Posts

Showing posts from April, 2023

நீ கொடுக்கும் தண்டனை நியாயமா...!

Image
உன்னை பிடித்திருக்கிறது என்று நான் சொன்னதற்கு நீ கொடுக்கும் தண்டனை நியாயமா...! வெள்ளை நிலத்தில் கருப்புநிறச் செம்பருத்தி மொட்டுக்களுடனும், பூக்களுடனும் பூத்துக்குலுங்குகிறது... அதை சுற்றியவாறு செடிக்கொடிகள் ....  அப்படி ஒரு டாப்,  அதை அணிந்த சிவப்பு நிற ரோஜாவாக நீ!  பின்னல் ஜடையில் எனை பிண்ணி எடுக்கிறாய்.... ஹய்யோ...........! இப்படி ஒரு அழகை கண்டால் பறக்காத மனம் கூட பறக்கத்தான் செய்யும்... உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும் என் மனம் என்ன செய்யும் ?   என்னை பழிவாங்கும் உன் யுக்தி (stratergy) என்னோடு போகட்டும்.... தயவுசெய்து இன்னொரு பெண்ணுக்கு கற்றுக்கொடுத்து விடாதே...!   பாவம்... தாங்கமாட்டான்  ஆண்மகன்! கருணையே  இல்லாமல்  உன் விழிகள் எனை கொல்லும்  கருணை கொலைகள் ஆயிரம்! ஆயினும்,நீ! கருப்புநிற ஆடையில் காட்சிதந்து எனை உயிர்ப்பித்துக்கொண்டே இருக்கிறாய்...!

சித்ரவதை செய்கிறாய்...

Image
 ஏனடி! எனை இப்படி சித்ரவதை செய்கிறாய்...? எனை பற்றி சிந்திக்காத உன்னை சிந்திக்கவே கூடாது என நினைத்து உறங்கச் சென்றேன்... விடியற்காலைப் பொழுது விடிந்தும், விடியாமலும் புலர, அலாரம் அடித்ததுபோல் வந்துவிட்டாய் சிறு புன்னகையோடு! உன் பெயரை கிறுக்கியபடி நின்றிருந்தேன்... என்ன மாமா செய்கிறாய்? என்று நீ கேட்க,  உன் பெயரை எழுதிப்பார்த்தேன்... என்று நான் சொல்ல,  நக்கலாய் சிரித்தபடி நகர்கிறாய்...  நான் உன்னை துரத்துகிறேன்... அப்போது மெல்ல, மெல்ல வருகிறது சுயநினைவு! ப்ச்ச்...... கனவா! கனவுகள் மீதெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது... ஆனால், இந்த கனவு பலித்தால் நன்றாக இருக்கும் என்று என் மனம் சொல்லியது! அதற்கு உன் மனம் ஒப்பவேண்டுமே....!    தெவிட்டாத தேன் சிந்தும் எழுத்துக்களை வாரி வழங்கக்கூடிய என் பேனா, இன்று மூச்சுமுட்டி கிடக்கிறது உன் பெயரை எழுதியவாறு ....

என் மனம் மணக்கும் சந்தனமே!

Image
ஹய்யோ..! மீண்டும் கருப்பா!  ஜிலேபி கொண்டைக்காரி என் அன்பு சண்டைக்காரி  எனை கொல்லாமல் கொள்ளையடிக்கிறாள்! கண் விருந்தில்தான் பல காவியங்கள் பிறந்திருக்கின்றன என்பது உனை காணும்போதுதான் தெரிகிறது... உனை வர்ணிக்க வழக்கொழிந்த சொற்களை மீண்டும் தேடுகிறேன்... உன்னாலாவது சங்கத்தமிழ் மீண்டும் உயிர் பெறட்டுமே! அணிமலரே! என் அமராவதியே! கோமகளாய் என்னுள் குடிகொண்ட கோதையே!   என் மனம் மணக்கும் சந்தனமே!  உனை நான் மணக்கக்கூடாதா?

கொஞ்ஞ்ஞ்சி விட ஆசை!

