உடலினை உறுதி செய்
காமமாகிய சக்தியை நாம் கடப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றுதான். நாம் என்னதான் நம்மை கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், கண் இமைக்கும் நேரத்தில் நம் கவனத்தை சிதற செய்து நம்மை வீழ்த்தும் சக்தி அதற்கு உண்டு. இந்த காமத்தை கண்டு அஞ்சாத சித்தர்களோ, மகான்களோ கிடையாது.
வள்ளலார் இது குறித்து வேண்டும் போது
மரூஉ பெண்ணாசை மறக்க வேண்டும் என்கிறார்.
( அதாவது மறு ஜென்மம் ஒன்று இருந்தால் அதில் பெண்ணாசையை மறக்க வேண்டும் என்கிறார்.)
வள்ளலார் முதற்கொண்டு இந்த காமத்திற்கு அஞ்சாதவர்களே கிடையாது.
நமக்கு முன்பு முக்தி அடைந்த அனைவருமே இந்த காமத்தை நன்கு அறிந்து அதை மற்றொரு வழியில் மடைமாற்றம் செய்தனர்.
நான் கடவுளை வேண்டுகிறேன்,பிரார்த்தனை செய்கிறேன் ,இருந்தும் என்னால் காமத்தை தவிர்க்க முடியவில்லை, ஆனால் நான் அதை தவிர்க்க விரும்புகிறேன்.
நான் இதை மடைமாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும்? இக்கேள்வி அனைவருக்கும் எழுவது இயல்பே!
நாம் முதலில் நம் உடலில் காமம் வரும் நேரத்தில் ஏற்படும் ரசாயண மாற்றத்தை அறிய முற்பட வேண்டும். அவ்வாறு முற்படும் போது சில விசயங்கள் நமக்கு விளங்கும். அதாவது காமம் வருவதற்கு முன்பு நம் உடலில் ஒரு வெப்பம் தோன்றும், இந்த வெப்பமானது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை செல்லும் போது மூளை இயக்கம் அமைதியான நிலையில் மனமானது இயங்கத் தொடங்கும். இந்த நிலையில்தான் நாம் நம்மை மறக்கிறோம்.
இந்நிலை வரும்போது நாம் முதலில் அன்பாகிய சிவத்தை நினைக்க வேண்டும். கண்மூடி சிவத்தை நினைக்க சக்தியாகிய காமம் மெல்ல இறங்கும். நாம் நம் இயல்பு நிலைக்கு வருவதை உணரலாம்.
இது உடனே நம் கட்டுக்குள் வராது, இதற்கு முதல் முயற்சியாக நாம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஜிம்மிற்கு செல்லலாம். அல்லது வீட்டிலேயே யோகா பயிற்சியில் ஈடுபடலாம். யோகா பயிற்சியில் ஈடுபடும் போது நாம் சில மாற்றங்களை உணரலாம்.
நமக்கு காமத்தை வெல்ல உறுதுணையாக இந்த உடற்பயிற்சிகள் உதவி புரியும். நாம் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும் போது ( ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் குறைந்த பட்சம் செய்ய வேண்டும் ) நம் மனமானது நம் கட்டுக்குள் வர முயற்சிக்கும். அந்த நிலையில் சிவனை அழைக்கும்போது காமம் நம் கட்டுக்குள் வரும். இதனை குறிக்கும் விதமாகத்தான் காளியானது ( காமம்) தனது காலை சிவன் (அன்பு) மீது வைத்திருப்பது போன்று உருவம் கொடுத்தார்கள்.
”சிவனின்றி சரீரம் இயங்க சாத்தியம் இல்லை
சரீரம் இன்றி சிவனை உணர சாத்தியம் இல்லை ”
நாம் சிவத்தை நெருங்க வேண்டும் என்றால் நம் உடலை பாதுகாப்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். நாம் நமது உடலில் உள்ள சிவனை துண்புறுத்தாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். (உதாரணமாக, நாம் ஒரு வேலை உணவு சாப்பிடவில்லை என்றால் நம்மை பசி துன்புறுத்தும். உண்மையில் அவ்வாறு நாம் அனுபவிக்கும் துன்பத்தை நாம் அனுபவிக்கவில்லை, நமக்காக நம்முள் உயிராக இருக்கக் கூடிய சிவன் அனுபவிக்கிறான் என்பதை நாம் உணர வேண்டும். )
சிவனை துண்புறுத்தாது நாம் உடலுக்கு தேவையான பயிற்சியுடன் ஆரோக்கியமாக வாழ முயற்சிக்கும் நேரத்தில் இறைவன் நமக்கு உறுதுணையாக இருந்து அருள்புரிவான்.
காமமானது அன்பு ஒன்றிற்க்கு மட்டுமே கட்டுப்படும். காமத்தை வெல்லும் சக்தி அன்பிற்கு உண்டு. ஆகவே அதிகமாக இறைவன் மீது அன்பு கொள்ளுங்கள். இறைவனாகிய சிவத்தை கொண்டு சக்தியை உங்கள் கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்யுங்கள்.
”அன்பும், சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவதை அறிந்த பின் சிவமாய் வீற்றிருப்பார்.”
-திருமூலர்
உங்களுக்கு சக்தி பற்றிய பயம் வரும்போதெல்லாம் சிவத்தை அழையுங்கள்.
( சக்தியை நம் கட்டுக்குள் கொண்டுவரமுடியுமே தவிர நம்மை விட்டு முற்றிலும் நீக்கிவிட முடியாது)
அடுத்ததாக நாம் கட்டுக்குள் வைக்க வேண்டிய மிக முக்கியமான ஒன்று!
மீண்டும் சந்திப்போம்.....

Comments
Post a Comment