வீணை இல்லா கலைவாணி
மஞ்சள் உடையணிந்து வந்த மஹாராணியே...
மத்தாப்பு வெளிச்சமாக மதியே நின்முகம்!
கண்களின் புன்னகையை உன் கன்னத்தில் காண்கிறேன்...
கலையே! எனை கவிபாட தூண்டும் ரதியே!
5 அடி தூரத்தில் அமிர்தமாய் நீ இருந்து
என்னுள் அமுதமழை பொழிகிறாய்...
தேவியே உன் வருகையால் தினம், தினம் திகைப்பாகிறது என் மனம் !
ஆடிப்பெருக்கு வெள்ளமாய் துள்ளிக்குதித்து ஓடுகிறது ...!
கையில் வீணை இல்லா கலைவாணியே...
நானும் கவி படைக்கிறேன் உன் கடைக்கண் பார்வையினால்....!
கண்மணியே கொஞ்சம் கேளடி, என் பார்வையையும் கொஞ்சம் பாரடி!
Comments
Post a Comment