அவளுக்கொரு முத்துச்சரம்

 மூன்றெழுத்தில் அவளுக்கொரு முத்துச்சரம் படைக்க எண்ணினேன் முத்தமிழும் தித்திக்குது என்னிடம்...

சொக்கனுக்கு வாய்த்த சுந்தரியாய் , சொக்க வைக்கிறாள், இந்த சுந்தரனை!

பண்பின் முன்னிலையாய்...

பத்தின் இடைநிலையாய்....

அம்மாவின் கடைநிலையாய்....

அவளுக்கோர் அர்ச்சனை!

அன்பு என்றால் அவள் தான்!

அறம் என்றால் அவள் தான்!

இதழென்றால் அவள் தான்!

இம்சையின் அகராதி அவள் தான்!

அரிதாக புன்முறுவல் பொழிவாள்!

எனை அவள் பாதி ஆக்கிவிடுவாள்...

மௌனத்தின் மகாராணியவள்...

பேசினால் மல்லிகையின் மணம் வீசும்... மரிக்கொழுந்தும் மயங்கிவிடும்!

அவள் கண்ணிமைக்கும் நொடிப் பொழுதில் என் எழுத்துக்களின் மாத்திரையும் தடுமாறும்....

ஈரெழுத்து விலங்குகளை எல்லாம் உச்சிக் கொட்டி ரசிக்கின்றாள்!

இந்த ஆறெழுத்து விலங்கை மட்டும் அவமதிப்பதேனோ?

ஒரு வினாடியில் அவளின் இரு விழி அசைவு போதும் என் ஆயுள் இன்னும் நீளும்!





Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி