியும் முன் முதலில் காமத்தை அறிய முற்படுங்கள், காமம் சார்ந்த புத்தகங்களை தேடி,தேடிப் படியுங்கள் . திருமூலர் எழுதிய பரியங்க யோகம் என்னும் நூல் மிகவும் உதவிகரமாக இருக்கும். காமத்தை பற்றிய முழுப் புரிதல் வரும் வரை அதனை சார்ந்து சிந்தியுங்கள் அப்போது உங்களுக்கு இப்பூமியில் நடக்கும் மனித பிறப்புக்கான காரணம் புரியும்.
இதை அறிந்த முன்னோர்கள் காமத்தை சக்தியின் வடிவமாக அமைத்தார்கள் , சக்தி என்றால் காமம் என்ற பொருள் உண்டு.
நம் உடலின் ஒருபகுதி சக்தியாகவும், (காமமாகவும்)மறுப் பகுதி சிவமாகவும்( ஏதும் இல்லா நிலை ) இயங்குகிறது.
நாம் சிவத்தை அடைய வேண்டும் என்றால் , சக்தியை கடந்தே ஆக வேண்டும்.
இறைவன் படைப்பில் ஆண் உடல் பலம் மிக்கவன் என்றால், பெண் மனோ பலம் மிக்கவள்!
இருவரும் சமமானவர்கள் ஆவர் ! இதனை விளக்கத்தான் அர்த்தநாரிஸ்வரர் (ஆண் பாதி, பெண் பாதி உருவம்) படைத்தார்கள்.
காமமாகிய சக்தி, சிவமாகிய இறைவனை( நமது உயிர், ஆன்மா) ஒன்றியே இருக்கும். சக்தியை ஒருப்போதும் சிவத்தை விட்டு பிரிக்க இயலாது. ஆனால் இச்சக்தியை இறைவன் துனையோடு நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
இந்த சக்தியை நம் கட்டுப்பாட்டுக்குள் வைக்க நாம் என்ன செய்ய வேண்டும்? எதை பின்பற்ற வேண்டும்?
மீண்டும் சந்திப்போம்.........

Comments
Post a Comment