வாழ்க்கை
வாழ்க்கை
வாழ்க்கை சிலரை மட்டுமே ரசிக்கிறது..
சிலரை மட்டுமே விரும்புகிறது...
சிலரை மட்டுமே காதல் செய்கிறது....
பலருக்கும் ஏனோ காண முடியாத கடும் இருளாய்...
துளைக்க முடியாத பாறையாய்...
கடக்க முடியாத கரடுமுரடான பாதையாய்..
காட்சி தருகிறது...
இருளை நீக்க வேண்டும்...
பாறையை துளைக்க வேண்டும்...
பாதையை கடக்க வேண்டும்...
என முற்படுகையில்....
தடை எழுப்பிய பெருஞ் சுவராய்..
முட்டி மோதி கீழே விழும் கிணற்று தவளையாய்...
முடியாமலேயே போய் விடுகிறது...!
Comments
Post a Comment