வைகுந்தனுக்கு ஏகாதசி

 பூலோக வைகுண்டம் என்றும், 108 திவ்யதேசங்களில் ஒன்று என்றும் பெருமையோடு அழைக்கப்படுகின்ற திருவரங்கத்தில் (ஸ்ரீரங்கம்) வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றுள்ளது   அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மாதங்களில் நான் மார்கழி என்று கிருஷ்ணன் கூறுகிறார்.

மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளில்...

கார்மேனிச் செங்கண் கதிர்மதிப்போல்முகத்தான் நாராயணனே.. என்று திருப்பாவை பாடலின் முதல் பாடலாக ஆண்டாள் மார்கழி மாதத்தின் சிறப்பை வருணித்து கூறுகிறார்.

தட்சிணாயின காலத்தின் கடைசி மாதம் மார்கழி மாதம் ஆகும்.( தட்சிணாயின காலத்தில் சூரியனின் கதிர்வீச்சு  பகலில் குறைவாகவும், இரவில் குளிர்ச்சி அதிகமாகவும் இருக்கும்)



தட்சிணாயின காலம் என்பது ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள காலம் ஆகும்.

உத்தராயிண காலம் என்பது  தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள காலம் ஆகும்.

மார்கழியில் விரதம் இருந்து இறைவனை மனதார வழிபட சகல சம்பத்துக்களும் கிடைக்கும் என்பது வெகுஜன மக்களின் நம்பிக்கை. இதன்பொருட்டு மார்கழி மாதத்தில் வரக்கூடிய ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்று கொண்டாடுவார்கள். இது 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை எல்லாம் மாறாது. 

சூரியன் உதிக்கும் திசையை எவ்வாறு மாற்ற இயலாதோ அதுபோலவே மார்கழி மாதத்தில் வரக்கூடிய வைகுண்ட  ஏகாதசியை மாற்ற இயலாது.

திருவரங்கத்தில் தங்கள் வசதிக்கேற்ப வைகுண்ட ஏகாதசியை மாற்றியது மிகவும் கண்டிக்கத்தக்கது. கோயிலின் வருமானத்திற்காகவும், திருவரங்கம் தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக மக்களின் நம்பிக்கைகளை இறை வழிபாடுகளை தங்கள் வசதிக்கு ஏற்றார் போல் மாற்ற முயற்சி செய்வது கேலிக்குறியது.

பகுத்தறிவு பேசும் திமுக அமைச்சர் சேகர் பாபுவும்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வோர் கோயிலும் தங்கள் வசதிக்கேற்ப மக்களின் நம்பிக்கைகளை கேள்விக்குறி ஆக்கினால் மக்கள் கோயிலுக்கு செல்வதை தவிர்க்கும் நிலை ஏற்படும்.

வணிகத்தலமாக கோயில்கள்  மாறிவரும் நிலையில் வெகுஜன மக்கள் மன நிம்மதி தரும் இடமாக கோயிலை நாடி  செல்கின்றனர். அவர்களின் மன நிம்மதியை கெடுக்கும் வகையில்  இது போன்ற திரிபுகளை ஏற்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது. 

இந்துக்களின் கட்சி என்று சொல்லக்கூடிய பாஜகவோ, இந்து முண்ணனியோ குரல் கொடுக்க வில்லை என்பதில் ஆச்சரியமில்லை.  மற்ற எல்லா சடங்கிற்கும் பகுத்தறிவு பேசும் திமுக இதற்கு மறைமுகமாக துணைப்போவதும், கேள்வி எழுப்பாததும் ஆச்சரியமே..! 

திருவரங்கத்தில் எம்பெருமான் சிலை வடிவில் கைது செய்யப்பட்டு இருந்தாலும் என் ஊனுடம்பு ஆலயத்தில் மணிப்பூரகத்தின் மத்தியில் சயனகோலத்தில் சிரித்தப்படி காட்சி தருகிறான். இதை காணும் போது இவர்களின் வணிக நோக்கம்  நகைப்புக்குறியதே..!

 

Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி