Posts

Showing posts from October, 2021

என்னங்க சார் உங்க சட்டம்

Image
 அன்பு கொண்டவனுக்கு சட்டம் தேவையில்லை..அன்பே மாபெரும் நாகரீகம்.. பொருளாதார அடிப்படையில் ஏழையாக உள்ள அனைத்து பிரிவு மக்களுக்கும் இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சொல்லியிருக்கும் படம் தான். என்னங்க சார் உங்க சட்டம். உயர்நிலை என்று சொல்லக்கூடிய பிராமணர்களில் ஒரு பிரிவான சவுண்டிபிராமணர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் வலிகள், அவர்களுடைய வாழ்வியல் சிக்கல் போன்றவற்றை முதன்முறையாக இந்த படம் பேசுகிறது. நந்தன்,நரேன், ஜேபி(தலித், பிற்படுத்தப்பட்ட வகுப்பு, உயர்நிலை) இந்த  மூன்று இளைஞர்களின் வாழ்க்கை சம்பவங்களையும் அவர்கள் படும் துயரங்களையும் எடுத்துக்கூறும் படமாக இந்த படம் அமைந்துள்ளது. படத்தின் முதல் பாதியில் கதாநாயகன் எந்த பொறுப்பும் இல்லாமல், உழைக்காமல் வாழ்க்கையில் சொகுசாக வாழ என்னென்ன முயற்சி செய்கிறான் என்பதை ரசிக்கும்படி கூறியிருக்கிறார்கள். பிராமணப்பெண்ணை அவன் காதலிக்கும் விதமும், இஸ்லாமிய பெண்ணை அவன் காதலிக்கும் விதமும் யதார்த்தம். இப்படத்தில் வரும் என் ஜீரக பிரியாணி பாடல் மனம் விரும்பும் பாடலாக அமைந்துள்ளது.  இஸ்லாமிய பெண்ணிடம் மனம் கொடுத்தபிறகு அவளுக்காக அவன் சுன்னத் செய்

இனி கனவுக்கும் காசு கொடுக்கனும்

Image
 பேஸ்புக் நிறுவனம் அதன் தாய் நிறுவனத்திற்கு மெட்டா என்று பெயர் சூட்டியுள்ளது. மெட்டா என்பதற்கு அப்பால் என்று பொருள். இனி பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் தாய் நிறுவனமாக மெட்டா செயல்படப் போகிறது என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க் கூறியுள்ளார். மெட்டாவெர்ஸ் என்பதன் சுருக்கமே மெட்டா என்று அழைக்கப்படுகிறது. அதாவது மெய்நிகருக்கு அப்பால். டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் அடுத்த வளர்ச்சியாக நீங்கள் கனவுகாணும் புதிய உலகிற்கு விர்ச்சுவலாக உங்களை அழைத்தும் செல்லும் தொழில்நுட்ப முயற்சியில் பேஸ்புக் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதாவது நிஜ உலகில் இருந்து கொண்டே நீங்கள் கனவு உலகத்தில் பயணிக்க முடியும். கனவு உலகத்தில் இருந்து கொண்டே நிஜ உலகில் உள்ள மனிதர்களோடு தொடர்பு கொள்ள முடியும்.      இன்னும் தெளிவாக சொல்லப்போனால், உங்களிடம் ஒரு கண்ணாடி அணிய சொல்வார்கள். உங்கள் செல்போனிலோ அல்லது கணினியிலோ தொடுதிரை வழியாக நீங்கள் விரும்பும் உலகத்திற்கு விரும்பும் மனிதரோடு செல்ல முடியும். நண்பர்களோடு நாம் சேர்ந்து கேம் விளையாடுகிறோம் அல்லவா? அது போன்று. இந்த மெட்டா தொழில்நுட்பத்தில் உங்கள் கனவு

பெண்ணே நீ வாழ்க

Image
ஒவ்வோர் சிற்பத்திற்கும் ஒவ்வோர் கதையுண்டு.என்னுடைய சிற்ப அழகி இவளா என்று மனம் பிசைகிறது! இவளோடு முன் ஜென்மத்தில்  வாழ்ந்தது போன்ற ஓர் நினைவு! அன்பின் இலக்கணமே,  அடி பேரழகு பெண்ணே!  என்னை கொள்ளை கொண்டவளே!  மின்னலை விட ஒளிப்பொருந்திய புன்னகை உடையவளே! உன் அழகினை புகழ்ந்து பாட தமிழில் அந்தம் போதாது. உன் கண்களே சூரியனாக,   நீ இமைதிறக்க, இவ்வூர் விடிகிறது. (சூரியன் உதித்து விட்டதாக மக்கள் எல்லாம் தம் பணியை தொடர்கின்றனர்.) பெண்ணே! நின் பாதம் தொட்ட மண் எல்லாம் மலராகி வர வேண்டும்! தென்றல் அது நீந்தி வர தந்தானா, பாடிவர கேட்பதற்கு நானோடினேன். நின்னையே அது சரிகம (அவள் எங்கே என்று)  கேட்டது, சம,.... சம,.... (சொல்லு,சொல்லு என்று) கெஞ்சியது. ஜுலி ஜுலி நீர் அது தில்லானா  பாடியது  பார்ப்பதற்கு நான் ஓடினேன். நின்னையே தக தை.. (தேடியது) என்றது  தக திமி ( அவள் எங்கே சொல்லு சொல்லு என்று கெஞ்சியது) கேட்டது. அங்கே ஒரு அழகான தோட்டம்,  அதில் நூறு வகையான பூக்கள்..   அந்த பூக்கள்  எல்லாம் என்னுள்ளே பூத்துக்குலுங்க,  அன்பாலே ஒரு பாடல் வடித்தேன்,  அப்பாடலை ஆறேழு பேர் மெச்சக்கூடும்.   ஏன், எல்லோரும் மெச்சினாலும்,  எ

சிரித்திடு மனமே சிரித்திடு!

Image
நம்பினோர் கைவிடும் போதும் நயவஞ்சகம் சூழும் போதும் சிரித்திடு மனமே சிரித்திடு! உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி உப்பிற்கு விசமிடும் போதும்  சிரித்திடு மனமே சிரித்திடு! தன் இச்சைக்காக இகழும் போதும் எச்சமாக புகழும் போதும் சிரித்திடு மனமே சிரித்திடு! புறமுதுகிட்டு குத்தும் போதும் சகுனியாய் வெட்டும் போதும் சிரித்திடு மனமே சிரித்திடு! எள்ளி நகையாடும் ஈனர்களையும், உயிரோடு பிணம் தின்னும் கழுகினையும் சிரித்து பொசுக்கிடு.. உன் சிந்தையில் எரித்து நசுக்கிடு!  உன் உயரம் நீ அறிவாய்! உன் உலகம் நீ உணர்வாய்! உப்பில்லா கஞ்சிட்டாலும், உணர்வோடு அகம் மகிழும் அமிர்தம் நீ! ஆயிரம் தடை வரினும்,   அகத்தில்லா இடர் வரினும்  அனைத்தையும் தகர்த்திடு..! புது வரலாறு தடம் பதித்திடு!

கண்ணீர் தொட்டி இல்லை..!

Image
இரண்டு உருண்டை விழுங்கவில்லை, இடிமின்னலுடன் வந்துவிட்டது  வானிலை அறிக்கை! இன்னும் 20 வினாடிகளில்  நினைவு எனும் மின்னல் வெட்டி, இதயத்தில் இடி இடித்து கண்ணீர் மழை பெய்யும்...    அது கன்னம், உதட்டின் வழியாக சென்று உள்ளங்கையை முத்தமிடும். இறுதியாக உடலில் சென்று சங்கமிக்கும்! வானிலை சொல்லி முடிக்கும் முன்பாகவே மழை வந்துவிட்டது! சேமிக்க கண்ணீர் தொட்டி இல்லை, மழையை அருந்தும் சக்கரவாகம் பறவைப்போல கண்ணீரில் கரைந்து உயிர்வாழ்கிறேன்! இது கானம் இசைக்கேட்கும் கண்ணீர் மழை!    அங்கேயும் மழை வரலாம்..!  கைகுட்டை, கண்ணாடியை தயாராக வைத்துக்கொள்ளுங்கள்..!

நானும் சீரழிகின்றேன்..!

Image
இன்ஸ்டா, பேஸ்புக்கின் கவர்ச்சி முகங்கள், கண்ணாடி முன் தோன்றும் கலையான முகத்தை வீழ்த்துகிறது! மினிமம் 2 பிரேக்-அப், 1-டேட்டிங்குடன் செல்லும் காதல், உள்ளூர பூத்துக்குலுங்கும் ஒத்த ரோசாக்களை வீழ்த்துகிறது! எலி பாய்ந்தோடு ஒற்றை செங்கல் வீடுகள் பூனை படுத்துறங்கும் மூன்று செங்கல் வீடுகளை வீழ்த்துகிறது!     இஎம்ஐ கார், வீடுகள் எல்லாம் அப்பனும், ஆத்தாளும் கட்டிய அழகு மாளிகையை வீழ்த்துகிறது! மனமில்லா மெகந்தி கோன்கள் மனம் இழுக்கும் மருதாணியை வீழ்த்துகிறது! மனம் மயக்கும் ஹேர்ஸ்பிரே வாசனை  மல்லிகை பூ மணத்தை வீழ்த்துகிறது! நயவஞ்சக நட்புக்கள் எல்லாம், நலம் விரும்பிய தோழர்களை வீழ்த்துகிறது! 5 நிமிட அவசர நூடுல்ஸ் அம்மாவின் கைமணத்தை வீழ்த்துகிறது!     திருப்தியில் சேவை நிறுவனங்கள் எல்லாம் மகிழ்ச்சியில் மனிதத்தை வீழ்த்துகிறது! தடுமாற மனமில்லா 90’ஸ் எல்லாம் தத்தளித்தே வீழ்கிறது! இவையெல்லாம் வீழ்த்தும் போது நான் மட்டும் மதில் மேல் பூனையாக பாதி கிரீமுடனும், பாதி பவுடருடனும்,  கண்ணாடியிலும், செல்போன் கேமராவிலும் பார்த்து பார்த்து சீரழிகின்றேன்..!

