கொஞ்ஞ்ஞ்சி விட ஆசை!

என்னதான் உனக்கு பிடிக்கலையே தவிர, எனக்கு புடிச்ச கலர உனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!

சென்ற வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை எனக்கு பிடித்த கருப்பு நிறத்தை அடையாளப்படுத்தும் ஆடைகளையே அணிந்து வந்தாய்!

இருட்டின் வெளிச்சத்தை அதில் பயணிப்பவர்களால் மட்டுமே அறிய முடியும்... நீயும் அப்படித்தான், என் இருளை விலக்கி எனக்குள் ஒளி கொடுக்க வந்த தேவதை!

அதிலும், வெள்ளிக்கிழமை நீ அணிந்து வந்த கருப்பு நிற ஜீன்ஸ் பேண்ட்டும், டி-ஷர்ட்டும் அவ்ளோ அழகு!

உனக்கு திருஷ்டி கழித்து, நெட்டி முறித்து, உன் கன்னத்தை செல்லமாய் கிள்ளி கொஞ்ஞ்ஞ்சி விட ஆசை!

இதெல்லாம் நடக்கிற விஷயமா என்ன?

ஆனாலும், உனை மனசுக்குள் கொஞ்ச, என் இதய தேவதை (வேறு யாரு நீதான்)  ஒருபோதும் மறுப்பு தெரிவித்ததே இல்லை....

யார் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லிவிட்டு, உன் வலது புற கன்னத்தை மேஜை மீது வைத்து லேசாக தலை சாய்த்து, என் முகம் பார்த்த அந்த வினாடிகளை என் உயிருள்ளவரை மறக்க இயலாது....

உன் வெள்ளை மனதுக்குள் கருப்பு நிற மீன்களாய் என் நினைவுகள்?

உனக்கு பிடித்தோ, பிடிக்காமலோ உன் இதயத்தின் ஓர் ஓரத்தில் நானும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன்...

என் உள்ளம் மீண்டும் மீண்டும் சொல்கிறது....  

நீ எனக்கானவள் என்று! 

நான் என்னத்த சொல்ல....




Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி