உன் மனிதம் கேள்விக்குறியாகும்?
சேமிப்புகள் கரையும் போதும்,
சிக்கனம் சிரிக்கும் போதும்,
உறவுகள் உதாசீனப்படுத்தும் போதும்,
உனக்கினி யாருமில்லை என உணரும்போதும்,
வறுமை குடிக்கொள்ளும் போதும்,
மனதை வெறுமை ஆக்கிரமிக்கும்…
வாழ்க்கை கேள்விக்குறியாகும்!
மரணம் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும்,
துணிவு வாள் தூக்கி நிற்கும்,
உன் மனிதம் கேள்விக்குறியாகும்?
உன்னையே அது தோலுரித்துக் காட்டும்!
சித்தநாதன் அருவமாய் பார்ப்பான்…
வேறு வழியில்லை! சரணடைந்து விடு சங்கரனை இனி சகலமும் அவன் தான் என்று…
அம்மையப்பனாய் அவனே வருவான் அருள்மழையும் பொழிவான்!
இதயம் இனித்திடும் இன்பமும் தருவான்…
ஓம் நமசிவாய!
Comments
Post a Comment