இந்த பொண்ணுங்க மனச புரிஞ்சிக்கவே முடியலையே

Image
இந்த பொண்ணுங்க மனச புரிஞ்சிக்கவே முடியலையே..அவங்க எப்போ எத நினைப்பாங்கன்னே சொல்ல முடியாது.. இப்படியா பட்ட புலம்பல்கள் ஆதி காலம் தொடங்கி இன்று வரை ஆண்களின் புலம்பல்களாகவே இருந்து வருகிறது. இதுப்பற்றி எழுதாத புலவர்கள் இல்லை. பாடாத கவிஞர்கள் இல்லை. இன்றும் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்..  அப்படித்தான் ஒருவள். அவள் பெயர் அம்மணி(பிராமணப் பெண்) அழகென்றால் அப்படி ஒரு அழகு! நிலாவிற்கு கை, கால் முளைத்த மாதிரி!     அம்மணிக்கு சிறுவயது முதலே இந்த கலாச்சாரம், பண்பாட்டில்  எல்லாம் நாட்டம் கிடையாது.  காரணம் அவளுக்கு  சிறுவயதில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்கள் .. அவற்றுள் சிலவற்றை சொல்கிறேன். 20 வயதில் ஒரு இளம்பெண், ஆற்றங்கரையில் 60 பேர் கூடி இருக்க கணவன் இறந்ததால் அவளுக்கு மொட்டை அடிக்கும் காட்சியை கான்கிறாள், அடுத்தப்படியாக அம்மை வந்து பாதித்த தன் சகப்பள்ளி தோழனை காரணம் கேட்காமலேயே தண்டிக்கும் ஆசிரியரை காண்கிறாள், மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருத்தி தன் ஆடையை கழற்றி விட்டு அம்மணமாக நிற்கும் போது அவளை சுற்றி வெறுமனே நீ புடவை கட்டவில்லை என்றால் உன்னை அடித்து விடுவேன் என்று  மிரட்டும் ஊர் மாமாக்களை காண்கி

இதுதான் நம்ம கலாச்சாரம்

Image
 நீங்க விவசாயியா? அப்படின்னா அறுவடை முடிந்த கையோட ஒரு தங்க நகை எடுத்திருங்க.. நீங்க செட்டிநாட்ட சேர்ந்தவங்களா இருந்தா ஒரு வைர நகை எடுத்திருங்க... தாய்மாமன்னு சும்மா சொல்லிக்கிட்டே இருந்தா போதுமா.. அது நிரூபிக்கனும்னா, ஒரு செயினோ இல்லையினா ஒரு மோதிரமோ உடனே போட்டிடுங்க... அப்பதான் உங்களை மதிப்பாங்க., தாய்மாமன்னு ஒத்துப்பாங்க..வெறுமனே தாய் மாதிரி பாசம் வச்சிட்டா மட்டும் போதாது! அப்புறம் சொல்ல மறந்துட்டேன், கன்னியாகுமரி காரவங்க ஒரு ஆரமோ இல்லையினா ஒரு நெக்லஸோ எடுத்திருங்க... கோயமுத்தூர் காரவங்க எப்போதும் அழகுதான், அவங்க தங்க நகையெல்லாம் வெயிட்டா போடமாட்டாங்க! அது அவுங்களுக்கெல்லாம் பிடிக்காது. அதனால ஒரு 4 கிராமிலையோ இல்லையினா ஒரு அரை பவுனுலையோ  ஏதாவது ஒரு தங்கம் வாங்கிடுங்க,.. தஞ்சாவூர் கார பொண்ணுங்க ஜிமிக்கியோ, கம்மலோ போட்டா அவ்ளோ அழகா இருக்கும். இதுல ஏதாவது ஒன்னு தங்கத்தில எடுத்திருங்க,.. மதுரைக் காரவங்க எப்போதுமே யாருக்குமே குறைஞ்சவங்க கிடையாது. அவங்களுக்கு மதுரை மீனாட்சியே துணை இருக்கனும்னா மரகதம் பதிச்ச ஒரு தங்கத்தை வாங்கிடுங்க.. அப்புறமென்ன? ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் கவர் பண்ணிட்டேன்

இரவின் அழகில் மாநகரம்!

Image
 ஏசி கார்களின் அணிவகுப்பு கலர் லைட்டுகளின் ஜொலிஜொலிப்பு மசாலா தடவிய மாமிசங்கள் லிப் லாக் தேவதைகள் கையேந்தும் காதலன்கள் கொசுக்கடியில் கோவிந்தன் தாத்தா, மரத்தடியில் சிமெண்ட் காலுடன் சிறார்கள் உறங்கப்போகும் உற்சாகத்தில் ஜொமைட்டோ ஊழியர்கள் குடிபோதையில் ரோட்டோரம் இளவட்டங்கள் பைக் ரைடில் சில பட்டாம்பூச்சிகள் மழைக்கும் வெயிலுக்கும் மரம் ஒதுங்கா மகாராணி தெருவோரம் ஐஸ்கிரீம் கடைகள் தூக்கத்தை தொலைத்த துரியோதனன்கள் குப்பை கிளறும் நாய்கள் தேம்பி அழும் தேவதாசுகள் முகம் காட்ட மறுக்கும் சந்திரன் இரவின் அழகில் மாநகரம்!

