Posts

Showing posts from May, 2023

உன் மவுனம் கூட அழகான மொழிதான்!

Image
ஹேய் செல்லக்குட்டி, என் தங்கக்கட்டி...! உன்னோடு கனவிலும், கற்பனையிலும் பேசிக்கொண்டே இருக்கிறேன்... தூங்கப்போகும் முன் உன்முகம்! தூங்கி எழுந்தவுடன் உன்முகம்! மேகம் பார்க்கையில் உன் முகம்! கடல் அலைகளில் உன்முகம்! பயணிக்கும்போது உன்முகம்! பாடல் கேட்கையில் உன்முகம்! பசித்தால் உன்முகம்! பரவசத்தின்போது உன்முகம்! அழகான பெண்ணை சைட் அடிக்கும் போது உன்முகம்! எனை நான் ரசிக்கும்போது உன்முகம்! இப்படி எல்லாவற்றிலும் நீயே தெரிகிறாய்....! என்னுள் இரண்டற கலந்துவிட்ட உன்னை  எப்படி மறப்பேனடி!  உன்னை நினைக்க மறக்கும் ஒரு நொடியில், அரை நொடி வேகத்தில் நினைவில் வருகிறாய்... நீ என்னவள் என்றும், இறைவன் எனக்காக அனுப்பிய பெண் நீதான் என்றும்  என் மனம் சொல்லிக்கொண்டே இருக்கிறது...! ஆனால், நீயோ பேசக்கூட மறுக்கிறாய்.... இதயம் உணர்ந்து கண்கள் பேசும்போது வார்த்தைகளுக்கு பஞ்சமேது...! உன் மவுனம் கூட அழகான மொழிதான்!

நீ புன்னகைத்து இரு!

Image
கண்களை மூடிக்கொண்டு சத்தம் வெளியே வராமல் சிரிக்கிறேன் வெட்கப்படுகிறேன், உனை காணாது தவிக்கிறேன்... இதெல்லாம் பைத்தியக்காரத்தனம் என்று எனக்கும் தெரியும். தெரிந்தும் கூட மனம் உன்னையே நினைக்கிறது... நீ விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்ட பின்பும்,  இன்ஸ்டாவில் எனை பிளாக் செய்த பின்பும், என் ஸ்டேட்டஸ்-ஐ ஹைடு செய்த பின்பும் கூட, நான் ஏன் உனை நினைக்கிறேன்? இந்த கேள்வியை பலமுறை என்னிடம் கேட்டிருக்கிறேன்... பதில் மட்டும் இன்றுவரை கிடைக்கவே இல்லை. உன்னை நினைக்கவே கூடாது என்று நான் நினைக்கும் போதெல்லாம்  உன்னையே அதிகம் நினைக்கிறேன்... கண்ணீர் வராமல் அழவைப்பது எப்படி என்பது உனக்கு மட்டும்தான் தெரியும்... உன்னை பிடிப்பதற்கு இதுதான் காரணமா? இல்லை இதுவும் காரணமா ? எது எப்படியோ? அழுகை என்னோடு போகட்டும்.... நீ புன்னகைத்து இரு! உன் புன்னகையில் என் காதல் வாழும்...!

வீணை இல்லா கலைவாணி

Image
 மஞ்சள் உடையணிந்து வந்த மஹாராணியே... மத்தாப்பு வெளிச்சமாக மதியே நின்முகம்! கண்களின் புன்னகையை உன் கன்னத்தில் காண்கிறேன்... கலையே! எனை கவிபாட தூண்டும் ரதியே! 5 அடி தூரத்தில் அமிர்தமாய் நீ இருந்து   என்னுள் அமுதமழை பொழிகிறாய்... தேவியே உன் வருகையால் தினம், தினம் திகைப்பாகிறது என் மனம் ! ஆடிப்பெருக்கு வெள்ளமாய் துள்ளிக்குதித்து ஓடுகிறது ...!  கையில் வீணை இல்லா கலைவாணியே... நானும் கவி படைக்கிறேன் உன் கடைக்கண் பார்வையினால்....! கண்மணியே கொஞ்சம் கேளடி, என் பார்வையையும் கொஞ்சம் பாரடி!

