திருத்துறைப்பூண்டியில் திருவையாறு

 திருவாரூர் மாவட்டம்  திருத்துறைப்பூண்டியில்  நேற்று(16.12.2021, மார்கழி 1) திருத்துறைப்பூண்டியில் திருவையாறு நிகழ்ச்சி முதன்முதலாக நடைப்பெற்றது. 50 தவில் வித்வான்கள், 50 நாதஸ்வர வித்வான்கள் இணைந்து மங்கள இசை முழங்க மனதை குளிரவைக்கும் விதமாக போட்டிப்போட்டு இசைமழை பொழிந்தனர்.



திருத்துறைப்பூண்டியில் உள்ள ஏபிசி ஜூவல்லர்ஸ், உழவாரப்பணி குழு போன்ற ஆன்மிக அமைப்புகள் இணைந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

 திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் தமிழ் பேராசிரியர்  அய்யா நல்லசிவம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இசைப்பற்றிய விளக்கத்தை பாமர மக்களுக்கு எளிதில் புரியும்படி விளக்கினார். 

யோகா, தியானம் போன்று இசை எவ்வாறு உள்ளுருப்புகளை ஆரோக்கியத்தோடு இயங்க செய்கிறது என்றும் எந்த பண்ணை எவ்வாறு பாட வேண்டும் என்றும் மிக அருமையாக விளக்கினார்.


80-90 களின் காலக்கட்டத்தில் வெளிவந்த சலங்கை ஒலி, சிந்து பைரவி, மோகமுள் போன்ற குறிப்பிட தகுந்த படங்களுக்கு பின் தமிழில் இசையை மையப்படுத்தி படங்கள் வெளிவரவில்லை என்றே கூறலாம்.

மனதை மகிழ்விக்கும் அன்னையின் தாலாட்டாக இசை இருந்துவருவதை யாராலும் மறுக்க இயலாது. அந்த வகையில் இசையின் அடி நாதத்தை பாமர  மக்களும், கட்டணமின்றி இலவசமாக தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சி மிகவும் வரவேற்கத்தக்கது. இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். 

இசையால் உலகில் இணைந்திருப்போம். 


அசையும் பொருளில் இசையாய், ஆடல் கலையின் நாயகனாய் விளங்கும் தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!! 


Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி