கவியரசு கண்ணதாசன் நமக்கு பிடித்தவர்களிடம் நாம் பேசுவது ஒரு சுகம் என்றால், நமக்கு பிடித்த நபர் பற்றி பேசுவது மற்றொரு சுகம் . அந்த வகையில் இந்த வாரம் ஒளிப்பரப்பான நீயா நானாவில் கவியரசு கண்ணதாசன் எனும் தலைப்பில் அறிஞர்கள், எழுத்தாளர்கள், ரசிகர்கள் என பலரும் கலந்து கொண்டு தாங்கள் கண்ணதாசனின் வரிகளில் வீழ்ந்த இடங்களை மகிழ்வோடு பகிர்ந்து கொண்டனர். ஒவ்வொருவரும் தாங்கள் உணர்ந்து மகிழ்ந்த அந்த அழகான தருணங்களை பகிர்ந்து கொண்டனர். அவர்களோடு சேர்ந்து நானும் கண்ணதாசனோடு கரைந்து போனேன். அதில் அருண் என்ற அன்பர் கண்ணதாசனின் ஜனனம் எனும் கவிதையை வாசிக்க தொடங்கினார். ஆஹா! அதை கேட்பதுதான் எத்தனை இன்பம்,.. இதோ ஜனனம் உதயமாகிறது…… சங்கமத்தில் பங்குகொள்ளும் மங்கைமலர்ப் பங்கயத்தில் தங்கமணிப் பிள்ளை ஒன்று ஜனனம் -அது தங்கடமை தீர்க்குமுனம் மரணம் ! சேற்றிலொரு செங்கழுநீர் ஏற்றுமணித் தீபமெனச் சாற்றிவைத்த வண்ணமலர் ஜனனம் -அது தங்கடமை தீர்க்குமுனம் மரணம் ! சேற்றிலொரு செங்கழுநீர் ஏற்றுமணித் தீபமெனச் சாற்றிவைத்
என்னுடைய அத்துனை வலிகளையும், துயரங்களையும், வேதனைகளையும் அவள் காலடியில் கொட்டிவிட வேண்டும்! என்னை பற்றி முழுவதும் அறிந்த ஒரு ஜீவன் அவள் ஒருத்தியாக மட்டுமே இருக்க வேண்டும்! என்னை நேசிக்கும், அன்பு செலுத்தும் ஒரு துணைவியாக அவள் இருப்பாள் என்று நான் எண்ணிய எண்ணங்களை எல்லாம் தவிடு பொடியாக்கினால்..... அந்த ஒற்றை வார்த்தையில் "உன்னை பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது. ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு மாதிரி பேசுகிறாய்" என்றாள். என் வலிகளை எல்லாம் சொல்ல தயங்கிய தருணம் அது. ஆரம்பிக்கும் முன்பாகவே நீ எனக்கு வேண்டாம் என்று சொல்லி முடித்து விட்டாள். அப்போதுதான் புரிந்தது "வலிகள் நிறைந்ததுதான் தான் வாழ்க்கை! உன் வலிகளை உன்னோடு வைத்து கொள்ள வேண்டும். மாறாக, அதற்கு ஆறுதல் தேட முற்பட்டாலோ, அந்த வலிகளை போக்கிவிட வேண்டும் என நினைத்தாலோ, மிகப்பெரிய வலியை இந்த வாழ்க்கை கொடுத்துவிடும்".என்று இப்போது என் முதல் 10 வலிகளுக்குள் அவள் முதலிடம் பிடித்துவிட்டாள். ஆம்! அவள் ஏற்படுத்திய வலிதான் இன்றும் என்றும் முதலிடம் வகிக்கும். இதை எழுதி முடிக்கும் முன்பாகவே என் உதட்டோரம் சிறு புன்முறுவல
இந்த மனம் ஒரு பொல்லாத உயிர் தின்னும் பிசாசு.... இதே மனம் உயிரை வளர்க்கும் ஒரு அழகான தேவதை.... ஆம்! இன்று நானே என்னை நினைத்து சிரிக்கின்றேன்...! விடியற்காலை பொழுது திடீரென்று மனவேதனை! உனக்கு மட்டும் தான் திருமணம் ஆகவில்லை. எத்தனையோ முயற்சி செய்தும் அத்தனையும் தோல்வியிலேயே முடிகிறது.. சரி நம் தலைவிதி என்னவோ அப்படியே நடக்கட்டும்... இதை நான் கடந்து செல்ல முயற்சித்தாலும் மனம் விடுவதே இல்லை! உனக்கான ஒருத்தியை தேடு தேடு என என்னை தொல்லை செய்கிறது... நான் தேடி செல்லும் இடமெல்லாம் நிராகரிப்பு மட்டுமே பதிலாக வருகிறது... எங்கிருந்து நான் தேடுவது? நான் முயற்சிக்கவில்லை என்று நீ சொன்னாலும் பரவாயில்லை! நீ தான் பார்த்துக் கொண்டே இருக்கிறாயே என்று பதில் கேள்வி நான் கேட்க, சற்று மௌனம் காக்கிறது... பிறகு அதெல்லாம் எனக்கு தெரியாது எனக்கானவள் ஒருத்தி வேண்டும் என்கிறது மீண்டும்! இந்த போராட்டம் உச்சத்துக்கு சென்று மனதை நான் வெறுக்கும்போது இந்த மனமே சிரித்தபடி என்னிடம் சொல்கிறது! ஹா ஹா ஹா... கவலைப்படாதே உனக்கு ஒரு வேலை இரண்டு மனைவி இருந்தாலும் இருக்கக் கூடும்! அதனால்தான் இவ்வளவு தாமதம் ஆகிறது என்று.. ஒ
Comments
Post a Comment