Posts

'அவள்' என்ற பதத்தில் உள்ள சுகம்

Image
 இன்றுதான் இவளின் பிறந்தநாள் ... இவளுக்கு  புலனத்தில் (வாட்ஸ் ஆப் ) வாழ்த்து செய்தி அனுப்பலாம் என்று தோன்றியது ! இருப்பினும் காதலனாக வேண்டாம் , தோழனாக வேண்டாம் , அட இவ்வளவு ஏன் ? சகமனிதராக கூட மதிக்கவோ, நினைக்கவோ மனமில்லாத நங்கைக்கு எவ்வாறு அனுப்புவது ? ஒருவேளை, நாம் அனுப்பும் குறுஞ்செய்தி நமக்கு தென்றல் காற்றாக தோன்றினாலும்  இவளுக்கு வெப்ப அலையாகத்தான் தோன்றும் ! வேண்டாம் என்றது மனது விட்டுவிட்டேன்... பிறகுதான் தெரிந்தது  'அவள்' என்ற பதத்தில் உள்ள சுகம்  "இவள்"  என்ற சொல்லாடலில் இல்லவே இல்லை ! "அவள்" எனக்கானவளாக இல்லாத போதும்  என்னவளாக இருக்கிறாள் !  இவள் - எண்ணிவளாக இருக்கிறாள் (எண்ணிக்கையில் ஒருத்தியாக ) இருப்பினும்,  என் அன்பு தோய்ந்த மனம் இவளையும் வாழ்த்துகிறது !

இரண்டு பொண்டாட்டி

Image
இந்த மனம் ஒரு பொல்லாத  உயிர் தின்னும் பிசாசு.... இதே மனம் உயிரை வளர்க்கும் ஒரு அழகான தேவதை.... ஆம்! இன்று நானே என்னை நினைத்து சிரிக்கின்றேன்...! விடியற்காலை பொழுது திடீரென்று மனவேதனை!  உனக்கு மட்டும் தான் திருமணம் ஆகவில்லை. எத்தனையோ முயற்சி செய்தும் அத்தனையும் தோல்வியிலேயே முடிகிறது.. சரி நம் தலைவிதி என்னவோ அப்படியே நடக்கட்டும்... இதை நான் கடந்து செல்ல முயற்சித்தாலும் மனம் விடுவதே இல்லை! உனக்கான ஒருத்தியை  தேடு தேடு என  என்னை தொல்லை செய்கிறது... நான் தேடி செல்லும் இடமெல்லாம் நிராகரிப்பு மட்டுமே பதிலாக வருகிறது... எங்கிருந்து நான் தேடுவது?  நான் முயற்சிக்கவில்லை என்று நீ சொன்னாலும் பரவாயில்லை! நீ தான் பார்த்துக் கொண்டே இருக்கிறாயே என்று பதில் கேள்வி நான் கேட்க, சற்று மௌனம் காக்கிறது... பிறகு அதெல்லாம் எனக்கு தெரியாது எனக்கானவள் ஒருத்தி வேண்டும் என்கிறது மீண்டும்! இந்த போராட்டம் உச்சத்துக்கு சென்று மனதை நான் வெறுக்கும்போது இந்த மனமே சிரித்தபடி என்னிடம் சொல்கிறது!   ஹா ஹா ஹா... கவலைப்படாதே உனக்கு ஒரு வேலை இரண்டு மனைவி இருந்தாலும் இருக்கக் கூடும்! அதனால்தான் இவ்வளவு தாமதம் ஆகிறது என்று.. ஒ

என் சோகம் என்னோடு தான்

Image
 என்னுடைய அத்துனை வலிகளையும், துயரங்களையும், வேதனைகளையும் அவள் காலடியில் கொட்டிவிட வேண்டும்! என்னை பற்றி முழுவதும் அறிந்த ஒரு ஜீவன் அவள் ஒருத்தியாக மட்டுமே இருக்க வேண்டும்! என்னை நேசிக்கும், அன்பு செலுத்தும் ஒரு துணைவியாக அவள் இருப்பாள்  என்று நான் எண்ணிய எண்ணங்களை எல்லாம் தவிடு பொடியாக்கினால்..... அந்த ஒற்றை வார்த்தையில் "உன்னை பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது.  ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு மாதிரி பேசுகிறாய்" என்றாள்.  என் வலிகளை எல்லாம் சொல்ல தயங்கிய தருணம் அது.  ஆரம்பிக்கும் முன்பாகவே  நீ எனக்கு வேண்டாம் என்று சொல்லி முடித்து விட்டாள்.     அப்போதுதான் புரிந்தது "வலிகள் நிறைந்ததுதான் தான் வாழ்க்கை! உன் வலிகளை உன்னோடு வைத்து கொள்ள வேண்டும். மாறாக, அதற்கு ஆறுதல் தேட முற்பட்டாலோ, அந்த வலிகளை போக்கிவிட வேண்டும் என நினைத்தாலோ, மிகப்பெரிய வலியை இந்த வாழ்க்கை கொடுத்துவிடும்".என்று  இப்போது என் முதல் 10 வலிகளுக்குள் அவள் முதலிடம் பிடித்துவிட்டாள். ஆம்! அவள் ஏற்படுத்திய வலிதான் இன்றும் என்றும் முதலிடம் வகிக்கும். இதை எழுதி முடிக்கும் முன்பாகவே என் உதட்டோரம் சிறு புன்முறுவல

நீ அனுமதி தந்தால் உன்னை ஆராதிக்கிறேன்...!

