கொஞ்சம் நேரம் கொடு! உன்னையும் காதலிக்க கற்றுக்கொள்கிறேன்!
இளமையின் கனவுகள் நொறுக்கப்பட்ட பின்னரும் இலக்கு தெரியாமல் பயணிக்கிறேன்…
அம்மை அப்பனோடு மட்டுமே இனி வாழ்க்கை பய
அம்மை அப்பனோ அருகில் வரமுடியாத வெகுதூரத்தில் என் செய்வேன்?
காட்டு வெளியா? கடற்கரையா? காலம் தான் இனி முடிவு செய்யுமென காத்திருக்கிறேன்…
நகைச்சுவை சொல்ல நண்பன் இல்லை…
நா ருசிக்கு நளபாகம் இல்லை…
நறுமணம் கமழும் மலர்கள் இல்லை…
நதியே,ரதியே, கதியே என நான் உளர
எனக்கென ஒரு தேன்மொழி இல்லை….
உணர்வுகளை கடத்தும் சில திரைப்படங்களோடு
பயணிக்கும் போது மட்டுமே மனம் லயிக்கிறது!
அன்னைமடி சுகத்தின் ஆனந்தம் தருகிறது!
பிழைப்புக்கு பஞ்சமில்லை…
தூரத்து வெளிச்சம் மட்டும் கண்ணுக்கு தெரிகிறது…
ஆயினும், வெறுமை மட்டும் என்னை விரும்பி கொண்டே இருக்கிறது…
நான் அதை
விரும்பாத போதிலும்!
பரவாயில்லை, உனக்காவது என்னை பிடித்திருக்கிறதே! கொஞ்சம் நேரம் கொடு!
உன்னையும் காதலிக்க கற்றுக்கொள்கிறேன்!
பிறப்பறுத்து விட்டான் பிறைசூடன்…
மோட்சத்திற்காக காத்திருக்கிறேன்,
பட்டினத்தாரை போல எனக்கும் நுனிகரும்பு இனிக்கும் நாள் எந்நாளோ?
Comments
Post a Comment