மல்லிகை, ரோஜா விரும்பும் அவளின் பாதங்கள்

Image
 என்னதான்டி உன் பிரச்சனை...? நீ மனம் விட்டு பேச உன் மனசுக்கு பிடித்தவன் நான் இருக்கிறேன்....(மனசுக்கு பிடித்தவன்தானே) நீயோ மனம் மயங்காமல் மனம் கலங்கி நிற்கிறாய்... என் மனதையும் கலங்க வைக்கிறாய்...  கருப்பு டி சர்ட் அணிந்து வந்த என் கட்டிக்கரும்பே... நேற்றுதான் முதன்முறையாக உன் பாதம் பார்த்தேன்...  ஆஹா அப்படி ஒரு நிசப்தம்! மல்லிகை, ரோஜா பூக்கள் குடிகொள்ள விரும்பும் கோயில் அது! பனி படர்ந்த ரோஜா இதழ்போல் உன் கால் நகங்களில் அங்கங்கே சிவப்பு நிற நெயில்பாலிஷ்... காலின் பெருவிரலை அசைத்து எனையறியாமல் எனை சுற்றவைக்கிறாய்... கண் சிமிட்டுகிறாய், காதல் பாஷை காட்டுகிறாய்...! காதலிக்க மட்டும் மறுக்கிறாய்! எனக்கு மட்டும்தானே தெரியும்...  நான் உன்னை நெருங்கிக்கொண்டே இருக்கிறேன்...  என் சிகப்பி இதயத்தில் சில்லென புது ரோஜா பூத்திருக்கு.... அதை சூடியவுடன் உன் மனமெனும் அரியணையில் ஏறிவிடுவேன்! அதுவரை உன் வாட்டம் போக்க நான் என் செய்வேன்? அறியேன் ! அறியேன் !! அறியேன் !!!

என்னுள் ஒளிக்கொடுத்த தேவதை !

Image
"என் ப்ரியமான தோழிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.... நீ சிரித்தால் செர்ரி பழம் சிவக்கும்... செம்பருத்தி பூ பூக்கும்... சிவந்த வானம் கூட மேகம் திரண்டு மழை பொழியும்... நீ முறைத்தால், பூக்கள் எல்லாம் வாடிவிடும் ... சிறு குழந்தையாய் நீ அடிக்கடி கோபித்துக்கொள்கிறாய்....  குழந்தையாக இருந்தால் சாக்லெட் / ஐஸ்கிரீம் கொடுத்து சமாதானப்படுத்தி விடுவேன்... நீயோ! குழந்தை மனம் கொண்ட தேவதை!  உனை எப்படி சமாதானப்படுத்த?  அறியாமல் நான் செய்த சிறுதவறை மறந்துவிடு எனை மன்னித்து விடு!  உன் புன்னகையை மட்டும் சிந்திக்கொண்டே இரு... அது போதும் எனக்கு... என்னுள் ஒளிக்கொடுத்த தேவதையே !  இறைவன் திருவருளால்" என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ்க! வாழ்கவே!!

கண்ணடிக்கும் கலை

Image
கண்ணை சிமிட்டாமல் கண்ணடிக்கும் கலையை அவளிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.... அரை நொடி பார்த்தால் போதும் ஆயுள் முழுவதும் சிறைகைதி ஆக்கி விடுவாள்... ஆம்! அன்று ஒரு நாள் அவளை அரை நொடிதான் பார்த்தேன்....  அன்று என்னை கண்களுக்குள் சிறை வைத்தவள் இன்று வரை விடுதலை செய்யவே இல்லை... கோவை கனியே... எனை கொத்தும் கிளியே... தினம் நூறுமுறை உனை நினைக்கிறேன்... குறைந்தது ஒரு முறையாவது எனை நினைப்பாயா...?!