Image
 ஆயிரம் கவி சொல்லும், அருஞ்சுவையாய் அமிர்தம் பொங்கும்! அவள் கண்ணுண்ட களி மயக்கத்தில், 'அவள்' எனும் புத்தகத்தை  படிக்க ஆவலுற்றேன்.... ஒரு வாசகனாய் நூலகத்திறப்பிற்க்காக  வாயிலில் காத்துக்கிடக்கிறேன்... நீ அனுமதி தந்தால் உன்னை ஆராதிக்கிறேன்...!

எனை அறியாமல் மனம்‌ பறித்தாள்

Image
 ஆஹா...! இதயம் தித்திப்பாய் இனிக்கிறது தவிக்கிறேன், அலைகிறேன், எனை அறியாமல் புலம்புகிறேன்! கடற்கரை மணலில் அமர்ந்தவாறு கடல் அலையின் ஓசையோடு ஒரு மவுன உரையாடல்... என் இத்தனை வருட தேடலின் திருக்குறள் அவள்!  இறைவியாய் காட்சி தந்தாள், கலந்துரையாடினாள், கரைந்தே விட்டேன்.... அவளை பார்த்த பின்பு பள்ளிப்பருவ மாணவனாய் துளிர்க்கிறது மனது! என்‌ ஒட்டுமொத்த அன்பின் காதலையெல்லாம் அவள் காலடியில் கொட்டிவிட வேண்டும்... எப்படி சொல்வது அவளிடம்? சிந்திக்கிறேன்.... நான் சொல்கிறேன் என்றவாறு, என் உரையாடலை நானே அறியாமல் கேட்டுக் கொண்டிருந்த தென்றல் காற்று என் முகத்தை வருடியபடி நம்பிக்கை கொடுத்து செல்கிறது.... 

உன்னை நினைத்தாலே சுகம்!

Image
கவியே என்னை வெறுக்கும் போது நான் எப்படி கவி படைப்பேன்! உன்னை பார்த்தால் சுகம்! உன் பெயரைக் கேட்டால் சுகம்! உன்னை நினைத்தால் சுகம்! உனை பற்றி கவிதை எழுதும் போதெல்லாம் எழுத்துக்கள் துள்ளி குதித்து ஓடி வரும்...!  அவளுக்காக நீ தொடுக்கும் பாமாலையில் என்னையும் ஒரு மலராக இணைத்துக் கொள் என்று... ஆனால் இன்றோ, நீ சொன்ன ஒற்றை வார்த்தைக்காக  என் எழுத்துக்கள் எல்லாம் கண்ணீர் வடிக்கின்றன.... அன்பை அருமருந்தாக்கி அதிரசமாய் உனக்கு ஊட்ட அறவே பிடிக்கவில்லை என்கிறாய்! கடந்து போன வாழ்க்கையில் மீண்டும் கால் பதிக்க துடிக்கிறாய்... காதலன், கணவன் ஆவதெல்லாம் கடவுள் தந்த வரம்! நான் கடவுள் தந்த வரமாய் உன்னை நினைத்தேன்! நினைக்கிறேன்!  நினைத்துக் கொண்டே இருக்கிறேன்! நீயோ........ எப்படி சொல்வேன் என் எழுத்துக்களிடம் நீ என்னை வெறுக்கிறாய் என்று...! அவையெல்லாம் என்னை விட உன் மீதுதான் அதிக அன்பு காட்டுகின்றன...! உன்னைப் பற்றி எழுதும் போதெல்லாம் இதை வைத்துக் கொள்! இதை வைத்துக் கொள்! கண்ணே! மணியே! கற்கண்டே! கவியமுதே! கலைவாணியே! கனியே! காவியமே! தேனே! திரவியமே! என வார்த்தைகளை அள்ளி, அள்ளிக் கொடுக்கும்! என் சோகம் என்னோடு

உன் மவுனம் கூட அழகான மொழிதான்!

Image
ஹேய் செல்லக்குட்டி, என் தங்கக்கட்டி...! உன்னோடு கனவிலும், கற்பனையிலும் பேசிக்கொண்டே இருக்கிறேன்... தூங்கப்போகும் முன் உன்முகம்! தூங்கி எழுந்தவுடன் உன்முகம்! மேகம் பார்க்கையில் உன் முகம்! கடல் அலைகளில் உன்முகம்! பயணிக்கும்போது உன்முகம்! பாடல் கேட்கையில் உன்முகம்! பசித்தால் உன்முகம்! பரவசத்தின்போது உன்முகம்! அழகான பெண்ணை சைட் அடிக்கும் போது உன்முகம்! எனை நான் ரசிக்கும்போது உன்முகம்! இப்படி எல்லாவற்றிலும் நீயே தெரிகிறாய்....! என்னுள் இரண்டற கலந்துவிட்ட உன்னை  எப்படி மறப்பேனடி!  உன்னை நினைக்க மறக்கும் ஒரு நொடியில், அரை நொடி வேகத்தில் நினைவில் வருகிறாய்... நீ என்னவள் என்றும், இறைவன் எனக்காக அனுப்பிய பெண் நீதான் என்றும்  என் மனம் சொல்லிக்கொண்டே இருக்கிறது...! ஆனால், நீயோ பேசக்கூட மறுக்கிறாய்.... இதயம் உணர்ந்து கண்கள் பேசும்போது வார்த்தைகளுக்கு பஞ்சமேது...! உன் மவுனம் கூட அழகான மொழிதான்!