சித்ரவதை செய்கிறாய்...
ஏனடி! எனை இப்படி சித்ரவதை செய்கிறாய்...?
எனை பற்றி சிந்திக்காத உன்னை சிந்திக்கவே கூடாது என நினைத்து உறங்கச் சென்றேன்...
விடியற்காலைப் பொழுது விடிந்தும், விடியாமலும் புலர,
அலாரம் அடித்ததுபோல் வந்துவிட்டாய் சிறு புன்னகையோடு!
உன் பெயரை கிறுக்கியபடி நின்றிருந்தேன்...
என்ன மாமா செய்கிறாய்? என்று நீ கேட்க,
உன் பெயரை எழுதிப்பார்த்தேன்... என்று நான் சொல்ல,
நக்கலாய் சிரித்தபடி நகர்கிறாய்...
நான் உன்னை துரத்துகிறேன்...
அப்போது மெல்ல, மெல்ல வருகிறது சுயநினைவு!
ப்ச்ச்...... கனவா!
கனவுகள் மீதெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது...
ஆனால், இந்த கனவு பலித்தால் நன்றாக இருக்கும் என்று என் மனம் சொல்லியது!
அதற்கு உன் மனம் ஒப்பவேண்டுமே....!
தெவிட்டாத தேன் சிந்தும் எழுத்துக்களை வாரி வழங்கக்கூடிய என் பேனா,
இன்று மூச்சுமுட்டி கிடக்கிறது உன் பெயரை எழுதியவாறு ....
Comments
Post a Comment