தனிமை கொஞ்சம் இனிப்பு! கொஞ்சம் உப்பு!

Image
 உயிர் தாகம் எடுத்திருக்கும், உள்ளூர துடித்திருக்கும், உடல் விட்ட ஆவிபோல  ஒப்பாரி தான் வைக்கும் தனிமை! நினைவுகள் தொடர்ந்து வர, நிம்மதி இழந்துவிட நீரில்லா மீன்போல, துடியாய் துடித்திருக்கும் தனிமை! கனவுகள் தொடர்ந்து வர, நினைவுகள் நீந்தி வர, காலம் அது கைக்கொட்டி சிரிக்கும் தனிமை! காவியம் பல நினைக்க வைக்கும், கலை நயம் ரசிக்க வைக்கும். கரும்பு சுவை என இனித்திருக்கும் தனிமை! தன்னைத்தானே செதுக்கி வைக்கும், தன்னைத்தானே சிரிக்க வைக்கும், தரணியில் உனக்கு யாரும் இல்லையென  தகைசார் கொள்ளும் தனிமை! வேட்கை தாகம் எடுத்திருக்கும், வீரம் அது செறிந்திருக்கும், இயற்கையோடு காதலிக்கும்  இனிமையான தனிமை! வலிக்கும் மருந்திடும், ஒரு வழியாக மனம் திருந்திடும், தனி அழுகை சுகமாகும், திட்டித்தீர்த்தாலும் திகைப்பான தனிமை! தனிமை கொஞ்சம் இனிப்பு! கொஞ்சம் உப்பு!

கண்ணதாசா வருவாயா?

Image
 கவியரசரே நீர் தொடாத பாகமில்லை, உன்னை தொட எனக்கு பாரமில்லை. உன்னை தொட எனக்கு கவி பாரமில்லை! உனைப்பற்றி எழுத ஓடோடி வந்தேன், பேனாவின் நுனி அது காகிதத்தை முத்தமிட உள்ளுக்குள் ஒப்பனையின் ஓங்கார சண்டை எதை எழுத, வார்த்தை வரவில்லை எனக்கு!   எட்டாத கனியெல்லாம் ஏட்டினில் வைத்தாய், எதுகையும், மோனையும் பாட்டினில் வைத்தாய், எண்ண இனிக்குதடா நெஞ்சம்! ஏகாந்தம் அதற்கென்ன பஞ்சம்! வர்ணனையில் உன் பாடல் கொஞ்சும், உனை வர்ணிக்க தேடுகிறேன் மஞ்சம்! கவி மணக்கும்! காதல் மனம் லயிக்கும்! இதழ் இனிக்கும், இன்பச் சுவை பிறக்கும்! அள்ளி அணைத்திட அரும்பசி தீர்த்திட, திகட்ட, திகட்ட தமிழ் தேன் பருக, அருஞ்சுவையோடு ஆறாத சுவை தந்தாய்! தித்திக்குதடா நெஞ்சம்! திகட்டாத தேனிலவு மஞ்சம்! உன்னோடு நான் அடைந்துவிட்டேன் தஞ்சம்! உன்பாட்டுக்குத்தான் இங்கு பஞ்சம்! காற்றோடு காற்றாகி, கவி உறங்கும் பாட்டாகி என்னோடு நீ கலந்தாய்! எனை அறியாமலே நான் உனை காதலிக்கிறேன். உன் மனம் தொடவே நானும் விழைகிறேன். உனக்கொரு தாசனாய்(கண்ணதாசனுக்கோர் தாசனாய்) கண்ணதாசா வருவாயா?

விளையாட்டை கொண்டாடுவது அபத்தமே.

Image
  நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. நண்பர்கள், சிஎஸ்கே ரசிகர்கள் என எல்லோருக்கும் மகிழ்ச்சி. ஏன் எனக்கும் கூட மகிழ்ச்சிதான்… ஆனாலும் நண்பர்களின் செயல் என்னை எள்ளி நகையாடவே செய்தது.  அனைவரது செல்போன் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸிலும் சிஎஸ்கே சாம்பியன் என போஸ்டர்கள். சரி தெரிந்த ஒரு விசயம் தான் அதை ஏன் கொண்டாட வேண்டும். இதனால் என்ன பயன்? பயன் ஏதும் இல்லைதான் ஆனாலும் ஏதோ நான் ஜெயிச்சது போல ஒரு உணர்வு. உண்மையிலேயே நீங்கள்தான் ஜெயித்தீர்களா? என்றால் 100%   இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.    பின்பு ஏன் கொண்டாடுகிறோம். இதுதான் நமக்குள் அவர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் உளவியல் சிக்கல். ஒரு பாட்டா செருப்பின் விலை ரூ.400 இருக்கும். ஆனால் அவர்கள் ரூ.399.99 காசுகள் என போட்டிருப்பார்கள். உண்மையில் நமக்கும் அது தெரியும். ஆனாலும் அது 3 எண்களில் இருப்பதால் 300 சொச்சம் தான் என்று மனம் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும். பணம் கொடுக்கும் போது ரூ.400 கொடுப்போம். அதுபோலத்தான் இந்த முரண்பாடும். இந்த வெற்றியின் மூலம் நம் வாழ்வில் ஏதேனும் மாற்றம் வந்துவிடும

நான் பிச்சைக்காரன்.

Image
 சுடர் ஒளி விடும் நெற்றியில் கருப்பு மையிட்டு, கருஞ்சாந்து பொட்டோடு, கமழாத சந்தனத்தை கரைத்து பூசினேன்.முடி சூடிய மன்னனாக தலையில் முண்டாசு தான் கட்டி கழுத்தில் முத்துமணி மாலையுடன் காவி உடை நான் தறித்தேன்! வாழ்ந்தா இவனை போல வாழனும் என்று சிலர்,இவனுக்கு எந்த கவலையும் கிடையாது என்று பலர்,இந்த மாதிரி ஆளாளதான் நாடு முன்னேற மாட்டேங்குது மற்றொருவர் கடுகாய் வெடிக்க,..காலையிலேயே கடுப்பேத்த வந்துவிட்டான்,, பெட்டிக்கடைக்காரர். முகம் திரும்புகையில், கடுகடுத்த முகத்தோடு கரும்புக் கடைக்காரர்! இவனைப்போல வாழ்ந்தா எப்படி இருக்கும் யோசனையில் சிலர், நிம்மதியா தூங்கலாம், நேரத்திற்கு சாப்பிடலாம்! ம்ம்,.. ஏக்கம் அது எட்டிப்பார்க்க!  நானோ .. நாய் அது புடைசூழ  வேட்டையன் ராஜாவை போல் நாலடி எடுத்து வைத்தேன்.      கதிரவன் தன்னொளி பாய்ச்சி கால் அதை கொப்பளிக்க செய்தான். ஒதுங்க மரமில்லை! மனமுமில்லை! தசரதன் அம்பெய்தி துடிக்கும் கண்ணில்லா பெற்றோரை இழந்த பிள்ளையாய்! நானும் பரிதவிப்போடு தோளில் நான்கு பைகளை சுமக்கிறேன். ஒன்றிலோ மணிமாலைகள் என் ஆபரணங்கள், மற்றொன்றிலோ அரும்பசிக்கு உதவும் அன்னம், இப்படி அடுத்தடுத்து நான்கு பை

அவன் என் காதலன்

Image
அன்பானவன்,அன்பின் அருளானவன், ஆசை அது பற்றறுக்கும் அரும்பானவன், கடலானவன், கடலின் கரையானவன், நான் கரையேற வந்துதவும் கலங்கரையானவன். அவன் என் சிவன்! மலையானவன்! பக்தருக்கு மழையானவன்! மண்ணோடு மண்ணாக மரமானவன். காற்றானவன், காற்றின் ஊற்றானவன், நீரானவன்! இளநீரானவன், உள்ளம் இனித்திடும், என் உயிர்தோழனவன், அவன் என் சிவன்!   பூவானவன், பூவில் தேனானவன்! தேன் குடிக்க பறந்தோடும் வண்டானவன்! கருவானவன், முத்தமிழின் கருவானவன்! கனியானவன்! முக்கனி சுவையானவன்! அவன் என் சிவன்! புரியாதவன்! ஐம்பொறியாதவன்! அகிலம் காத்திடும் அன்புத்தலைவனவன்! கண்ணீரானவன், கண் நீர் ஆனவன்! காலம் கடந்து நிற்கும் கவி ஆனவன்! அவன் என் சிவன்! இரும்பானவன், கரும்பில் எறும்பானவன்! எண்ணத்தில் வந்துதிக்கும் இனிப்பானவன்! இரவானவன், இருளின் ஒளியானவன்! இச்சைக்கு இச்சான எச்சானவன்! அவன் என் சிவன்! இசையானவன்! ஏழிசையானவன்! என்னோடு கலந்திட்ட இயல்,இசை ஆனவன்! எட்டாடதவன்! யாருக்கும் கிட்டாதவன்! பற்றற்ற நெஞ்சத்தில் ஒளி வீசும் பட்டானவன்! அவன் என் சிவன்!   கண்ணோடு கண்ணாக, கவி உறங்கும் பெண்ணாக, நான் காதல் கொண்டு நிற்கின்றேன்! களவாடிய பொழுதோடு, கற்கண்டு நினைவோட

கலங்காதே என் அம்மினி கலங்காதே!

Image
 பணம் மட்டும் பறித்திடுவார், பகல் வேசம் போட்டிடுவார், பற்றற்றும் இருந்திடுவார், பைத்தியமாய் திரிந்திடுவார்,.. மூட்டியே விட்டிடுவார், பகை அதை முருக்கேற்றியே விட்டிடுவார்... கலங்காதே என் அம்மினி கலங்காதே!      மத்தாப்பூ சிரிப்போடு,  மரிக்கொழுந்து பேச்சோடு, மதிவிசம் ஏற்றிடுவார். பதமாக, இதமாக, பதநீர் கள்ளாக,.. நஞ்சுமிழ்ந்த நாகமாய், நகங்கடித்தே துப்பிடுவார்.. நாய் கடியை மிஞ்சிடும், நா கடி கடிந்திடுவார்... கலங்காதே என் அம்மினி கலங்காதே! ஆதவனை இழிக்கின்றார், அறம் தவறி நடக்கின்றார்... அணலாகி கொதிக்கின்றார், அடுப்பங்கரியாகி நிற்கின்றார். கார்முகில் விரித்தாட, கண்முன்னே கரைந்தோட, காலனவன் வந்திடுவான்,.. கடுங்காவல் அதை தந்திடுவான்! கலங்காதே என் அம்மினி கலங்காதே!

நாற்புறமும் தெறிக்கின்றேன்!

Image
காதலர்கள் அரங்கேறும் கவித்துவமான இடம், கவி பல ஆயிரம் வந்து சொட்டும் ரசம், ஒற்றை அரிசியில் உலகத்தை நான் அடக்க.. உள்ளூர ஆனந்தத்தில் ஓரடி எடுத்து வைத்தேன்! கருவாடு..., கருவாடு.., கருத்தம்மா கூவி விற்க.. பதைபதைத்த நெஞ்சோடு பரிக்குட்டி கடக்கின்றான்! மருதாணி கையோடு, மையிட்ட கண்ணோடு, மஞ்சதாலி மினுமினுக்க, மஞ்சுளா தன் மன்னவன் தோள்பிடித்து முகம் சிவக்கிறாள்.. விலையில்லா சேதாரத்தில் விற்பனை அது தாராளத்தில், விலைமாதர் சரீர தங்கம் அதை விற்பனை செய்கின்றனர்! காலம் அது இனித்திடும், கனவுகள் மெய்ப்படும், கற்பனையில் கல்லூரி மாணவர்கள்! கலகலவென சிரிப்போடு கார்மேகன் அவன் கடல் பார்த்து கதைக்கின்றான்!         முப்பது ரூபாயில் முத்தான புகைப்படம்.(போட்டோகாரர் அழைக்கின்றார்) நான் மட்டும் தனித்திருக்க, நாயகனாய் நின்றிருக்க... நாயகனாய் நின்றிருக்க... தி(தெ)ரு நாயகனாய் நின்றிருக்க... நாற்புறமும் தெறிக்கின்றேன்! கண் இமைக்கும் நேரத்தில் என் கால் தொட்டு முத்தமிட! உடல் சிலிர்த்து விழிக்கின்றேன்!  சிரித்த முகத்தோடு, செவ்விதழ் தேன் குலுங்க! சிந்து பசுவின் பால் நுரையாய் கடல் அலையில் என்னவள் முகம்!

அரிது! அரிது!! அரிது!!!

Image
 அரிது! அரிது! மாலையிட்டவளை மறத்தல் அரிது! மனமாலையிட்டவளை மறத்தல் அரிது! கண் பேசும் காவியம் அரிது! காவியம் சொல்லும் ஓவியம் அரிது! ஓவியம் வரைய வண்ணம் தீட்டுதல் அரிது! வண்ணம் தீட்ட எண்ணம் தீட்டுதல் அரிது! என்னிய எண்ணத்தை நேசித்தல் அரிது! நேசித்த நெஞ்சத்தை யாசித்தல் அரிது! யாசித்த நெஞ்சத்தை வாசித்தல் அரிது! உள்ளூர ஒலிக்கும் ஓசை அரிது! ஓசைப் படித்திடும் ராகம் அரிது! ராகம் படித்திடும் பாவம் அரிது! பாவம் படித்திடும் பண் இனிது!     பண் அது இசைத்துவிட்டால், மதி அது மயங்கிவிடும்! மகரந்த சேர்க்கை நடந்துவிடும்! உடல் அது வற்றிவிடும்! உயிர் அதை தொட்டுவிடும்! வற்றிவிட்ட உடலை, தொட்டுவிட்ட உயிரை இசையவள் இரண்டற கலந்தப்பின் இசைமகளை மறத்தல் அரிது! அரிது!! அரிது!!!

மனிதாபிமானமில்லா மத்திய அரசு

Image
 மத்திய அரசு மீதான தமிழர்களின் கோபம் நியாயமானது தான் என்பதை நிரூபிக்கும் விதமாக மீண்டும் ஒரு அருவருக்கத்தக்க செயலை மத்திய அரசு செய்துள்ளது. இந்திய குடிமைப்பணிக்கான முதன்மை தேர்வு தொடர்பான அறிக்கைகள் ஆங்கிலத்திலோ, தமிழிலோ இல்லாமல் இந்தியில் இடம்பெற்றிருந்தது.  நாடு முழுவதும் 73 மையங்களில் இன்று இத்தேர்வு  நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் சென்னை,கோவை, மதுரை,திருச்சி, வேலூர் என 5 இடங்களில் நடைபெற்றது. தமிழகத்தை சேர்ந்த சுமார் 30,000 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். இதில் பெரும்பாலான மையங்களில் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்,அவர்களின் இருப்பிடம் குறித்த அறிக்கைகள் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ இல்லாமல் இந்தியில் இடம் பெற்றிருந்தது.   திட்டமிட்டு மாணவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அறிவிப்பு பலகைகள் இந்தியில் இடம்பெற்று இருந்தன.  இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில்  சமூக வலைதளங்களில் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.           இரண்டு நாட்களுக்கு முன்பு அஞ்சல் அலுவலகங்களில் பணம் அனுப்பும்  விண்ணப்பத்தில்(money order form)தமிழ் புறக்கணிக்கப்பட்டு இந்தியில் மட்டும

ஒரு கவிஞனின் மன உளைச்சல்!

Image
நண்பன் சொன்னான்.. கவிஞன் என்றால் மன உளைச்சலில் இருப்பவன் என்று! ஆம் உண்மைதான்..! அன்பில்லா மனிதரை காணும் போதும்  அறம் அது பிறழும்போதும்  மனம் அது பதைபதைக்கிறது! ஆணவம் ஆர்பரிக்கும் போதும் அன்பினை அத்துமீறும் போதும்.. மனம் அது பதைபதைக்கிறது! அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் வராத போதும், ஆர்யன் கான் போன்று அப்பா இல்லாத அனாதையாய் குழந்தைகளை  பார்க்கும் போதும், மனம் அது பதைபதைக்கிறது!           இதய வீணை அறுபடும் போதும்.. இதழ்மொழி மவுனத்தின் போதும் .. மனம் அது பதைபதைக்கிறது! ஈன்றவளை இழிநிலைக்கும் தள்ளும்போதும், ஈகையில்லா பெருமகனை இன்னுயிர் தாங்கும் போதும், மனம் அது பதைபதைக்கிறது! உத்தமர் போல் நடித்து ஊருக்குத்தான் உபதேசம் தனக்கில்லை எனும் போது, மனம் அது பதைபதைக்கிறது! எல்லையில்லா வான்மகள் எனக்கு மட்டும்தான்  சொந்தம் என எலான் மஸ்க் கூறும் போதும்  மனம் அது பதைபதைக்கிறது! ஏணி போல் ஏற்றி விட்டவரை எட்டி உதைக்கும் போது, மனம் அது பதைபதைக்கிறது! புஷ்பவதியவள் பூப்பெய்தி விட்டாள் என்று  புண்ணியக் கதைக்கூறி புறந்தள்ளி ஒதுக்கும் போது மனம் அது பதைபதைக்கிறது!           சாதிமோதலின் போதும் மதமோதலின் போதும், மரணம் அ

கடிதம்

Image
 கண்பட்டார் நெஞ்சம் அது  புண்பட்டு பூத்திருக்க.. இளைப்பாரும் அருமருந்தாய்  இனியவளே நீ அமர்ந்தாய்! எண்ணிய எண்ணமெல்லாம்  எழுத்தினில் தான் உதிக்க. பாமாலை நான் தொடுக்க  பூமாலை ஏந்திச் சென்றாய்! தூரத்து சொந்தம் எங்கோ . துயர் கொண்ட சேதியினை.. தூக்கிய தூதுவனாய்  தும்பியே துயில் கொண்டாய்!                ஈன்றவர் உனை மறந்தாலும்  ஈகையின் பெரும் சிறப்பாய்.. இதயத்தை நீ நனைத்தாய்! நான் மட்டும் கொஞ்சி விளையாடும்   நாயகி நீ ஆனாய்! கனிணி கண் இமைக்க என்  கண் முன்னே எரிந்து போனாய்! எனை எறிக்க யாருமில்லை என்றே எஸ்எம்எஸ்-ல் பிறந்து வந்தாய்! இமோஜ் ஸ்மைலியுடனே இன்று  எனை பார்த்து புன்னகைக்கிறாய்! என்னோடு நீ இருந்த நினைவுகள் அத்துணையும் என்னுள்ளே வைத்திருக்கிறேன் இன்றளவும் பொக்கிஷமாய்! (உலக கடித தினமாம் இன்று, கடிதத்தை நினைத்தேன் கிறுக்கி விட்டேன்)

சாயாத தோணி

Image
 பெண் என்பவள் ஒரு புரியாத புதிராகவே இருக்கிறாள். தான் கொண்ட கொள்கை தவறு என தெரிந்தும் கூட அதை நிலைநிறுத்த தான் கொண்ட உறுதிப்பாட்டில் உறுதியாக இருக்கிறாள். விளைவு ஆண்களுக்கு சாதகமாகவும், தனக்கு பாதகமாகவும் போய் விடுகிறது. அந்த வகையில் பெண்ணின் வாழ்வை மையப்படுத்தி வந்த ஒரு திரைப்படம்   என்னை மிகவும் பாதித்த ஒரு திரைப்படம். 30 வயதை கடந்த பெண்ணொருத்தி  (அழகு என்றால் அவள் தான் அப்படி ஒரு அழகு, பார்த்தாலே மனம் பரவசமடைந்து விடும். ஆனாலும் தான் கொண்ட அழகை அவள் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை). பல கனவுகளுடன் திருமண ஏக்கத்தோடு இருந்தாலும் தன் குடும்பத்திற்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்து கொண்டிருக்கிறாள். அவளுக்கு ஒரு தம்பி, இரண்டு தங்கைகள். அவர்கள் திருமண பருவத்தை அடைந்த உடனே அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கிறாள்.                      வழக்கமாக ஒவ்வொருவர் திருமணத்தின் போதும் (தம்பி, தங்கைகள்) அக்கா நீ இருக்கும் போது நான் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என்று கேட்பார்கள். அந்த வார்த்தைகள் உதட்டில் இருந்து மட்டுமே வருமே தவிர உள்ளத்தில் இருந்து வராது. அது அவளுக்கும் தெரியும்.  தந்தை இல்லாத குடு

அண்ணனுக்கு ஓர் கடிதம்

Image
 அன்பின் அழகனே! அணில் மொழி அமுதனே! இதயத்தின் இனியனே! இன்பம் எழில் ஆடும் தோழனே!  வேங்கை மைந்தனே! எங்கள் வெற்றிச்செல்வனே! பெருமை மிகு பேரண்ணா... பெருந்தமிழ்நாடு தவிக்கிறது... அங்கயற்கண்ணி அருள் மொழியில் அமுதம் பெற துடிக்கின்றாய், நஞ்சுண்ட நாயகனாய், நயம் இடறி தவிக்கின்றாய்! உனை ஆட்கொண்ட உமையவளாய் நான் இங்கு உளமாறி திளைக்கின்றேன்...!                        புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால்  அந்த புண்ணியம் கண்ணனுக்கே! போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும், போகட்டும் கண்ணனுக்கே..பழி போகட்டும் கண்ணனுக்கே...! கண்ணனே காட்டினான், கண்ணனே சாட்டினான்! கண்ணனே கொலை செய்கின்றான்! கண்ணன் மனது கல் மனதென்றோ... காண்டீபம் நழுவ விட்டாய்..               வேண்டாம் விஜயா, விட்டுவிடு நஞ்சை வந்து தொட்டு விடு நெஞ்சை. நினைவில் கொள்! இங்கு உனைக்காக்கும் கர்ணனும் நானே..! அந்த கண்ணனும் நானே..!

கிறங்கி கிடக்கிறேன்..

Image
வட்ட நிலவெடுத்து விட்டத்திலே நாண் அமைத்து இணையா தண்டவாளமாய், இருப்புருவ மத்தியில்.. ஓடி வரும் ரயில் ஏறி ஊருக்கு போக நின்றேன். ஆடி அசைந்து வரும் அழகு ஆரூர் கடந்து வரும், அகிலம்  அரவணைக்கும், அன்பு ரயிலில் நான் ஏற அனுமதி இல்லையாம்! காரணம் நான் கேட்க, பேரன்பு பெற வேண்டுமாம், பெருமை மிகு சீர் வேண்டுமாம், பார் புகழ் மனம் வேண்டுமாம், பாரதி பலம் வேண்டுமாம்!  ஆம் உண்மைதான்! அன்பு ரயில் ஏற அனைத்தும் பெறவேண்டும். நானோ.. தோற்ற மயக்கத்தில் கள்ளுண்ட வண்டாய், கிறங்கி கிடக்கிறேன்.

வசந்த மாளிகை

Image
 சமீபத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் அக்டோபர் 1-ம் தேதி கொண்டாடப்பட்டது. சிவாஜி பற்றிய நினைவலைகளை நண்பருடன் பகிர்ந்து கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு யோசனை சிவாஜி நடித்த படங்களில் ஏதேனும் ஒன்று பார்க்கலாம்  அப்படின்னு, என்னப்படம் பார்க்கலாம் என்று நண்பரிடம் கேட்டபோது அவர் வசந்த மாளிகை படத்தை பரிந்துரை செய்தார். இன்றைய லவ் புரோபோஷல்களை எல்லாம் மிஞ்சிய ஒரு லவ் புரோபோஷல் அது,  பாசத்திற்கு ஏங்கும் பணக்கார வாலிபன் ஒருவன் காதல் வயப்பட தன் காதலை காவியமாக்க முனைகிறான். அதன் விளைவாக வசந்த மாளிகை கட்டி,. வண்ண விளக்குகள் அலங்கரித்து,(ஒரு குட்டி தாஜ்மஹால் போன்று) தன் காதலை தெரிவிக்கிறான். காதலை ஏற்றுக்கொண்ட காதலி சம்மதம் தெரிவிக்க காதல் மையலாகிறது..                           பாடி வரும் வண்ண நீரோடை உன்னை பாத பூஜை செய்து வர.. ஓடிவரும் வண்ண ஓடையிலே உன் உள்ளமும் சேர்ந்து மிதந்து வர.. காதல் ரசம் சொட்ட, சொட்ட காதல் அரங்கேறுகிறது.  கலைரசனை கொண்ட எந்த ஒரு ரசிகனும் அந்த பாடல் வரிகளுக்கு அடிமையாகி போவான்.. அப்படிப்பட்ட பாடல் வரிகள் கண்ணதாசனும், பஞ்சு அருணாச்சலமும் தங்கள் கவித்துவத்தால் நம்மை