Image
என்னதான் உனக்கு பிடிக்கலையே தவிர, எனக்கு புடிச்ச கலர உனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு! சென்ற வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை எனக்கு பிடித்த கருப்பு நிறத்தை அடையாளப்படுத்தும் ஆடைகளையே அணிந்து வந்தாய்! இருட்டின் வெளிச்சத்தை அதில் பயணிப்பவர்களால் மட்டுமே அறிய முடியும்... நீயும் அப்படித்தான், என் இருளை விலக்கி எனக்குள் ஒளி கொடுக்க வந்த தேவதை! அதிலும், வெள்ளிக்கிழமை நீ அணிந்து வந்த கருப்பு நிற ஜீன்ஸ் பேண்ட்டும், டி-ஷர்ட்டும் அவ்ளோ அழகு! உனக்கு திருஷ்டி கழித்து, நெட்டி முறித்து, உன் கன்னத்தை செல்லமாய் கிள்ளி கொஞ்ஞ்ஞ்சி விட ஆசை! இதெல்லாம் நடக்கிற விஷயமா என்ன? ஆனாலும், உனை மனசுக்குள் கொஞ்ச, என் இதய தேவதை (வேறு யாரு நீதான்)  ஒருபோதும் மறுப்பு தெரிவித்ததே இல்லை.... யார் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லிவிட்டு, உன் வலது புற கன்னத்தை மேஜை மீது வைத்து லேசாக தலை சாய்த்து, என் முகம் பார்த்த அந்த வினாடிகளை என் உயிருள்ளவரை மறக்க இயலாது.... உன் வெள்ளை மனதுக்குள் கருப்பு நிற மீன்களாய் என் நினைவுகள்? உனக்கு பிடித்தோ, பிடிக்காமலோ உன் இதயத்தின் ஓர் ஓரத்தில் நானும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன்... என் உ

என் குழந்தை மனம் கொண்ட தேவதைக்கு....

Image
பார்ப்பது என்னவோ கண்கள்தான்... ஆனால், கண்ணீர் சிந்துவது என் இதயம் அல்லவா! இரண்டு நாட்கள்தான் உன்னை பார்க்கவில்லை... ஏதோ இருபது வருடங்கள் தாயை பிரிந்த சேயைப் போல உன்னை பார்த்தவுடன் என் இதயம் ஓடிப்போய் உன் மடி சாய்ந்துவிட்டு வந்து ஒட்டிக் கொள்கிறது... பேண்டேஜ் சுற்றிய  இதய  ஸ்மைலியை நீ ஸ்டேட்டஸ் ஆக வைத்து சொல்லாமல் சொல்கிறாய்! எனை கொல்லாமல் கொல்கிறாய் என் இதயத்தை நொறுக்கியவன் நீதான் என்று...  இன்னும் பேச ஆரம்பிக்காத குழந்தையால் தாயின் இதயத்தை எப்படி நொறுக்க முடியும்? தாய் அழுதால் பிள்ளைமனம் தாங்கிடுமா? அக்குழந்தையின் தேவை எல்லாம் உன் அன்பும், அருள்விழி பார்வையும் மட்டுமே! இதை எல்லாம் எப்படி புரிய வைப்பேன்? என் குழந்தை மனம் கொண்ட தேவதைக்கு....

அவளை கடக்க முடியாமல் நான்

Image
 அவளை பார்த்தபின்புதான் அன்பெனும் ஊற்று பெருக்கெடுத்தது.  திருமணம் செய்தால் அவளை போன்ற ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும், அப்பெண்ணோடு பயணிக்க வேண்டும், அன்புக் கதை பேசி அளாவ வேண்டும். அவள் காணாத மற்றுமொரு உலகை காண்பிக்க வேண்டும் இப்படியெல்லாம் என்னென்னவோ எண்ணங்கள் என் மனதில் உருப்பெற்று உலாவிக் கொண்டிருக்கின்றன.   அவளுக்கு மட்டும் மறுமணம் நடந்திருந்தால் இன்று மகாராணியாக வாழ்ந்திருப்பாள். சாதி, சமய சடங்குளில் சிக்குண்ட அவளுக்கு ஏது மறுமணம் ? தனிமையிலேயே வாழ்ந்துவிட்டால் தன் 80 வயது வரை.... இன்றோ, தான் பெற்று எடுத்த மகனால் தாக்கப்பட்டு நடக்க முடியாமல் கிடக்கிறாள். அவள் தாக்கப்பட்ட செய்தி அறிந்து துடிதுடித்து போனேன். வேறு என்னால் என்ன செய்ய முடியும்? அவளை பார்க்க மனம் இல்லாமல் கடந்து விட வேண்டும் என்று பார்க்காதது போல் கடக்க முற்பட்டேன். அவளோ கண்டுபிடித்து விட்டாள். என் பெயரை கூவி அழைக்கும்போது அவளை பார்க்காமல் எப்படி கடந்து போக முடியும்? கூரை கொட்டகையில் மண்ணோடு மண்ணாக சாய்ந்து கிடக்கிறாள்..... சிறுநீர் நாற்றத்துடன் உடலில் 5/6 இடங்களில் சிராய்ப்புகள்....  பேசும்போதே கண்களில் கண்ணீ

உயிர் துளிர்க்கும் வலி

Image
 உன் கண்மலர் சிறிது வாடினாலும் என் மனப்பூ கருகி விடுகிறது....  அது காற்றில் கரைந்து சாம்பலானாலும் வேர் மட்டும் துளிர்விட்டுக்கொண்டே இருக்கிறது. மீண்டும் உன் வருகையை எதிர்பார்த்து பூத்துக் குலுங்குகிறது.  நீ சிரித்தால் நறுமணத்தை தென்றலுக்கு கொடுக்கிறது. உன் முகம் வாடினால் மீண்டும் கருகி விடுகிறது. கருகி, கருகி மீண்டும் உயிர்த்துளிர்க்கும் வலி நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை! இந்நிலை என் எதிரிக்கு கூட வரக்கூடாது! இதை மாற்ற முயற்சித்தும், மறக்க முயற்சித்தும் நான் தோற்றுக் கொண்டே இருக்கிறேன்... இதையெல்லாம் எப்படி புரியவைப்பேன் உன்னிடம்?  பிடிக்கவில்லை, என ஒற்றை வார்த்தையில் முடித்து விட்டாய்....! முடிந்தும், முடிக்க முடியாமல் தவிக்கிறேன் நான்....  காரணம் கேட்டால், உன்னை அதிகமாக காதலித்து விட்டேன் என்கிறார்கள் ...! இதிலிருந்து விடுபட ஒரு வழிதான் உள்ளது. ஒன்று சிரித்துவிடு இல்லையேல் காதலித்து விடு  உன்னிடம் மோட்சத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் உன் அன்பானவன்...

முத்துமுத்தான முகப்பருக்கள்

Image
 நாய்க்குட்டியை கொஞ்சும் என் ப்ரியமான நாயகியே... இந்த நாயகனை சுயம்வரம் நடத்தி சூடிக்கொள்ளக் கூடாதா?  உன் நிமிர் நடையில் என் திமில்களும் திமிருகின்றன... ஒரு புருவம் உயர்த்தி நீ பார்க்கும் ஓரப் பார்வையில் வெட்டி வீழ்த்துகிறாய் எனை வாழைமரமாய்! சைட் அடித்தால் முகப்பரு வருமாம்!  உன் கன்னத்தில் முத்துமுத்தான ஆறு முகப்பருக்கள்....  எப்படி வந்தது? நானும் யோசிக்கிறேன்.....  ஒருவேளை உன்னை அறியாமல் நீ என்னை சைட் அடிக்கிறாயோ!

உன் மேல குத்தம் இல்ல... நீ ஒன்னும் நானும் இல்ல!

Image
அம்பிகாவிற்கு 30 வயதிற்கு குறையாமல் இருக்கும். குண்டான உடல். ஒளி பொருந்திய கண்கள். தெய்வீகமான முகம். அவளின் கண்களை பார்த்துக்கொண்டு இருந்தால் போதும் பசியே எடுக்காது.  அப்படி ஒரு முகம். ஆனாலும், அவளின் கண்களிள்  ஏதோ ஒரு பரிதவிப்பு, வலி. அதாவது, நீண்ட நாள் பழகிய நண்பனின் துரோகம், உண்மையான அன்பை கொடுத்து ஏமாந்த வலி, நம்பிக்கை துரோகம், இது போன்று எளிதில் கடந்து வர முடியாத ஏதோ ஒரு வலியாகத்தான் இருக்க வேண்டும். அதை ராஜாராமன்  நன்கு அறிந்து கொண்டான். அவளை பார்த்த முதல் நாளே அவனுக்கு பிடித்துவிட்டது. தான் இதுநாள்வரை  எதிர்பார்த்துக் காத்திருந்த பெண் இவள்தானோ என்று தோன்றியது.  ஆனாலும், மத்திம வயதை நெருங்கி கொண்டிருக்கும் அவளுக்கு இதுநாள் வரை காதல் வராமலா இருந்திருக்கும் . கண்டிப்பாக காதல் வந்திருக்கும். இதுபோன்ற ஒரு பேரழகியை  குறைந்தது ஒரு பத்துபேராவது  துரத்தி , துரத்தி காதலித்து இருக்கக் கூடும். ஏன் அவளுக்கு திருமணமாகி குழந்தை இருந்தால் கூட ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. இவ்வாறே அவனின் மனதில் எண்ணங்கள் தோன்றியது.  ஒரு பெண் மீது காதல் வருவது தவறில்லை. இருப்பினும் அவளோடு வாழ்க்கை முழுவதும் பயண

ராட்சசி

Image
 அக அழகில்லாத அவளை எப்படி மறப்பேன்... உணர்வுகளோடு விளையாடி உயிர் வலியை உதாசீனப்படுத்துகிறாள்... வண்ணத்துப்பூச்சியாய் என் இதயத்தை வட்டமிட்டவள்... அவளின் வாட்டம் கண்டு சிறகுகளை வருடச் சென்றேன்... சிந்திவிட்டால் திராவகத்தை, பற்றி எரிகிறது என் இதயம்...  கண்ணீரால் அனைத்தும் இன்னும் அணைந்த பாடில்லை... புவியீர்ப்பு விசையாய் அவளின் இரு விழி ஈர்ப்பு விசையில் என்னை வீழ்த்தியவள்... இனி தனியாக பறந்தால் தானே ஈர்ப்புவிசை வேலை செய்யும்? நான் மறவேன், பறந்தால் வானூர்தி துணையுடன் தான் இனி பயணம்....