அழுகை எனும் போதை

 காதல் விசித்திரமானதுதான்..! கடல் கடந்தாலும், காடு மலை திரிந்தாலும், காலம் கடந்தாலும், காதல் கடுகளவும் குறைவதேயில்லை ஆண்மகனுக்கு..!அவனை அழ வைத்து போதை காண்பது பெண்ணுக்கே உரிய அலாதி இன்பம்.தன்னை விரும்பிய ஒரு ஜீவனை அழ வைத்து ஆனந்தம் காண்கிறாள்...

அந்த அழுகை தனக்கான வரப்பிரசாதம் என்று நினைக்கிறாள்..அவனும் அழுகிறான், அழுகிறான், அழுது கொண்டே இருக்கிறான்...! ஆண் மகனது கண்ணீர், பெண் அருந்தும் தேவபானமாக வடிந்து கொண்டே இருக்கிறது. பெண் தொடர்ந்து அருந்திக்கொண்டே இருக்கிறாள்..!

பொழுது புலரும் இனிய காலை வேளை, கீச்சிடும் சத்தத்துடன் எலிகள் அங்கும், இங்கும் ஓடி உணவை தேடி அலைகின்றன.வெண் தாமரை குளத்தில் கருவிழி அமைந்தது போன்ற கண்களை உடைய  ஒரு குட்டி தேவதை மாஸ்க்கை அணிந்தவாறு அங்கும், இங்கும் நோட்டமிட அழகாய் கண் சிமிட்டுகிறாள்!

சாய், சாய் என்ற ஒலி சத்தம், கண்ணை பறிக்கும் வெளிச்சத்தில் பளீச், பளீச் என்று மின்னும் டிஜிட்டல் போர்டுகள், லேசான சங்கு சத்தத்துடன் நகரும் ரயில் வண்டிகள்.. ஆம்..!  இது சென்னை எழும்பூர் ரயில் நிலையம்.  

அதிகாலை பொழுது, முட்டிகள் இரண்டும் முத்தமிடும் தருணம்,... தலைவன், தலைவியோடு அமர்ந்திருக்க.. தன் காதலை கொட்டித் தீர்க்கிறாள் தலைவி. தலை குணிந்தவாறு அனைத்தையும் பொறுமையோடு கேட்கிறான்.. முப்பது நிமிடங்கள் நீண்ட அந்த உரையாடல், எப்பொழுது நினைத்தாலும் இனித்திடும் அவர்களுக்கு! (எனக்கும் தான்) அவள் மட்டும் பேசுகிறாள், அவன் கவனித்து கொண்டே இருக்கிறான். 

இடையில் இவள் உள்ளேயும், அவன் வெளியே நின்று பேசுவது போன்ற ஒரு செல்பி. உரையாடல் முடியும் தருணம் அது, ஒலி எழுப்பப்படுகிறது....அவன் கைகளை இறுக பிடித்து உன்னை ரொம்பவும் மிஸ் செய்கிறேன் என்கிறாள். ஆர்பரிக்கும் அருவியாய் அவன் கண்களில் கண்ணீர் திறண்டு நிற்க, ரயில்  பயணிக்க தயாராகிறது... (ஊ...ஊ... எனும் சத்தம்) 

அவள். அவனது கைகளில்  திடீரென முத்தமிடுகிறாள்.. அந்த ஸ்பரிசம் பெற்ற நொடிப்பொழுதுதான் தாமதம்!  கண்ணீர் அருவியாய் கொட்டுகிறது. (இதற்குத்தான் மனம் ஏங்கியதோ என்னவோ) அவள் கைக்குட்டையில் அந்த  கண்ணீரை அடக்குகிறான்.

அவள் கண்களில் இப்போதும் ஒரு துளி கண்ணீர் இல்லை...! பை பை என்று அவனுக்கு விடை கொடுக்க ரயில் பயணிக்க தொடங்குகிறது... அவள், எதிர்பார்ப்பெல்லாம் தனக்காக  அழ ஒரு ஜீவன்! அவள் கைக்குட்டையில் அவன் கண்ணீர் வாசம் நுகர்ந்தவாறு, அவன் அழுகை எனும் போதையைதனக்குள் அனுபவித்தவாறு பயணிக்க தொடங்கினால்...அவளோடு அவள் அறியா முகமாய் நானும் பயணிக்க தொடங்கினேன் அவர்களது  காதலை எண்ணி....

அழுகை எனும் போதையை கொடுத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு ஆண்மகனுக்கும்  அர்ப்பணிப்போடு சமர்ப்பணம்!





Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி