கண்ணதாசா வருவாயா?

 கவியரசரே நீர் தொடாத பாகமில்லை,

உன்னை தொட எனக்கு பாரமில்லை.

உன்னை தொட எனக்கு கவி பாரமில்லை!

உனைப்பற்றி எழுத ஓடோடி வந்தேன்,

பேனாவின் நுனி அது காகிதத்தை முத்தமிட

உள்ளுக்குள் ஒப்பனையின் ஓங்கார சண்டை

எதை எழுத, வார்த்தை வரவில்லை எனக்கு!

 



எட்டாத கனியெல்லாம் ஏட்டினில் வைத்தாய்,

எதுகையும், மோனையும் பாட்டினில் வைத்தாய்,

எண்ண இனிக்குதடா நெஞ்சம்!

ஏகாந்தம் அதற்கென்ன பஞ்சம்!

வர்ணனையில் உன் பாடல் கொஞ்சும்,

உனை வர்ணிக்க தேடுகிறேன் மஞ்சம்!

கவி மணக்கும்! காதல் மனம் லயிக்கும்!

இதழ் இனிக்கும், இன்பச் சுவை பிறக்கும்!

அள்ளி அணைத்திட அரும்பசி தீர்த்திட,

திகட்ட, திகட்ட தமிழ் தேன் பருக,

அருஞ்சுவையோடு ஆறாத சுவை தந்தாய்!


தித்திக்குதடா நெஞ்சம்!

திகட்டாத தேனிலவு மஞ்சம்!

உன்னோடு நான் அடைந்துவிட்டேன் தஞ்சம்!

உன்பாட்டுக்குத்தான் இங்கு பஞ்சம்!

காற்றோடு காற்றாகி, கவி உறங்கும் பாட்டாகி

என்னோடு நீ கலந்தாய்!

எனை அறியாமலே நான் உனை காதலிக்கிறேன்.

உன் மனம் தொடவே நானும் விழைகிறேன்.

உனக்கொரு தாசனாய்(கண்ணதாசனுக்கோர் தாசனாய்)

கண்ணதாசா வருவாயா?


Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி