மந்தாகினி

 பேருந்தில் பக்கத்து சீட்டு.

அன்று அவள் அரிதாரம் பூசவில்லை ஆயினும் அழகாய் ஜொலித்தாள்..!

ஒன்றரை அடி நீளத்தில் போனி ஹேர் ஸ்டைல். 

தலைக்கோத ஏதுவாக இடதுபுற நெற்றியில் வழிந்தோடும் அருவியாய், சிறிய கொத்தான மயிர் இழைகள்...

தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் சிறிய வட்ட வடிவிலான கருப்பு நிற பொட்டு... 

அவளை வர்ணிக்க வார்த்தைகளை தேடிக் கொண்டிருந்தேன்...

 பொத்தென்று ஒரு சத்தம்! பதறி போய் திரும்பினேன், அவள் சிதறிப்போய் கையில் எடுத்தாள்..., மஞ்சள் வண்ணத்தில் சீப்பு. 

ஹேண்ட் பேக்கில் அவளின் கைகள் ஏதோ துலாவிக்கொண்டிருந்தன.. மிச்சராகவோ, காரா பூந்தியாகவோ இருக்க வேண்டும். அதை நமக்கும் தருவாளா? என மனம் ஏங்கியது.

நினைத்து முடிப்பதற்குள் ஸ்கார்ப் கொண்டு முகத்தை மறைத்துக் கொண்டாள். 

இறுதியாக, மயில் இறகின் டாட்டூ குத்திய அந்த கைகளில் ப்ளூடூத் ஹெட்செட். 

சேலை மட்டும் கட்டி இருந்தால் மப்பும் மந்தாரமாய் இருந்திருப்பாள்... 

சுடிதார் அணிந்து வந்ததால் தற்போது எட்டிப் பார்க்கிறது தொப்பை....!!!  




Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி