நானும் சீரழிகின்றேன்..!

இன்ஸ்டா, பேஸ்புக்கின் கவர்ச்சி முகங்கள்,

கண்ணாடி முன் தோன்றும் கலையான முகத்தை வீழ்த்துகிறது!

மினிமம் 2 பிரேக்-அப், 1-டேட்டிங்குடன் செல்லும் காதல்,

உள்ளூர பூத்துக்குலுங்கும் ஒத்த ரோசாக்களை வீழ்த்துகிறது!

எலி பாய்ந்தோடு ஒற்றை செங்கல் வீடுகள்

பூனை படுத்துறங்கும் மூன்று செங்கல் வீடுகளை வீழ்த்துகிறது!

   


இஎம்ஐ கார், வீடுகள் எல்லாம்

அப்பனும், ஆத்தாளும் கட்டிய அழகு மாளிகையை வீழ்த்துகிறது!

மனமில்லா மெகந்தி கோன்கள்

மனம் இழுக்கும் மருதாணியை வீழ்த்துகிறது!

மனம் மயக்கும் ஹேர்ஸ்பிரே வாசனை 

மல்லிகை பூ மணத்தை வீழ்த்துகிறது!

நயவஞ்சக நட்புக்கள் எல்லாம்,

நலம் விரும்பிய தோழர்களை வீழ்த்துகிறது!

5 நிமிட அவசர நூடுல்ஸ்

அம்மாவின் கைமணத்தை வீழ்த்துகிறது!

   


திருப்தியில் சேவை நிறுவனங்கள் எல்லாம்

மகிழ்ச்சியில் மனிதத்தை வீழ்த்துகிறது!

தடுமாற மனமில்லா 90’ஸ் எல்லாம் தத்தளித்தே வீழ்கிறது!

இவையெல்லாம் வீழ்த்தும் போது நான் மட்டும் மதில் மேல் பூனையாக பாதி கிரீமுடனும், பாதி பவுடருடனும், 

கண்ணாடியிலும், செல்போன் கேமராவிலும் பார்த்து பார்த்து சீரழிகின்றேன்..!

Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி