கோடான கோடி முத்தங்கள்
தமிழ் அது மொழியல்ல உயிர்...
ஒட்டுமொத்த உணர்வுகளின் கோபம் அது!
தமிழினத்தின் தலைச்சிறந்த பொக்கிஷம் அது!
தரணியில் உள்ள மொழிகளுக்கெல்லாம் தகப்பனாய் வீற்றிருக்கும் தலைமை பீடம் அது!
வடமயமாக்கல் (சமஸ்கிருதம், பார்ப்பனியம்) மதம் தரித்து வந்தாலும்,
மனிதம் தவிர்த்து வந்தாலும், இந்தி எனும் முகமூடி அணிந்து வந்தாலும் எள்ளி நகையாடி கொண்டே இருக்கும்...
அன்பே சிவம்- என் அய்யன் திருமூலர் வாழ்ந்த புண்ணிய பூமி இது!
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணையாய் என் அகத்துக்குள் இனிக்கிறான்... அள்ளியே கொடுக்கிறான் - வள்ளலாரின் அருள் நிறைந்த மண் இது...
நட்டக்கல்லை தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே, மொனமொனவென சொல்லும் மந்திரம் ஏதடா! நட்டக்கல்லும் பேசுமோ நாதனும் உள் இருக்கையிலே... சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ!- சித்தர் சிவவாக்கியரின் சித்தம் தெளிந்த பூமி இது...
வடமயமாக்கல் எதிர்ப்பு என்பது எம் தமிழினத்தின் பாரம்பரிய சொத்து...
எம் தலைமுறை மட்டும் விட்டுவிடுமா என்ன?
இங்கு மனிதம் ஒரு போதும் அழியாது.
அமுதே! தமிழே! அன்னைமடியே உன்னை ஆராதிக்கிறேன்...
உனை எவர் சீண்ட வரினும், அடித்து நொறுக்குவேன் என் எழுத்து வடிவிலே...
என்னுள் நீ... உன்னுள் நான்..!
ஆருயிரே! உனக்கு கோடான கோடி முத்தங்கள்...!
Comments
Post a Comment