டிஜிட்டல் மருத்துவ அட்டை (DIGITAL HEALTH CARD)

 டிஜிட்டல் மருத்துவ அட்டை (DIGITAL HEALTH CARD)


டிஜிட்டல் மருத்துவ அட்டையை(DIGITAL HEALTH CARD) பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ளார். இதன் மூலம் இந்தியாவின் மூலையில் உள்ள எந்த ஒரு மருத்துவமனைக்கு சென்றாலும்  மருத்துவ ஆவணங்களை எடுத்து செல்ல தேவையில்லை. அட்டையை காண்பித்து மருத்துவம் செய்து கொள்ளலாம்.


                 


டிஜிட்டல் அட்டையை பெறும் முறை:  டிஜிட்டல் அட்டையை பெற  ndhm.gov.in இணையதளத்திற்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன் ஒரு ஓடிபி அனுப்பப்படும், இதன் மூலம் நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம். இந்த டிஜிட்டல் மருத்துவ அட்டையில் நோயாளியின் தகவல்கள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும். நீங்கள் விரும்பினால், உங்கள் மருத்துவ ஆவணங்களை உள்ளீடு செய்ய முடியும். இதற்காக லாக்கர் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. தேவையெனில் NDHM ஹெல்த் ரெக்கார்ட்ஸ் செயலியை' ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


இந்த டிஜிட்டல் மருத்துவ அட்டையின் சாதகங்கள் என்ன? பாதகங்கள் என்ன? இதுப்பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு


டிஜிட்டல் மருத்துவ அட்டையின் சாதகங்கள்: இந்த டிஜிட்டல் மருத்துவ அடையாள அட்டையில் நோயாளியின் முழுமையான மருத்துவத் தரவை வைத்திருக்க, மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் மருத்துவர்கள், மத்திய சர்வரோடு இணைக்கப்படுவார்கள். மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் மருத்துவர்களும் இதில் பதிவு செய்யப்படுவார்கள்.

நோயாளியின் ஒப்புதலுடன் உங்களுக்குத் தெரிந்த ஒருவரின் உடல்நலப் பதிவுகளையும் நீங்கள் நிர்வகிக்க முடியும். இதில் நீங்கள் சிகிச்சைப் பெற்ற மருத்துவமனை, உங்களுக்கு அளிக்கப்பட்ட  சிகிச்சைகள் உங்களின் உடல் நலம் குறித்த தற்போதைய நிலை என்பதை சுலபமாக அறிய முடியும்.

டிஜிட்டல் மருத்துவ  அட்டையின் பாதகங்கள்: டிஜிட்டல் மருத்துவ  அட்டையில் சாதகத்தை விட பாதகங்களே அதிகம் உள்ளது.  மருத்துவ தகவல்களை சைபர் கிரைம் மோசடி மூலமாக எண்ணற்ற தனியார் மருந்து நிறுவனங்கள் திருட வாய்ப்புள்ளது. இதுவரை பொருளாதார ரீதியாக மட்டுமே  சுரண்டப்பட்டு வரும் மக்களின் வாழ்வியல் இனி தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கையும் கேள்விக்குள்ளாக்கும். வாழ்வதே பெரும் பாக்கியம் என நினைக்கும் சூழ்நிலை உருவாகக் கூடும்.

                


பிட்கேட்ஸின் புகழாரம்:  உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் பிரதமர் மோடி அறிவித்துள்ள இந்த ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது இந்த டிஜிட்டல் மருத்துவ  அட்டையின் பாதுகாப்பு அம்சம் குறித்த சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது. கொரோனாவிற்கு வேக்சின் கண்டுபிடிக்கப்பட்ட போது இந்தத் தொழில்நுட்பத்தை இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு அளிக்கப்பட வேண்டும் எனக் கருத்து நிலவிய போது பில் கேட்ஸ் இதற்குக் கடுமையாக மறுப்பு தெரிவித்திருந்தார். இதற்கு காரணம் பைசர் நிறுவனத்தில் பில்கேட்ஸின் BMGF நிறுவனம் முதலீடு செய்துள்ளது என்று கூறப்பட்டது. 

பில்கேட்ஸின் “பில் அன்ட் மிலண்டா கேட்ஸ் அறக்கட்டளை” இந்திய அரசுடன் இணைந்து உயிரி தொழில்நுட்பத்துறையில் செயல்பட்டு வருகிறது. இதற்கு ஐசிஎம்ஆர் மற்றும் இந்திய அறிவியல் ஆலோசகர் ஆகியோர் தேவையான அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.

மருத்துவம் சார்ந்த நிதி நிலை அறிக்கை: இந்த நிதியாண்டில் சுகாதாரம் மற்றும் உடல்நலம் சார்ந்த சேவைகளுக்காக 2.23 லட்சம் கோடி ரூபாய் செலவிட இந்திய அரசு திட்டமிட்டுள்ளது எனவும்  காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான உச்சவரம்பு 49 சதவிகிதத்தில் இருந்து 74 சதவீதமாக உயர்த்தப்படுகிறது எனவும் செய்தி வெளியானது. இந்த நிதிநிலை அறிக்கையுடன் டிஜிட்டல் மருத்துவ அடையாள அட்டையை நாம் தொடர்பு படுத்தியே பார்க்க வேண்டி உள்ளது.

              



இந்தியாவில் பாதுகாப்பு அம்சம்: இந்தியாவில் தரவுகளை பாதுகாக்க சட்டம் எதுவும் இல்லை.  தரவு பாதுகாப்பு மசோதா 2019 மட்டுமே உள்ளது. இதுவும் தற்போது நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனையின் கீழ் உள்ளது. சட்டமே இல்லாதபோது, மக்களின் சுகாதாரத் தரவு எவ்வாறு பாதுகாக்கப்படும். ஒரு சட்டம் இருந்தால், அபராதம் அல்லது தண்டனை விதிக்கமுடியும். 

                       


தொல்லை தரும் நிறுவனங்கள்:  ஆதார் தரவுகள் அனைத்தும் பத்திரமாகவே உள்ளது. அதை யாரும் திருட முடியாது என மத்திய அரசு கூறி வந்தாலும், இன்றும் டெபிட் கார்டு வேண்டுமா? லோன் வேண்டுமா? என்று வங்கிகள் மக்களின் வருமானத்தை குறிவைத்து போன் செய்கின்றன. மறுபுறம் ஏதேனும் கூகுளில் தேடி விட்டு சமூக வலைதளம் சென்றால் நாம் எதை தேடினோமோ அது சார்ந்த விளம்பரங்கள் உங்கள் நம் கண்முன் திரையில் தோன்றுகிறது. 


இது போன்ற சூழலில் ஒவ்வொருவரின்  தனிப்பட்ட மருத்துவ ஆவணங்கள் பன்னாட்டு மருத்துவ நிறுவனங்களின் கைகளில் சிக்கும் நிலை ஏற்படுமாயின் மக்கள் அனைவரும் நோயாளியாக்கப்படுவார்கள். ஏற்கனவே உலக மயமாதல் என்ற பெயரில் ஆரோக்கிய உணவுகளை அழித்து பீட்சா, பர்கர் போன்ற உணவுகளை பழக்கப்படுத்தி ஒபிசிட்டியை உருவாக்கியுள்ளனர். மேலும் மக்களை நோயாளிகளாக்க 24*7 என்ற வகையில் உணவுகளை ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. ஒரு குழந்தை பெற்று கொள்வதே பெரும் சாதனையாக உள்ள இந்த காலக்கட்டத்தில் இந்த டிஜிட்டல் மருத்துவ அட்டை மேலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது...



Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி